சஜித் அணிக்கும் தொடரும் ஆதரவு; மூத்த கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்னவும் இணைந்தார்
மூத்த கிரிக்கெட் வீரரும் தற்போதைய பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருமான ஹஷான் திலகரத்ன மற்றும் அவரது மனைவி அப்சாரி இருவரும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.
ஹஷான் மற்றும் அவரது மனைவியின் ஆதரவு இது வரை ராஜபக்சர்களுக்கு இருந்தது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்த அப்சாரி சிங்கபாஹு திலகரத்ன, பின்னர் 2021ஆம் ஆண்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.
ஹஷான் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது அப்சாரி சிங்ஹபாகு திலகரத்ன இவ்வாறு தெரவித்திருந்தார்.
“அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான அழிவுகளைச் செய்யக் காத்திருந்தது.
இதனால் வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் கூட இலங்கைக்கு வர அஞ்சும் நிலை ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்ச இந்த பயங்கரவாத அச்சத்தைப் புரிந்துகொண்டு எமக்கு நாட்டைக் காப்பாற்ற பாடுபட்டார்.
எனினும், நல்லாட்சியின் காரணமாக நாடு மீண்டும் அராஜக நிலைக்குத் திரும்பியுள்ளது.
நாட்டை விடுவிக்க சிறந்த சந்தர்ப்பம் வந்துள்ளது.
இந்த நேரத்தில் நாட்டில் உள்ள அனைவரும் மகிந்த ராஜபக்சவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் பலம் கொடுக்க வேண்டும்.
இல்லையேல் நாடு எங்கு விழும் என்று கூற முடியாது.” என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.