கதைகள்

“ரேக்ளா” …. சிறுகதை … யாழ் ராகவன்.

 அந்த டீக்கடையின் முன்பு போடப்பட்ட பழைய மாட்டு வண்டியில் எல்லோரும் அமர்ந்து கதை பேசுவதும் தேநீர் குடிப்பதும் சிறுவர்கள் விளையாடுவதுமாக இருந்தார்கள். ஒரு காலத்தில் தமிழகமெங்கும் ஏன் இந்தியாவின் பிறமாநிலங்களில் எங்கு மாட்டு வண்டி பந்தயம் நடந்தாலும் நிற்காமல் ஓடி பலமுறை பரிசு அள்ளி வந்தது அந்த மாட்டு வண்டி தான்.

இப்பொழுது அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய பொருள் போல விளையாட்டு பொருள் போல ஆகிவிட்ட மாட்டு வண்டியை ப்பார்க்கும் போதெல்லாம் சின்னச்சாமிக்கு விசனமும் அழுகையும் வரும் முதுமையில் தள்ளாமை வந்த பொழுதும் அந்த தேனீர்க்கடையை தாண்டும் போதும் சின்னச்சாமி ஒரு நிமிடம் நின்று தமது மாட்டு வண்டியை ப்பார்த்துக் கொண்டே செல்வார்.டீக்கடையில் அமர்ந்த இளசுகள் .யார் இந்த பெரிசு மாட்டு வண்டிய குறுகுறுன்னு பாத்துகிட்டே இருக்காரு. டீ கிளாஸ்களைக் கழுவிக் கொண்டே ராமதாசு டேய் என்னடா இப்படி சொல்லிட்டீங்க அவரு யார் தெரியுமா
ரேக்ளா சின்னச்சாமி அப்படின்னா எட்டுக்கண் விட்டெரியும்டா. அந்த ஆளு மாடு பிடிப்பதிலும் சரி மாட்டு வண்டி ஓட்டுவதிலும் சரி அதுக்காகவே பொறந்தவன் போல.

பசி ,தூக்கம், வேலை ,சொத்து, சுகம் அத்தனையும் அவருக்கு ரேக்ளா மாடு தான். பார்த்து பார்த்து இன்றைக்கு நவீன கார் போல அந்த ரேக்ளா வண்டியை அவர் தயாரித்து ஊருக்குள் கொண்டு வந்த போது ஊருக்குள் பேர் வந்தது போல இருந்தது. அந்த வண்டியை ப்பார்த்து பார்த்து மயங்காத ஆட்களை இல்லை ஊரே கண் வைத்தது ஆனால் இன்று ஓரமாக நிற்கிறது.
ஊர் திருவிழாவென்று அலங்கரிக்கப்பட்ட சப்பரம் வருவது போல இந்த மாட்டு வண்டி வந்த நாளில் ஊரே அதைப்பற்றி தான் பேச்சு. சின்னச்சாமிக்கு தேசிய விருது பெற்றதைப் போல ஒரு பெருமிதம்.

கருப்பாயூரணி இன்றைக்கு நகரமாகிவிட்டது. அது கிராமமாக உயிரோடு இருந்த காலத்தில் தன் கூட்டுக்காரன் ரவிச்சந்திரன் சின்னச்சாமியும் பொழுது விடிஞ்சு பொழுது அடையுற வரைக்கும் மாட்டோடு தான் இருப்பார்கள். மாதம்பட்டி விளக்கில் அவர்களுக்கு என்று ஒரு தோப்பு உண்டு அந்த தோப்பில் மாட்டை கட்டி வைத்து பண்டுதம் பார்த்து ஒவ்வொரு ஊர் போட்டிக்கும் இருவரும் அழைத்துச் செல்வார்கள்.

சின்னச்சாமியின் தந்தை இதை ஒருபோதும் விரும்புவதில்லை மகனைப் பார்த்தால் பிரம்பு எடுத்து விலாசுவார். இப்படி யார் பேச்சையும் கேட்காமல் சொத்த பூராத்தையும்காலியாக ப்போறானே. என்று அம்மா சண்டைபுடிப்பாள். அந்த மாட்டு வண்டி வருகின்ற சலங்கை சத்தம் ஊரே திரும்பி பார்க்கும் பனியனோடு வேட்டியை லங்கோடு மாறி கட்டி சட்ட கம்பெனி எடுத்து அடித்து மாட்டை விரட்டுகிற அழகை ஊரே பார்த்துவியக்கும்.

டீக்கடையில் இருந்தவர்கள் வடையை சாப்பிட்டுக்கொண்டு வாயை பிளந்து அவர் சொல்ற கதையை கேட்டார்கள் அதில் ஒருவன் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு நடக்கவே தள்ளாடுறாரு இவராவரா ரேக்ளா வண்டி ஓட்டுநாரா கேட்கிறோம் என்பதற்காண்டி கதையை அவுத்து விடுவீங்களா. பேசிக் கொண்டிருக்கும் போது பெரியவர் சின்னச்சாமி டீக்கடையில் வந்து அமர்ந்து கொண்டார். கதையை நம்ப மறுத்த இளசுகள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதுதான் சாக்கு என்று ராமதாஸ் பெருசு மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு ரேக்ளா பந்து நடக்கிற இடத்துக்கு போவோமா என்று கேட்டான்.

நீ சும்மா இருப்பா ராமதாஸ் அந்த சோக்கெல்லாம் போயிருச்சு காடு வா வாங்குது இப்ப போயி அதெல்லாம் ஒரு காலம் அப்பா என் பெருசு உங்க சொத்துல எம்புட்டு துட்டு இழந்திருப்பீங்க இந்த ஊரிலேயே பாதி நிலம் தோட்டம் துறவு ரைஸ்மில் எத்தனை இருந்துச்சு உங்களுக்கு
நீ வேற அதையெல்லாம் நினைத்தால் ரத்தக்கண்ணீர் வருமா அப்பா அன்னைக்கே 60 லட்ச ரூபாய் மதிப்பு இன்னைக்கு பல கோடிகளைத் தாண்டும்.

எல்லாத்தையும் இழந்துட்டு
ஆனாலும் வாழ்க்கையை நல்லா வாழ்ந்திடீங்க பெரிசு என்னத்த என்றார் சலிப்புடன் சின்னச்சாமி.எங்கெல்லாம் போனீங்க எப்படி எல்லாம் ஜெயிச்சீங்க அந்த கதையெல்லாம் கொஞ்சம் கேட்டா எங்களுக்கு நல்லா இருக்கும் என்று சிறுசுகளை பார்த்து சின்னச்சாமியை சீண்டி விட்டான் ராமதாஸ்.

நானும் ரவியும்சின்ன வயசுல இருந்தே தோஸ்த் எனக்கும் அவனுக்கும் மாடு ரேக்ளா பந்தயம் இரண்டு மேலேயும் உயிர் பாதி நாள் பள்ளிக்கூடத்துக்கே போகாம எங்க ரேக்ளா பந்தயம் நடந்தாலும் பல நாள் வீட்டுக்கு கூட வரதில்லை.

இது தெரிந்து எங்க அப்பன் எங்களை அடிக்காத நாள் இல்ல ஆனாலும் அந்த கிறுக்கு விடல
எங்க மாமாவும் ரேக்ளா பந்தயத்தில் மாடுபிடி பார் காரைக்குடி தஞ்சாவூர் ராமநாதபுரம் தேனி என்று நாங்கள் போகாத மாவட்டம் ஊர் இல்லை.

மெல்ல மெல்ல வண்டி ஓட்டுறவங்க கூடயே ஓட ஆரம்பிச்சான் ரவி நானும் பின்னாலே ஓடினேன் மாட்ட பழக்கறது பக்குவம் காட்டுகிறது வண்டி கட்றது வண்டிய ஜோடிக்கிறது இதிலேயே நாங்கள் உயிராக இருந்தோம்.

ஒரு கட்டத்துல எந்த வேலைக்கு போனாலும் அதுல மனசு நிக்கல மனசு பூரா மாட்டு வண்டி பந்தயத்தில் இருந்துச்சு எங்க அப்பனுக்கு தெரியாம வியாபாரம் பண்றவங்க பொய்ய சொல்லி ஒரு மாட்ட வாங்கி நாங்களா வளர்த்து பயிற்சி குடுத்து பழகினோம்

மாட்டு வண்டியின் சக்கரம் வேகமாக சுத்தும்போது அதில் சாட்டை கம்பை விட்டு கேட்கும் சத்தம் சங்கீதம் எங்களுக்கு மாட்டு வண்டியில்உட்கார்ந்து பயணிப்பதற்கு அந்த தலையணை போன்ற இருக்கையானது ஜமீன்தார் வீட்டில் பயன்படுத்தும் வெல்வட்டு தொழில் தயாரிக்கப்பட்டது.

மாட்டு வண்டியில் கட்டப்பட்ட சலங்கை பரதநாட்டியத்தில் பயன்படுத்தும் சலங்கைக்கு நிகரானது. ஒரு மாட்டை வாங்கி அதை பழக்கி ஒரு வருடம் நன்றாக பயிற்சி கொடுத்து ஒரு போட்டியில் பங்கேற்க வைத்து வெற்றி பெற்றால் அதிக விலைக்கு விற்பது தோல்வியடைந்தால் அடிமாட்டு விலைக்கு விற்பது வாடிக்கையாகிவிட்டது.

ரவியும் சின்னச்சாமியும் ஊரின் கண்களுக்கு ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று ரைஸ்மில் கொஞ்ச நாள் வேலை பார்த்தார்கள் பால் பண்ணையில் வேலை பார்த்தார்கள் ஆனால் எந்த வேலையிலும் அவர்கள் நிரந்தரமாக இருக்கவில்லை அவர்கள் சிந்தனை எல்லாம் ரேக்ளா வண்டி விடுவதிலேயே இருந்தது.

ஊரின் மாற்றம் நகரங்கள் உருவான காலகட்டம் கிராமம் அழிவின் விளிம்பில் இருந்த சூழல் வயல்கள் தோட்டங்கள்குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் குடும்பத்தை உறவுகள் உடைய சர்ச்சை எதையுமே அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. வருஷம் மாசம் தேதி கூட போட்டி நடைபெறும் நோட்டீஸ்களை பார்த்து தான் தெரிந்து கொள்வார்கள்.

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மட்டுமே அவர்கள் ஊரில் இருப்பார்கள் மற்ற நாட்களில் எல்லாம் போட்டு எங்கே நடைபெறுகிறதோ அந்த ஊரில் தான் இருப்பார்கள். மாட்டு டாக்டர் உடன் பழகி மாட்டுக்கு தீவனம் கொடுப்பது மாட்டை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றிய இருவரும் உரையாடிக் கொண்டே இருப்பார்கள்.

ஆசையாய் வாங்க மாடுகள் சீக்கு வந்து துன்பப்பட்டது உண்டு இந்த மாடெல்லாம் வேலைக்கு ஆகாது என்று ஒதுக்கி வைத்த மாடு சீறிவரும் சூழலும் உருவானது உண்டு. சின்னச்சாமியின் பெற்றோர் ரவியிடமும் ரவியும் பெற்றோர் சின்னச்சாமி இடமும் மாறி மாறி வாழ்க்கை குறித்து உரையாற்றுவார்கள் இருவரும் அதை கண்டு கொள்வதுமில்லை காதில் வாங்கிக் கொள்வதும் இல்லை. இவர்கள் கூட இருந்தவர்கள் எல்லாம் படித்து நல்ல வேலைக்கு சென்று திருமணம் முடித்து ஊரிலேயே வீடு கட்டி வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

எப்பொழுது யாராவது இவர்களைப் பற்றி இவர்கள் செய்யும் வேலையை பற்றி பேசினார் ஒரு மணி நேரமாக அவர்களுக்கு ரேக்ளாவின் பெருமையை சொல்லி அவர்களையும் ரேக்ளா ரேஸுக்கு வர வைத்து விடுவார்கள். அதனால் ஊருக்குள் யாரும் இவர்களுக்கு புத்தி சொல்வதில்லை யார் பேச்சையும் இவர்கள் கேட்பதும் இல்லை.

மாடு நல்லா வளர்ந்து ஒருத்தர் கிட்ட வண்டி ஓசியா வாங்கி வண்டிய பூட்டி காளையார் கோவில் பந்தயத்தில் முதன்முறையா ரேக்ளா விட்டோம். ஊரை எங்கள ஆச்சரியமாக பார்த்துச்சு அந்த பந்தயத்தில் எங்களுக்கு தான் முதல் பரிசு அன்னைக்கு அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை மாட்டு கட்டி புடிச்சு மாட்டுக்கு சாராயம் ஊத்திவிட்டு சொர்க்கத்துக்கு போயிட்டு வந்தோம்.

இப்படியே 10 12 வருஷம் இதே போல மாடு வாங்குவது மாடபழக்கிறது பழகினமாட ரேக்ளா கூட்டிட்டு போறது இப்படியே போச்சு நிறைய நட்டம் கொஞ்சம் கொஞ்சமா சொத்த காலி பண்ணிட்டே வந்தோம். காசு கணக்கு சொத்து கணக்கு எதுவுமே எங்க மனசுல நிக்கல வண்டிய அழகு படுத்துவதிலும் ஜெயிச்ச ரேஸ் மாடு லட்ச கணக்கில் வாங்குவதையும் மட்டுமே நாங்கள் செய்தோம்.

ஒரு கட்டத்துல வயசு 40 தாண்டுது ரவிச்சந்திரனுக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டி வைத்துவிட்டார் அவங்க அப்பா அவன் கல்யாணம் முடிச்ச பிறகு வந்த பொண்டாட்டி ஒவ்வொரு நாளும் சண்டை பிடிப்பா இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி அவ என்கூட வந்துருவான். இதைச் சொல்லி எங்க வீட்ல திட்டுவாங்க ஒரு கட்டத்தில் எல்லை மீறி போச்சு எங்க வீட்ல பங்கு பாகம் பிரிச்சு என்னை தனியா ஒதுக்கி விட்டார்கள். இனிய புத்தியுடன் பொழைக்கலன்னா நடுத்ததெருவில நிக்கணும்னு அக்கா வீட்டுக்காரரு எனக்கு ஒத்தியை புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சாரு.

எனக்கு 50 அவளுக்கு 20 ஒத்து போகல நித்தமும் பிரச்சனை எனக்கு பொண்டாட்டிய விட மாடு தான் அழகா தெரிஞ்சுச்சு குடும்பம் நடத்துவதைவிட ரேக்ளாக போறதான் முக்கியம் அப்படின்னு தோணுச்சு. கல்யாணம் முடிச்சப்புறமும் அஞ்சாறு ஊருக்கு மாட்டு வண்டி பந்தயத்திற்கு போய் ஜெயிச்சுட்டு வந்து இருக்கிறேன். வயசு வித்தியாசமா கல்யாணம் முடிச்சதனால ஊருக்குள்ள எங்களை அப்பா மகள் அப்படின்னு நினைச்சு ஜாடை மாடையாபேசுவாங்க.

இந்த கூத்துல ஒரே பிரசவத்துல ரெண்டு ஆம்பள பையன் ஒருத்தன் ராமன் இன்னொருத்தன் லட்சுமணன். பிள்ளைய பிறந்தும் கூட நம்மளால மாட்டுவண்டி பந்தயத்தை விட முடியல. இதுக்கு மேல பொறுக்க முடியாத பொண்டாட்டி என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டா. ரவி வேற ஊர்ல போய் பொழைக்க போயிட்டான் அப்பத்தான் ஒரு முடிவு பண்ணி மாட்ட இரண்டையும் வித்துடன் மாட்டு வண்டிய இந்த கடை ஓரமா நிப்பாட்டிட்டேன். பிள்ளைகளை வெளியூர்ல ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வையுங்கள் என்று சொல்லி நண்பன் சொன்னதை கேட்டு அவர்களையும் நல்லா ஹாஸ்டல்ல படிக்கட்டும் என்று சேர்த்து விட்டேன். என் பொழப்பு தான் இப்படி போச்சு அடுத்த தலைமுறையாவது நல்லா வரட்டும் என்று சொல்லி சின்னச்சாமி முடித்தார். அங்க டீக்கடையில் எல்லோரும் இவர் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பயும் சாட்டை கம்பெடுத்துஒரு சுத்து சுத்துனா எட்டு ஊரிலும் இவர் பெயர் போதும்டா இப்படியே ஏத்தி ஏத்தி தாண்டா ஒன்னும் இல்லாம ஆக்கிவிட்டீர்கள் பிள்ளைகளை பார்க்கும் நாள் என்று என காலண்டரை பார்த்துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.