பிரித்தானியாவில் வெடிக்கும் வன்முறை: 30 இடங்கள் இலக்கு – ஆபத்தில் புகலிட கோரிக்கையாளர்கள்
பிரித்தானியா மற்றுமொரு பாரியளவிலான போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர வலதுசாரி இனக் கலவரங்கள், பல நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இனவெறி கும்பல் சுமார் 30 இடங்களை குறிவைக்கக்கூடும் என தீவிர வலதுசாரி தகவல்தொடர்புகளை கண்காணிக்கும் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குடியிருப்பு பகுதிகள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறலாம் என நாடு முழுவதும் புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 400 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் வன்றை சம்பவங்களுக்கு முகங்கொடுக்க பொலிஸார் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இனவெறிக்கு எதிராக “குடியேற்ற வழக்கறிஞர்கள், அகதிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் புகலிட ஆதரவு மையங்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும்” என முக்கிய ஆலோசகர் ஒருவர் பிரித்தானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக்குத் தாக்குதலின் போது சிறுமிகள் மூவர் உயிரிழந்தனர்.
தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் முஸ்லீம் என்றும் புலம்பெயர்ந்தவர் என்றும் வெளியான கருத்துத்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது.