உலகம்
ஹமாஸின் மற்றொரு தளபதி கொல்லப்பட்டார்!: உறுதிப்படுத்திய இஸ்ரேல்
ஜூலை அன்று காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் உயர்மட்ட இராணுவத் தளபதி மொஹமட் டெய்ஃப் (Mohammed Deif) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் வியாழன் அன்று கூறியுள்ளது.
ஹமாஸிடமிருந்து இது குறித்து உடனடியாக எந்தக் கருத்தும் வரவில்லை.
கடந்த சில மணித்தியாலங்களில் அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜூலை 13 அன்று கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஹமாஸின் கான் யூனிஸ் படைப்பிரிவின் தளபதி ரஃபா சலாமேக்கு சொந்தமான வளாகத்தில் டெய்ஃப் இலக்கு வைக்கப்பட்டார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக Izz al-Din al-Qassam படைப்பிரிவுக்கு கட்டளையிட்ட 58 வயதான டெய்ஃப் நீண்டகாலமாக இஸ்ரேலால் மிகவும் தேடப்படும் பயங்கரவாத நபர்களில் ஒருவராக இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.