கான் யூனிஸில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்: 15 பேர் பலி மேலும் 30 பேர் காயம
தெற்கு காசா நகரமான கான் யூனிஸ் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலைகள்களை ஆரம்பித்துள்ளன.
குடியிருப்பாளர்களுக்கு புதிய வெளியேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்ததன் பின்னர் சுமார் 30 தளங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளன.
ஹமாஸ் தலைவரின் படுகொலையின் பின்னர் அஞ்சப்படும் பதிலடித் தாக்குதலுக்கு மத்தியில் பிராந்திய பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் இஸ்ரேலையும் ஹமாஸையும் அழைத்துள்ளனர்.
கெய்ரோ அல்லது தோஹாவில் உத்தேச பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள இஸ்ரேல் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனாலும், ஹமாஸ் இதுவரை பதிலளிக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா நகரின் கிழக்கில் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இரண்டு பாடசாலைகள் மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 15 பேர் உயிரிழந்துதுடன் 30 பேர் காயமடைந்தனர்.
கடந்த வருடம் முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஆயிரத்தை அண்மித்ததுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்தது.