கனடா ரொறொன்ரோவில் வீடு விற்பனை வீழ்ச்சி: வெளியானது புள்ளிவிபரங்கள்
கனடா – ரொறொன்ரோ மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்தில் வீடு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் வாரியத்தின் (TRREB) தரவுகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.
இதன்படி, ஜூன் மாதத்தில் காணப்பட்ட 3.2 வீத விற்பனை ஜூலை மாதத்தில் 1.7 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கான சராசரி விலைகள் கடந்த மாதம் 0.2 வீதம் அதிகரித்து 1.13 மில்லியன் கனேடிய டொலர்களாக பதவாகியுள்ளது.
இது கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் அதிகூடிய விலையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா வங்கியின் வட்டி குறைப்புக்கு பின்னர் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் வீட்டு விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கனடா மத்திய வங்கி அதன் முக்கிய கொள்கை விகிதத்தை இரண்டு முறை குறைத்துள்ளது, வட்டி விகிதங்களை ஐந்து வீத்தில் இருந்து 4.5 வீதமாக குறைத்துள்ளது.
எவ்வாறாயிகும், பணவீக்கம் தொடர்ந்தும் குறையும் பட்சத்தில் விகிதக் குறைப்பு சாத்தியமாகும் என கனடா வங்கியின் ஆளுநர் டிஃப் மாக்லெம் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம், விகிதக் குறைப்பு முடிவிற்குப் பிறகு, பாங்க் ஆஃப் கனடா கவர்னர் டிஃப் மாக்லெம், பணவீக்கம் தொடர்ந்து குறையும் பட்சத்தில், மேலும் விகிதக் குறைப்பு சாத்தியமாகும் என்று கூறினார்.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், கடந்த மாதம் வீடு விற்பனை 3.28 வீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் டொராண்டோ பெரும்பாகத்தில் 5,391 வீடுகள் விற்பனையாகியுள்ளன.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்கப்பட்ட 5,220 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது 3.3 சதவீதம் அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.