உலகம்

புகலிட கோரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ருவாண்டா திட்டத்தை ரத்து செய்வதாக பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ரத்து செய்வதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற பொது தேர்தலில் பாரிய வெற்றியை பதிவுசெய்துள்ள தொழிற்கட்சி, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனது முதல் கொள்கை அறிவிப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விரோதமான முறையில் சிறிய படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறி, பிரித்தானியாவிற்கு வந்த குடியேறியவர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அனுப்பும் திட்டத்தை கன்சர்வேடிவ் அரசாங்கம் 2022ஆம் ஆண்டில் அறிவித்திருந்தது.

எனினும், பல மாதங்களாக நீடித்தி சட்ட சவால்கள் காரணமாக குறித்த திட்டத்தின் கீழ் யாரும் ருவாண்டாவிற்கு அனுப்பப்படவில்லை.

இந்நிலையிலேயே, ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

ருவாண்டா திட்டம் தொடங்குவதற்கு முன்பே இறந்து புதைக்கப்பட்டது. இது ஒரு தடையாக இருந்ததில்லை” என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பாக செயல்படாத வித்தைகளைத் தொடர நான் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை எவ்வாறு தடுப்பது என்ற கேள்வி ஆறு வார தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்தது.

ஆட்கடத்தல்காரர்களின் மாதிரியை இது தகர்க்கும் என்று ஆதரவாளர்கள் கூறினாலும், விமர்சகர்கள் ருவாண்டா கொள்கை ஒழுக்கக்கேடானது என்றும் அது வேலை செய்யாது என்றும் வாதிட்டனர்.

கடந்த நவம்பரில், பிரித்தானிய உச்சநீதிமன்றம் இந்த கொள்கையை சட்டவிரோதமானது என்று அறிவித்தது. மேலும், ருவாண்டாவை பாதுகாப்பான மூன்றாவது நாடாகக் கருத முடியாது என்று கூறியது.

ருவாண்டா திட்டத்தை நிறுத்துவதற்கு பிரச்சாரம் செய்த பல அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சரின் CEO Sonya Sceats, ஸ்டார்மரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

“சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிய மக்களின் வாழ்க்கையுடன் அரசியல் விளையாடிய இந்த வெட்கக்கேடான திட்டத்தின் கதவை உடனடியாக மூடுவதற்கு ஸ்டார்மரை நாங்கள் பாராட்டுகிறோம்,” என்று அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.