கச்சத்தீவை இந்திய அரசாங்கத்துக்கு இரகசியமாக விற்றுள்ளார்களா?: சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு
இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை இந்திய அரசாங்கத்துக்கு இரகசியமாக விற்றுள்ளார்களா என சந்தேகம் எழுவதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி அருன்ஹேமச்சந்திர தெரிவித்தார்.
திருகோணமலையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்திய மீனவர்களின் தாக்குதலால் இலங்கை இராணுவ படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.1921ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கே உரித்தான கச்சதீவு 1972ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது.
இந்திய தேர்தலின் போது கச்சதீவை மீட்போம் என்கின்ற கோசத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இது தொடர்பில் குரல் எழுப்பினர்.
தேர்தலின் பின் அது மறைந்தாலும் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆட்சியாளர்கள் சுய இலாப நோக்கத்துக்காக வாழ்கிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரைமசிங்க நரேந்திரமோடி அருகாமையில் இருக்கும் போது ஒரு கதையையும் மக்களிடத்தில் ஒரு கதையினையும் கூறி வருகிறார்.
இலங்கை அரசாங்கம் தெளிவான விளக்கத்தை கூற மறுத்திருக்கிறது வடகிழக்கு பிரதேசம் இந்தியாவுடன் சேர்ந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார் ஆனால் சில விடயங்களை ஏற்க முடியாது .
இவ் விடயத்தில் தேசப்பற்று மக்கள் கரிசனை இல்லாமல் ஈடுபடுவார்களானால் கிழக்கு மக்கள் என்ற ரீதியில் தொடர்ந்தும் இது விடயத்தில் போராடுவோம்” என்றார்.