ரணிலுக்கு இனி ஆதரவு இல்லை; கைவிரித்த மகிந்த: தனியான வேட்பாளரை நிறுத்த தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த அக்கட்சியின் அரசியல் உயர்பீடம் முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் உயர்பீடிம் திங்கட்கிழமை மாலை கூடியது. இதன்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்,
“கட்சியின் உறுப்பினர் ஒருவரை மொட்டு சின்னத்தில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கருத்து வெளியிடப்பட்டது. ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.பெரும்பான்மையினர் ஆதரவாக இருந்தனர்.
இதன்போது, மொட்டுவின் கீழ் வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை எதிர்த்தால், கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதித் தேர்தலில் கட்சியைச் சேர்ந்த யாரேனும் போட்டியிட்டால் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்
அதேபோன்று இனி ரணில் விக்ரமசிங்கவுக்கு எமது ஆதரவு இருக்காது.” என்றார்.