இலங்கை
மொட்டுக் கட்சியினரின் புதிய உத்தி: ரணிலுடன் இணையுமா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாக தீர்மானித்தால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புதிய உத்தியைக் கையாண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியபடி கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்தாது ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கென தனிப்பட்ட ரீதியில் கிராமங்களிலிருந்து கூட்டங்களை நடத்தவும் , தேவையெனில் மாவட்ட ரீதியாக இரு தரப்பினரும் இணைந்து ஒரே மேடையில் ஏறி 25க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தவும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.