“எனது புகைப்படத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள்“; ஊடகவியலாளருடன் சுவாரஷ்ய உரையாடலில் ஈடுபட்ட மகிந்த
தனது புகைப்படத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி கேகாலை, பதுளை, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இன்று மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
ஊடகவியலாளர் – இன்றைய அரசியல் நிலை எப்படி இருக்கிறது?
மகிந்த ராஜபக்ஷ – மிகவும் நல்ல நிலைமைதான்.
ஊடகவியலாளர் – தற்போதைய ஜனாதிபதி உங்களுடன் பேசினாரா? அவர் தனித்து செயற்படுவாரா?
மகிந்த ராஜபக்ச – நாங்கள் கட்சியாக தனித்துச் செல்கிறோம். அனைத்து பேச்சுவார்த்தைகளும் தற்போது முடிந்துள்ளன.
ஊடகவியலாளர் – ஒரு வேட்பாளர் நிச்சயமாக போட்டியிடுவாரா?
மகிந்த ராஜபக்ஷ – ஆம், நிச்சயமாக.
ஊடகவியலாளர் – ஜனாதிபதி தேர்தலுக்காக தற்போதைய ஜனாதிபதியின் பின்னால் போக மாட்டீர்களா?
மகிந்த ராஜபக்ஷ – இல்லை. அதைத்தான் இப்போதைக்கு கட்சி முடிவு செய்துள்ளது.
ஊடகவியலாளர் – ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் உங்களின் படம் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசியல் விளையாடுகிறார்.?
மகிந்த ராஜபக்ஷ – எனக்கு ஒரு தடையும் இல்லை.
ஊடகவியலாளர் – அதை வைத்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவால் மீண்டும் எதையும் செய்ய முடியுமா?
மகிந்த ராஜபக்ஷ – எனது படத்தை வைத்து நீங்கள் எதையும் செய்யலாம். வெற்றி பெறுவோம்.
ஊடகவியலாளர் – தற்போதைய ஜனாதிபதிக்கு இன்னும் இடம் இருக்கிறதா?
மகிந்த ராஜபக்ஷ – உரிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியே தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். மாறாக நான் அல்ல. மீண்டும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமானால் அதையும் நாங்கள் செய்யத் தயார்.
ஊடகவியலாளர் – தம்மிக்க பெரேரா இருக்கிறாரா?
மகிந்த ராஜபக்ச – இருக்கிறார் என்று மிகவும் சுவாரஸ்யமாக பதில் கூறியுள்ளார்.