தமிழ் பொது வேட்பாளர் மிகவும் மோசமான தோல்வியை சந்திப்பார்: முட்டாள்த்தனமான முடிவு என்கிறார் சுமந்திரன்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளமை முட்டாள்தனமான முடிவு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.
இது முட்டாள்தனமான முடிவு.தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தும் செயலே இது.
தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு செய்தியை வெளிப்படுத்துவதற்கான தேர்தல் இதுவல்ல. மாறாக சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்புமல்ல.
இவ்வாறு அவர் தனது X தள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் தொலைக்காட்சி நேர்காணலிலும் இதுபற்றி சுமந்திரம் எம்.பி. கருத்து வௌியிட்டிருந்தார்.தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தோல்வியடைவார்.தமிழ் பொது வேட்பாளர் மிகவும் மோசமான தோல்வியை சந்திக்க நேரிடுவதால், இதுவொரு முட்டாள்தனமான முடிவு. இதை, வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுடன் இலங்கை தமிழரசுக்கட்சி பேசியுள்ள தாகவும்,விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் சுமந்திரன் எம்.பி.தெரிவித்திருந்தார்.