உலகம்

கொலம்பியாவில் 11 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொலம்பியாவில் கடலில் 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இதுவே இவ் ஆண்டு கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட கொக்கைன் போதைப் பொருளாகும். அதன் பெறுமதி 11 கோடியே 30 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

கொலம்பிய கடற்படை, கொலம்பிய விமானப்படை மற்றும் அமெரிக்காவின் தெற்கு கட்டளையின் கூட்டு இடைநிலை பணிக்குழு ஆகியன இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சான் ஆண்ட்ரேஸ் இஸ்லாவுக்கு அருகில் படகில் கடத்திச் செல்லப்பட்ட கொக்கையின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக கொலம்பிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் கொலம்பிய பிரஜைகள் மூவரும், ஹோண்டுராஸ் பிரஜை ஒருவரும் மற்றும் வெனிசுலா பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 131 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.