இலக்கியச்சோலை
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்!… 01 …. T .சௌந்தர்.
அறிந்த குரல்களும் புதிய நியதிகளும்.
புதுவகையான வாத்திய அமைப்பை தமது பாடல்களில் அமைத்தார்கள் என்று சொல்லும் போது அதற்கு ஏற்பப் பாடும் குரல்களையும் கண்டெடுக்க வேண்டிய அவசியமும் உண்டாகிறது. ஏற்கனவே அறிமுகமான .கேட்டுப்பழகிய குரல்களை பயன்படுத்துவதுடன் புதியவர்களையும் அறிமுகம் செய்வது அல்லது ஏற்கனவே பாடிக்கொண்டிருப்பவர்களில் சிலரை முதன்மைப்படுத்துவதும் இயல்பான ஒரு அம்சமாக இருக்கிறது.
ஆனால் மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் தமது படைப்பாற்றலை மேம்படுத்த ஏற்கனவே அறிமுகமான குரல்களை பயன்படுத்தி தமது இசையை புனர்நிர்மாசெய்தார்கள் என்பது காலத்தின் காட்டாயமாகவும் இருந்தது எனலாம்.வாத்திய இசை நிகழ்த்திய புதுமையுடன் புதுமையாகப் பாடும் பாங்கையும் அவர்களே உருவாக்க வேண்டியதாகவும் இருந்தது.அன்றைய காலம் விளைவித்திருந்த பாடும்முறை மீதான மதிப்பீடுகளுக்கு முற்றுமுழுதான மாறுபாட்டைக் கொண்டுவந்தார்கள்.பழகிய பாணி இசைப்பாங்கின் அலையில் ஒரு தசாப்தம் [ 1951- 1961 ] மெல்லிசைமன்னர்களும் ஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட நேர்ந்தது.
அந்த பத்து வருட அலையோட்டத்தில் நீந்தி தமக்கானஉயிர்த்துடிப்பு மிக்க புது அலையை உருவாக்கினார்கள். அவர்களுக்கு முன்னரும் அவர்களது சமகாலத்திலுமிருந்த பெருந்தொகையான பாடகர்,பாடகிகளின் பட்டியலையும் ஒரு கணம் இங்கே நினைவூட்டிச் செல்வது தவிர்க்க முடியாததாகும்.
1950 களில் வெளிவந்த படங்களில் ஒலித்த பாடல்களில் எத்தனையோ விதம்,விதமான குரல்கள் ஒலித்தன!
குறிப்பாகப் பெண்குரல்களை எண்ணிப் பார்க்கும் போது வியப்பும் ஆச்சரியமும் மேலிடுகிறது.தமது குரல்களை நசுக்காமல் ,நெறிக்காமல் , வாய் திறந்து , ஒளிவுமறைவின்றி சுருதிசுத்தத்துடன் பாடும் திறன்படைத்த குரல்களைக் கேட்கிறோம்.
என்.எஸ்.கிருஷ்ணன் , ஜே.பி சந்திரபாபு , டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர்.ராமசாமி போன்ற பாடும் ஆற்றல் பெற்ற நடிகர்களுடன்,பாடகர்களாக திருச்சி லோகநாதன், வி,என் சுந்தரம் ,எஸ்.சி கிருஷ்ணன்.சி.எஸ்.ஜெயராமன் , ஏ.எல்.ராகவன் , கண்டசாலா , ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் , குசைந்தீன், டி.ஏ.மோதி ,டி.எம்.சௌந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன் போன்றோரும் ,
பெண் பாடகிகளில் பாடும் நட்சத்திரங்களாக விளங்கிய பி.பானுமதி ,எஸ்.வரலட்சுமி ,டி.ஆர்.ராஜகுமாரி ,கே.பி.சுந்தராம்பாள் போன்றோருடன் யு.ஆர் .ஜீவரத்தினம் , ஏ.பி. கோமளா,பி.ஏ.பெரியநாயகி, ஏ.ரத்னமாலா ,ஜமுனாராணி ,டி.வி.ரத்தினம் , டிஎஸ்.பகவதி, கே.ராணி, சரோஜினி, எம்.எல்.வசந்தகுமாரி , ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள், டி.வி.ரத்தினம், என்.எல் .கானஸரஸ்வதி ,எம்.எஸ்.ராஜேஸ்வரி , ஜிக்கி, பி.லீலா போன்ற பாடகிகள் என பலவிதமான பாவனைகள் காட்டும் , வார்ணஜாலங்கள் காட்டும் , வளமிக்க இசையரங்காக [ Rich Musical ] அக்கால திரை இசையுலகு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
குரலில் மென்மையும் , வசீகரமும் , தாய்மையும் நிறைந்த குரல்கள் , ஓங்காரம் எழுப்பும் குரல்கள் ,தென்றலாய் மிதந்து குளிரவைக்கும் குரல்கள் , மென்மையின் தடத்தில் மெதுவாய் நழுவிச் செல்லும் குரல்கள் , கீழ் சுருதியில் பாடி இதயத்தை நெகிழ வைக்கும் குரல்கள் , உயர்ந்த சுருதியில் நின்று நர்த்தனமாடும் குரல்கள் என இந்தக் குரல்களை நாம் வகைப்படுத்த முடியும். உத்வேகத்துடன் தமது இசைவாழ்வை ஆரம்பித்த மெல்லிசைமன்னர்கள் தாம் இசையமைத்த ஆரம்பகாலத் திரைப்படங்களில் மேல் குறிப்பிட்ட பெரும்பாலான குரல்களை பயன்படுத்திருக்கின்றார்கள்.
A குரலில் மென்மையும் , வசீகரமும் , தாய்மையும் நிறைந்த குரல்களாக ஆர்.பாலசரஸ்வதி தேவி , எம்.எல்.வசந்தகுமாரி ,ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள்,டி.எஸ்.பகவதி, ஏ.பி. கோமளாபோன்ற பாடகிகளின் பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01 நீலவண்ண கண்ணா வாடா – மங்கையர் திலகம் [ 1954] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
02 ஆளப்பிறந்த கண்மணியே – உத்தமபுத்திரன் [ 1958] – ஆர்.பாலசரஸ்வதிதேவி + ஏ.பி.கோமளா – இசை : ஜி.ராமநாதன்
03 எல்லோரும் உன்னை நல்லவன் என்றே – பாக்கியவதி [ 1957] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
04 சிங்கார புன்னகை – மகாதேவி [ 1957] – ஆர்.பாலசரஸ்வதிதேவி எம்.எஸ்.ராஜேஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 தென்றல் வந்து வீசாதோ – சிவகங்கை சீமை [ 1959] – டிஎஸ்.பகவதி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே – இருபத்திரை [ 1957] – ராதா ஜெயலட்சுமி – இசை : எஸ்.வி.வெங்கடராமன்
07 நீயே கதி ஈஸ்வரி – அன்னையின் ஆணை [ 1958] – பி.லீலா – இசை : எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு
08 பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா – பெண் [ 1954] – டி.கே பகவதி – இசை : ஆர்.சுதர்சனம்
09 அன்பே பாவமா அதில் ஏதும் பேதமா – தேவதாஸ் [ 1951] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
10 கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் – தாயுள்ளம் [ 1953] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : ஏ.ராமராவ்
11 வண்ண மேடையில் எண்ணம் போலவே – ஒரேவழி [ 1959 ] – டி.கே பகவதி – இசை : ஆர்.சுதர்சனம்.
B ஓங்கிக்குரல் எடுத்து பாடுவதில் கே.பி.சுந்தராம்பாள்,பி.ஏ.பெரியநாயகி , யு.ஆர் .ஜீவரத்தினம் போன்றோரும் ,டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர்.ராமசாமி,சி.எஸ்.ஜெயராமன் ,திருச்சி லோகநாதன் ,சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் ,எஸ்.சி கிருஷ்ணன் போன்ற பாடகர்களின் பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01 எங்கள் திராவிட போன் நாடே – மாலையிட்ட மங்கை [ 1958] – டி.ஆர்.மகாலிங்கம் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 ஓங்காரமாய் விளங்கும் நாதம் – வணங்காமுடி [ 1957] – டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
03 கண்ணீர் விட்டோ வளர்த்தோம் – கப்பலோட்டிய தமிழன் [ 1959] – திருச்சி லோகநாதன் – இசை : ஜி.ராமநாதன்
04 ஜெயமே புகழவே – குலேபகாவலி [ 1957] – எஸ்.சி.கிருஷ்ணன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 உழைப்பதிலா உழைப்பை பெருவத்திலா – நாடோடி மன்னன் [ 1959] – சீர்காழி கோவிந்தராஜன் – இசை : சுப்பைய்யா நாயுடு
06 தென்றலே வாராயோ – வாழ்விலே ஒரு நாள் [ 1957] – யு.ஆர் .ஜீவரத்தினம் + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : டி.ஜி.லிங்கப்பா
07 பெரியது கேட்டபின் விரிவடிவேலோன் – அவ்வையார் [ 1950] – கே.பி.சுந்தராம்பாள் – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
08 வேலனே செந்தமிழ் வித்தகர் – அவ்வையார் [ 1950] – கே.பி.சுந்தராம்பாள் – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
09 எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம் – சொர்க்கவாசல் [ 1955] – கே.ஆர்.ராமசாமி – இசை : சி.ஆர்.சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 தென்னாடுடைய சிவனே போற்றி – சம்பூரண ராமாயணம் [ 1957 ] – சி .எஸ் .ஜெயராமன் – இசை : கே.வி.மகாதேவன்
11 வாராய் நீ வாராய் – மந்திரிகுமாரி [ 1950] – திருச்சி லோகநாதன் + ஜிக்கி – இசை : ஜி.ராமநாதன்
12 வா கலாப மயிலே ஓடி நீ – காத்தவராயன் [ 1959 ] – டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜிராமநாதன்.
C நாட்டுப்புற இசைப்பாங்கில் பாட ஏ.ரத்னமாலா ,ஜமுனாராணி ,டி.வி.ரத்தினம் ,கே.ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி ,சரோஜினி, திருச்சி லோகநாதன்,டி.எம்.சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி கிருஷ்ணன்.ஏ.எல்.ராகவன், பி.பொன்னுசாமி போன்றோரும் ,
01 ஜின்ஜினக்கு ஜின்ஜினக்கு கணக்கு – ரம்பையின்காதல் [ 1956] – எஸ்.சி.கிருஷ்ணன் + ஜிக்கி – இசை :டி.ஆர்.பாப்பா
02 சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம் – மதுரைவீரன் [ 1951] – ஜிக்கி – இசை : ஜி.ராமநாதன்
03 ஐந்து ரூபா ..கொஞ்ச நேரம் அந்தமான் கைதி T.V.ரத்தினம் இசை : ஜி.ராமநாதன்
04 சாலையிலே விளையாடும் சப்பாணி – ரம்பையின்காதல் [ 1956] – எஸ்.வி.பொன்னுசாமி + ஜிக்கி – இசை :டி.ஆர்.பாப்பா
05 மாரி மகமாயி மாரி மகமாயி – நாம் [ 1953] – செல்லமுத்து + ஏ.பி.கோமளா – இசை : சி.எஸ்.ஜெயராமன்
06 வேட்டி கட்டின பொம்பளே நீ – கல்யாணம் செய்துகொ [ 1957] – சீர்காழி +சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை : டி.லிங்கப்பா
07 ஏறாத மலைதனிலே – தூக்குத் தூக்கி [ 1954] – டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
08 அத்தானும் நான் தானே – சக்கரவர்த்தித் திருமகள் [ 1957] – எஸ்.சி.கிருஷ்ணன் + டி.வி.ரத்தினம் – இசை : ஜி.ராமநாதன்
09 உன் திருமுகத்தை ஒரு முகமா – மகாதேவி [ 1958] – ஜே .பி.சந்திரபாபு + ஏ.ரத்னமாலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
D நாட்டியப்பாடல்களை பாடுவதற்கு பி.லீலா ,என்.எல் .கானஸரஸ்வதி போன்றவர்களுடன் மேலே குறிப்பிட்ட எம்.எல்.வசந்தகுமாரி ,ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள், டி.வி.ரத்தினம்,எஸ்.வரலட்சுமி ,பி.பானுமதி போன்ற பாடகிகளும், டி.எம்.சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன்,வி,என் சுந்தரம், கண்டசாலா போன்றோரும் வல்லவர்களாக இருந்தனர்.
01 நீலி மகன் நீ அல்லவோ மறை சதா – மலைக்கள்ளன் [ 1951] – பி.ஏ.பெரியநாயகி – இசை : எஸ்.எம்.சுப்பையா நாயுடு
02 ஆடல் காணீரோ திருவிளையாடல் – மதுரைவீரன் [ 1957] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : ஜி.ராமநாதன்
03 ஆட வாரீர் இன்றே ஆடவாரீர் – ரம்பையின் காதல் [ 1958] – பி.பானுமதி – இசை : டி.ஆர்.பாப்பா
04 காத்திருப்பான் கமலக்கண்ணன் – உத்தமபுத்திரன் [ 1958] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
05 ஆடும் அழகே அழகு – ராஜ ராஜன் [ 1958] – சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை : கே.வி.மகாதேவன்
06 வருகிறாள் உனைத்தேடி – தங்கப்பதுமாய் [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி + சொல்லமங்கலம் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 கலையாலே எழிலானதே – ராஜா ராணி [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 கதவைச் சாத்தடி – ரத்தக்கண்ணீர் [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : சி.எஸ்.ஜெயராமன்
09 வா வா வளர்மதியே வா – வணங்காமுடி [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : ஜி.ராமநாதன்
10 கோடி கோடி இன்பம் பெறவே – ஆட வந்த தெய்வம் [ 1958] – பி.லீலா + பி.சுசீலா – இசை : கே.வி.மகாதேவன்
11 சிறந்த உலகினில் யாவும் – மாப்பிள்ளை [ 1955 ] – லீலா + சூலமங்கலம் – இசை :
12 வேலவரே உன்னைத் தேடி ஒரு – மணமகன் தேவை [1955 ] – P.பானுமதி – இசை : ஜி.ராமநாதன் இவர்களுடன் நடிப்பதிலும் பாடுவதிலும் வல்லுனர்களாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி ,எஸ்.வரலட்சுமி ,பி.பானுமதி போன்றோரும் பாடகர்களுக்கு இணையாகப் பாடி அசத்தினார்கள். இந்தப்பாடக பாடகிகளுடன் அன்றிருந்த இசையமைப்பாளர்களையும் , கவிஞர்களையும் நினைவூட்டுதலும் பொருத்தமானதாகும் .
இசையமைப்பாளர்கள் பட்டியலில்….. டி.ஏ.கல்யாணம் ,ஜி.ராமநாதன்,.எஸ்.வீ.வெங்கட்ராமன் ,சி.ஆர் .சுப்பராமன்,எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு . சி.என்.பாண்டுரங்கன்.எஸ்.ராஜேஸ்வரராவ் .பெண்டலாயா,ஆதி நாராயணராவ் ,எஸ்.ஹனுமந்த ராவ் ,அஸ்வத்தாமா ஆர்.சுதர்சனம்,கண்டசால,எம்.எஸ். ஞானமணி,கே .வீ. மகாதேவன் ,ஏ .எம் .ராஜா , எச் ஆர் ,பத்மநாபசாச்திரி , டி.ஆர். பாப்பா, ஜி.கே .வெங்கடேஷ் ,டி.சலபதி ராவ் திறமைமிக்கவர்கள் இருந்தனர்.
பாடலாசிரியர்களில்,உடுமலைநாராயணகவி ,கம்பதாசன் ,சுந்தரவாத்தியார்,முத்துக்கூத்தன் ,கே.பி.காமாட்சி ,புரடசிதாசன் ,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கு.சா கிருஷ்ணமூர்த்தி ,சுரதா, மாயவனாதன் , எஸ்.டி.சுந்தரம் ,மருதகாசி , கா.மு.செரீப் ,கே.டி.சந்தானம் ,தஞ்சைராமைய்யாதாஸ்,கண்ணதாசன் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பேராற்றல் வாய்ந்தவர்களையும் காண்கிறோம்.
வகைவகையான பாடல்முறைகளும் [ Versatility ] , அதிலெழும் இசையலைகளும் [Intonations ], அழகும் , உத்வேகமும் மிக்க பலவிதமான குரல்களால் வளம்பெற்ற, பல்வேறு சுருதிகளில் பாடக்கூடிய பாடகர்கள், பாடகிகள் குவிந்திருந்தார்கள்.
1940 களின் ஹிந்தி சினிமாவின் இருந்த ஒரு நிலைமையே தமிழ் திரையில் 1950 களில் இருந்திருக்கிறது.ஹிந்தி திரையில் சைகல், சுரபாய் அம்பலவாலி,சம்சாட் பேகம் , கானான் தேவி , கவிபிரதீப் , உமாதேவி , கீதா தத் ,முக்கேஷ் , நூர்ஜகான் பல பாடகர்கள் நிறைந்திருந்தனர்.எனினும் 1950 களில் புதிய அலையெழுச்சியால் முகமட் ராபி , முகேஷ் , லதா மங்கேஸ்கர் , கிசோர்குமார், மன்னா டே ,ஆஷா போஸ்லே , கீதா தத் போன்ற பாடகர்கள் முன்னணிக்கு வந்தார்கள்.
தமிழிலும் இவ்விதமே தியாகராஜ பாகவதர் , பி.யு.சின்னப்பா காலத்தைத் தொடர்ந்து சில பாடகி ,பாடகர்கள் முன்னணிக்கு வந்தார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமெனின் பி.லீலா , ஜிக்கி , கண்டசாலா , ஏ.எம் ,ராஜா , பாலசரஸ்வதி தேவி , ஜமுனா ராணி , கே.ராணி , ஏ.பி. கோமளா ,எம்.எஸ்.ராஜேஸ்வரி ,திருச்சி லோகநாதன் , சௌந்தரராஜன் போன்றவர்கள் தமிழ்திரையின் புதிய சந்ததி பாடகர்களாக உருவாக்கினார்கள்.
முகம்மது ரபி, முகேஷ் ,லதா மங்கேஷ்கர் போன்ற பாடகர்கள் முன்னணிக்கு வந்த 1950 களில் பாடகியாக அனாயாசமாகப் பாடும் திறன்வாய்ந்த ஜிக்கி அறிமுகமாகிறார்.ஞானசௌந்தரி படத்தில் “அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே எங்கள் ஜோதி ” என்ற பாடல் மூலமாக சிறுமி ஞானசௌந்தரியின் குரலாக ஒலித்து ஆச்சரியப்படுத்திய ஜிக்கி , அக்காலத்தில் புகழின் உச்சியிலிருந்து இசையமைப்பாளரான ஜி.ராமநாதனால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்டார்.
மந்திரிகுமாரி படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து ” வாராய் நீ வாராய் ” மற்றும் “உலவும் தென்றல் காற்றினிலே ” போன்ற மிகப் புகழபெற்ற இரு பாடல்களை ஜிக்கியை பாட வைத்தார் ஜி.ராமநாதன்.தமிழ்த்திரையின் இசைப் போக்கை மெல்லிசையின் பக்கம் மரபு சார்ந்து இழுத்து வந்த பாடல்களில் இதற்குத் தனியிடம் உள்ளது.இந்த இரண்டு பாடல்களும் மெல்லிசையின் உன்னத்தங்களை இனம் காண வைக்கும் தனிச்சுவை மிக்க பாடல்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
அதே படத்தில் “அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே ” என்ற நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த பாடலை பாடியவர் ,பின்னாளில் பெரும் புகழபெற்ற டி.எம்.சௌந்தரராஜன்.ஆரம்ப நிலையில் இருந்த சௌந்தர்ராஜனின் குரல் நாட்டுப்புற பாங்கில் பாடுவதற்கே பொருத்தம் என்ற நிலையில் அவ்விதம் பாட வைக்கப்பட்டார்.ஜி.ராமநாதனால் விரும்பப்பட்ட சௌந்தரராஜன் அவரால் இசையமைக்கப்பட்ட தூக்குத் தூக்கி [1952] படத்தில் மீண்டும் நாட்டுப்புற பாங்கில் அமைந்த பாடலான ” ஏறாத மலைதனிலே ஜோரான கௌதாரி இரண்டு ” என்ற பாடல் மூலம் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றார்.
அன்றைய நாளில் பெருமதிப்புடன் விளங்கிய இசையமைப்பாளரான ஜி.ராமநாதனுக்கு மிகவும் பிடித்தவர்களாக ஜிக்கி ,டி.எம்.சௌந்தரராஜன் விளங்கினர்.
இதே காலத்தில் கிரமமாகப் பாடிவந்த பி.லீலா பிரசித்தமாக பாடிக்கொண்டிருந்தார்.இந்தச் சூழ்நிலையில் 1953 ல் பி.சுசீலா அறிமுகமானார்.
ஆனாலும் இத்தகைய பின்னணியில் 1950 களில் ஜி.ராமநாதன் தான் இசையமைத்த படங்களில் தனக்கு பிடித்த ஆற்றல்மிக்க இருகுரல்களை [ஜிக்கி ,டி.எம்.சௌந்தரராஜன் ] மிக அருமையாகப் பயன்படுத்தினார். தனிப்பாடலாகவும் , ஜோடிக்குரல்களாகவும் ,கம்பீரமாகப் பாட வைத்து இருவரையும் சந்தேகத்திற்கிடமின்றி இரு இசை நட்ஷத்திரங்களை உருவாக்கினார் எனலாம்.
ஜி.ராமநாதனின் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் , ஜிக்கி இணை பல இனிய பாடல்களைப் பாடியது மட்டுமல்ல , இருவரையும் வேறு பாடகி ,பாடகர்களுடனும் சேர்ந்து பல இனிய பாடல்களையும் தந்தார்.சில முக்கியமான பாடலைகளைத் தருகிறேன்.
01 நாடகமெல்லாம் கண்டேன் – மதுரைவீரன் [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
02 பூவாமரமும் பூத்ததே – நான் பெற்ற செல்வம் [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
03 இன்பம் வந்து சேருமா -நான் பெற்ற செல்வம் [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன் 0
4 இதய வானிலே உதயமானது – கற்புக்கரசி [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
05 கன்னியா கன்னியா – கற்புக்கரசி [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
06 கண்களால் காதல் காவியம் – சாரங்கதாரா [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்.
ஜி.ராமநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனுடன் ஜிக்கி பாடிய முக்கியமான பாடல்கள்.
01 அழகோடையில் நீந்தும் இள அன்னம் – கோகிலவாணி [ 1957] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
02 திருவே என் தேவியே வாராய் – கோகிலவாணி [ 1957] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
03 மின்னுவதெல்லாம் பொன்னென்று – கோமதியின் காதலன்[ 1958] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
04 அன்பே ஆரமுதே வாராய் – கோமதியின் காதலன் [ 1958] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன் 05 வனமேவும் ராஜகுமாரி – ராஜா தேசிங்கு [ 1959] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்.
டி.எம். சௌந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன் மட்டுமல்ல , திருச்சி லோகநாதன் ,சி.எஸ்.ஜெயராமன் ,கண்டசாலா ,ஏ.எம்.ராஜா ,எஸ்.சி.கிருஷ்ணன் போன்றவர்களுடனும் , பெண் பாடகிகளான பி.லீலா, பி.சுசீலா ,கே.ஜமுனாராணி போன்றோருடனும் இணைத்து கம்பீரமும் , இனிமையும் , விறுவிறுப்பும் மிக்க ஜிக்கியின் குரலை என்னென்ன வகையில் எல்லாம் பயன்படுத்த முடியுமோ அந்தந்த வகையிலெல்லாம் பயன்படுத்தியவர் ஜி .ராமநாதன்.
பிற பாடகர்களுடன் இணைந்து ஜிக்கி பாடிய புகழ் பெற்ற பாடல்கள் சில:
01 இந்த வாழ்வு சொந்தமானால் – நல்லதங்காள் [ 1956] – ஜிக்கி + திருச்சி லோகநாதன்- இசை : ஜி.ராமநாதன்
02 கல்யாணம் ஆகுமுன்னே – டாகடர் சாவித்திரி [ 1957] – ஜிக்கி + கண்டசாலா – இசை : ஜி.ராமநாதன்
03 காவியக்காதல் வாழ்வின் ஓவியம் நாமே – கோமதியின் காதலன்[ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா – இசை : ஜி.ராமநாதன்
04 வாழ்வினிலே இந்நாள் இனி வருமா – வணங்காமுடி [ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா – இசை : ஜி.ராமநாதன்
05 உள்ளம் இரண்டும் ஒன்று – புதுமைப்பித்தன் [ 1959] – ஜிக்கி + சி.எஸ்.ஜெயராமன் – இசை : ஜி.ராமநாதன்.
06 அன்பே எந்தன் முன்னாலே – ஆரவல்லி [ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா – இசை : ஜி.ராமநாதன்.
ஜி.ராமநாதனின் இசை மாளிகையின் முடிசூடாத இளவரசியாக விளங்கியவர் ஜிக்கி என்றால் மிகையில்லை.
ஜி.ராமநாதனின் இசையில் பாடகி ஜிக்கி எவ்விதம் பயயன்படுத்தப்பட்டாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் பயன்படுத்தப்பட்டவர் பின்னணிப்பாடகி பி.லீலா.
இறுகட்டப்படட வீணையின் கம்பியில் எழும் கம்பீரமான இனிய அதிர்வும் ,எழுச்சியும் மிக்க குரலுக்குச் சொந்தக்காரர் பி.லீலா. மனதைக் கவ்வும் வீறும் , உணர்வுகளைக் கிளர்ந்தெழ வைக்கும் பிசிறற்ற குரலும் மெல்லிய இனிய இழைகளையும் காற்றில் மிதக்க வைக்கும் ஆற்றல்மிக்க குரல் கொண்டவர் லீலா! செவ்வியலிசை பலமுடைய பி.லீலாவின் குரலின் அமைப்பு,அதன் இனிமை எல்லாவிதமான சுவைகளையும் வெளிப்படுத்தி ,வியாபித்து நிற்பதை உயிரை வருடும் பல இனிய பாடல்களில் கேட்கிறோம். அவரை ஒத்த பின்னணிப்பாடகிகள் யாரும் தியாகராஜ பாகவதருடன் பாடும் வாய்ப்பு பெறவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அதுமட்டுமல்லதிரையில் மிக அருந்தலாகப் பாடிய , திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனுடன் இணைந்து காதல் பாடல் பாடிய பெருமையும் பி.லீலாவையே சேரும்.ஜோடிப்பாடல்களைப் பொறுத்தவரையில் பி.லீலாவை , அவரது ஆரம்ப நாளிலேயே தியாகராஜ பாகவதருடன் பாட வைத்த பெருமை ஜி.ராமநாதனை சேரும்.
பி.லீலா பாடிய ஜோடிப்பாடல்கள்:
01 யானைத் தந்தம் போல பிறை நிலா – அமரகவி [1952 ] – பி.லீலா + தியாகராஜ பாகவதர் – இசை : ஜி.ராமநாதன்
02 கொஞ்சப்பேசும் கிளியே – அமரகவி [1952 ] – பி.லீலா + தியாகராஜ பாகவதர் – இசை : ஜி.ராமநாதன்
03 கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி – மதன மோகினி [1959 ] – பி.லீலா + கே.வி.மகாதேவன் – இசை : கே.வி.மகாதேவன்
04 வாங்க மச்சான் வாங்க – மதுரை வீரன் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
05 எல்லையில்லாத இன்பத்தில் – சக்கரவர்த்தித்த திருமகள் [1959 ] – பி.லீலா + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
06 நெஞ்சில் குடியிருக்கும் – இரும்புத்திரை [1958 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : எஸ்.வி.வெங்கடராமன்
07 இந்த வாழ்வு சொந்தமானால் – நல்ல தங்காள் [1959 ] – பி.லீலா + திருச்சி லோகநாதன் – இசை : ஜி.ராமநாதன்
08 சுந்தராங்கியை பார்த்தத்தினாலே – கடன் வாங்கி கல்யாணம் [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா + சீர்காழி – இசை : எஸ்.ராஜேவாரராவ்
09 பூவின்றி மனமேது பூமியின் மீது – உத்தமி பெற்ற ரத்தினம் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : டி.சலபதிராவ்
10 தென்றல் உறங்கிடக் கூடுமடி – சங்கிலித் தேவன் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : டி.ஜி.லிங்கப்பா
11 தாழையாம் பூ முடித்து – பாகப்பிரிவினை [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 இளவேனில் சந்திரிகையாள் – தந்தை [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா – இசை :
13 புது ரோஜா போலெ – ஆத்மசாந்தி [1959 ] – பி.லீலா + டி.ஏ.மோதி – இசை :
14 கல்யாணம் நம் கல்யாணம் – தங்கமலை ரகசியம் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : டி.ஜி.லிங்கப்பா
15 நான் செய்த பூஜாபலம் – குணசுந்தரி [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா – இசை : கண்டசாலா
16 காதலே தெய்வீகக் காதலே – பாதாள பைரவி [1959 ] – பி.லீலா + கண்டசாலா – இசை : கண்டசாலா
17 ஆடும் ஊஞ்சலைப் போலெ – என் தங்கை [1952 ] – பி.லீலா + டி.ஏ.மோதி – இசை : சி.என்.பாண்டுரங்கன்
18 வாங்க மச்சான் வாங்க – மதுரை வீரன் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
19 வீசும் தென்றலில் – ப்ரேமாபாஸம் [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
20 நீதானா என்னை அழைத்தது – மாயா பெயர் [1957] – பி.லீலா + கண்டசாலா – இசை : கண்டசாலா
எல்லாவிதமாகவும் பாடும் ஆற்றல் பெற்றவர் எனபதை நிரூபிக்கும் வகையில் பி.லீலா பாடிய பல்வகைப்பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த சில பாடல்கள் இங்கே ….
01 கண்ணும் கண்ணும் கலந்து – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : சி.ராமசந்திரா
02 படிப்புக்கொரு கும்பிடு – இரும்புத்திரை [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : எஸ்.வி.வெங்கடராமன்.
03 வெண்ணிலவே தண்ணிலவே வா வா – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா – இசை : சி.ராமசந்திரா
04 கன்னம் கருத்தகிளி – சிவகங்கை சீமை [1959 ] – பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 எங்குமே ஆனந்தம் – பாழே ராமன் [1959 ] – பி.லீலா – இசை : கண்டசாலா
06 பார்க்காத புதுமைகள் எல்லாம் – நான் சொல்லும் ரகசியம் [1959 ] – பி.லீலா இசை : ஜி.ராமநாதன்
07 தேன் சுவை மேவும் – டாகடர் சாவித்திரி [1955 ] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
08 எண்ணமெல்லாம் இன்பக்கத்தை பேசுதே – சக்கரவர்த்தி திருமகள் [1957] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
09 ராஜா மக்கள் ரோஜா மலர் – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : சி.ராமசந்திரா.
பி.லீலா பாடிய செவ்வியல் இசை சார்ந்த பாடல்கள்.
பொதுவாக அந்தக்காலத்தில் செவ்வியல் இசையில் பெரும்பாலானவர்களுக்கு பரீட்சயம் இருந்தது என்பதும் அக்கால திரைப்படங்களில் அது சார்ந்த இசை இருந்ததாலும் அதிகமான பாடல்கள் அந்தவகையில் அமைந்திருந்தன. அதில் தனித்துவமிக்க அசைவு,குழைவுகளை,சுருதி சுத்தத்துடன் ,அனாயாசமாகவும் பாடும் வல்லமைமிக்கவராக லீலா திகழ்ந்தார்.
குறிப்பாகதமிழ் திரைப்படங்களில் நாட்டிய காட்சிகளுக்கு அமைக்கப்பட்ட பாடல்களை இலங்கை வானொலி ” நாட்டியப்பாடல்கள் ” என்று தலைப்பிட்டு ஒலிபரப்பி மக்கள் மத்தில் புகழபெற வைத்தார்கள்.என் போன்ற இசைரசிகர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு முன்னர் வெளிவந்த பல அபூர்வமான பாடல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்பட்டது. கர்னாடக இசையுலகில் அதிக புகழ் பெற்றிருந்த எம்.எல்.வசந்தகுமாரிக்கு இணையாக பாடும் வல்லமை பெற்றவர் பி.லீலா என்பது எனது கருத்தாகும்.பி.லீலா பாடிய “நாட்டியப்பாடல்கள்” என நாம் அறிந்த அழகான பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01 எல்லாம்இன்பமயம் – டாகடர் சாவித்திரி [1955 ] – பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
02 ஆஹா இவர் யாரடி – மோகினி [1953 ] – பி.லீலா + கே.வி .ஜானகி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
03 காத்திருப்பான் கமலக் கண்ணன் – உத்தமபுத்திரன் [1959 ] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
04 சிறந்த உலகினில் யாவும் – மாப்பிள்ளை [1955 ] – பி.லீலா + சூலமங்கலம் – இசை :
05 அழகான மாறன் யாரடி – நல்லதீர்ப்பு [1955 ] – பி.லீலா – இசை :
06 சிறந்த உலகினில் யாவும் – மாப்பிள்ளை [1955 ] – பி.லீலா + சூலமங்கலம் – இசை :
07 நீயே கத்தி ஈஸ்வரி – அன்னையின் ஆணை [1955 ] – பி.லீலா – இசை : எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
08 கொஞ்சும் சலங்கை ஒளி கேட்டு – கொஞ்சும் சலங்கை [1960 ] – பி.லீலா – இசை : எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
09 வெட்கமாய் ருக்குதடி – பார் மகளே பார் [1963 ] – பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
இதே காலத்தில் கே.ஜமுனாராணி, கே.ராணிஏ.பி.கோமளா , போன்ற பிற பாடகிகளும் முன்னணியில் பாடிக்கொண்டிருந்தனர் அன்று மெல்ல தலை காட்டிய லத்தீன் அமெரிக்க இசை வார்ப்புகளிலமைந்த பாடல்களையும் ,காதல் பாடல்களையும் , உற்சாகம் தரும் பாடல்களையும் இவர்கள் பாடினார்கள்.
கே.ஜமுனாராணி முக்கியமானபல காதல்பாடல்களையும் பாடினார்.
01 குலுங்கிடும் பூவிலெல்லாம் – வளையாபதி [1951] – கே.ஜமுனாராணி + டி.எம்.சௌந்தரராஜன் -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
02 குளிர் தாமரை மலர் பொய்கை – வளையாபதி [1951] – கே.ஜமுனாராணி + டி.எம்.சௌந்தரராஜன் -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
03 சங்கீதமே தான் சந்தோசமாக – சந்தானம் [1951] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா – இசை:
04 துரையே இளமை பாராய் – கதாநாயகி [1955] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா – இசை:ஜி.ராமநாதன்
05 குயிலிசையும் குழலிசையும் – சங்கிலித்தேவன் [1960] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா – இசை:டி.ஜி.லிங்கப்பா
06 அதிமதுரா அனுராதா – மனோகரா [1951] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா – இசை:
07 அற்புதக்காட்சியில் ஆயிரம் – பெண் குலத்தின் பெருமை [1951] – கே.ஜமுனாராணி + பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை:ஜி.ராமநாதன்;
கே.ஜமுனாராணி தனியே பாடி புகழ் பெற்ற பாடல்களில் சில:
01 ஆசையும் என் நேசமும் – குலேபகாவலி [1955] – கே.ஜமுனாராணி – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 உண்மை அன்பு என்னும் – மங்கையர் திலகம் [1955] – கே.ஜமுனாராணி – இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
03 அன்னத் தீவின் அழகுராணி நான் – ரத்தினபுரி இளவரசி [1960] – கே.ஜமுனாராணி + கே.ராணி + குழு – இசை:
04 மானம் நெஞ்சிலே – கைதி கண்ணாயிரம் [1960] – கே.ஜமுனாராணி – இசை:கே.வி.மகாதேவன்
கே.ஜமுனாராணி சக பின்னணிப்பாடகிகளுடன் இணைந்து பாடிய பாடல்கள் :
01 கனி தின்ன செம்மாவை – அமரதீபம் [1951] – கே.ஜமுனாராணி + கே.ராணி + குழு – இசை: டி.சலபதிராவ்
02 செல்லக்கிளியே அல்லிக் கொடியே – கற்புக்கரசி [1951] – கே.ஜமுனாராணி + நிர்மலா + குழு – இசை:
03 தாரகைச் சோலையிலே – குணசுந்தரி [1951] – கே.ஜமுனாராணி + கே.ராணி – இசை:கண்டசாலா
04 இல்லாத அதிசயமாய் இருக்குதடி – கற்புக்கரசி [1957] – கே.ஜமுனாராணி + ஏ.பி.கோமளா + குழு – இசை:ஜி.ராமநாதன்
05 நாம ஆடுவதும் பாடுவதும் – அலிபாபாவும் 40 திருடர்களும் [1951] – கே.ஜமுனாராணி + ஜிக்கி -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
06 ஊருக்கெல்லாம் ஒரே நீதி – ஆளுக்கொரு ஆசை [1951] – கே.ஜமுனாராணி + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.
இங்கே குறிப்பிடப்பிடப்பட்டிருக்கும் அத்தனை பாடகர்கள் , பாடகியர்களையும் மெல்லிசைமன்னர்களும் சிறப்பாகவே அக்கால ஓட்டத்திக்கேற்றவாறு பயன்படுத்தியவர்கள் என்பதை தரப்பட்டுள்ள பட்டியலில் சுட்டிக் காட்டியுள்ளேன்.
பின்னோக்கிப் பார்க்கும் போது பலவிதமான குரல்கள் வெவ்வேறு சுவைகளையும் வெளிப்படுத்துவதும் , இவற்றை விரித்து எழுத்துமளவுக்கும் சிறப்பான பாடல்கள் வெளிவந்ததென்பதையும் நாம் மறந்துவிட முடியாது .இதன் காரணமாகவே தமிழ் திரை இசையின் பொற்காலம் என 1950 களில் வெளிவந்த பாடல்களைக் கொண்டாடும் வெகுசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவை சிறப்பான பாடல்கள் ஆயினும் அதன் போதாமையை நாம் அக்கால ஹிந்தி திரையிசையுடன் ஒப்பு நோக்கும் போது உணர்கின்றோம்.
ஒலிப்பதிவு துல்லியத்திலும் , வாத்திய சேர்க்கைகளின் அணிவகுப்பிலும் பின் தங்கியிருந்ததை நாம் எளிதில் காணலாம்.
1950 களின் இறுதிவரை இசை நட்சத்திரங்களாக இருந்த பி.லீலா, ஜிக்கி போன்றோரின் திறமைகளை கணிசமான அளவில் பயன்படுத்தி வந்த மெல்லிசைமன்னர்கள் 1960 களின் ஆரம்பத்தில் தமக்கென புது சங்கீதப் பொழிவுகளை , புதுநாத வினோதங்களை ,புது ராக சாயல்களை வழங்கி மெல்லிசை முன்னோட்டங்கள் நிகழ்த்த ஏற்கனவே இருந்த சில பலவீனங்களை , வரைவிலக்கணங்களை மீற செவ்வியல் வளமும் ,வலிவும் மிக்க ஏலவே பாடிக் கொண்டிருந்த சில பாடகர் ,பாடகிகளை முன்னிலைப் படுத்த முனைந்தனர். அவர்களில் முதன்மையானவர்களாக டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா ,பி.பி.ஸ்ரீனிவாஸ் ,எல்.ஆர் .ஈஸ்வரி, கே.ஜமுனாராணி போன்றோரை நாம் காண்கிறோம்.
தமக்கெனத் தனியிடம் ஒன்றை அமைத்துக்கொண்ட , அல்லது தாம் மனப்பூர்வமாக விரும்பிய ஒரு இசைப்பாணியையையும் ,அதற்கொப்ப தமக்கு பிடித்தமான பாடகி , பாடகர்களை முன்னிலைப்படுத்தினர்.
10 வருடங்கள் முன்னோக்கியிருந்த ஹிந்தி திரையிசைபோக்கின் செல்வாக்கை மறந்தோ ,மறைத்தோ செயற்படாமல் மெட்டமைப்பிலும் , வாத்திய அமைப்பிலும் , ஒலித்துல்லியத்திலும் அவற்றை எட்ட முனைந்தனர். ஹிந்தி சினிமாவில் வெளிவந்த பாடல்களின் ஆதிக்கம் என்பது பாடும் முறையிலும் பல அதிர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஓங்கிக்குரல் எடுத்து பாடும் ஒரு முறை செல்வாக்கிழந்து குறைந்த சுருதியில் பாடினாலும் இனிமை காட்ட முடியும் என்பதை ஹிந்திப்பாடகர்களான முகம்மது ராபி , முகேஷ் போன்ற பாடகர்கள் தங்கள் பாடும் ஆற்றல்களால் பெரு அதிர்வுகளை ஏற்படுத்தினர். அவர்களை ஆதர்சமாகவே கொண்டு பிற்காலத்தில் புகழபெற்ற பாடகர்கள் உருவாகினார்கள்.
1950 களிலும் ஹிந்திப் பாணியில் பாடும் முறையைக் கொண்டிருந்தவர்களாக ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி , கண்டசாலா போன்ற பாடகர்களைக் காண்கிறோம்.மெல்லிசைப்பாங்கான காதல் மெட்டுக்களை பாடுவதென்றால் , அதற்குரியவர்கள் இவர்களே [ ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி , கண்டசாலா ] என்று சொல்லுமளவுக்குப் பாடல்கள் வெளிவந்தன எனபதற்கு உதாரணமாக அமைந்த சில பாடல்களை இங்கே உதாரணமாக கூறலாம்.
01 ஆடும் ஊஞ்சலைப் போலெ – என் தங்கை [1952 ] -டி.ஏ.மோதி + பி.லீலா – இசை : சி.என்.பாண்டுரங்கன்
02 மைவிழி மேல் பாய்ந்தே நீ – நல்ல பிள்ளை [1953 ] – ஏ.எம்.ராஜா பி.லீலா – இசை : வேதா
03 மணி அடித்ததினால் -நல்ல பிள்ளை [1953 ]
[ இதன் தொடர்ச்சி ..Part 2 அடுத்த பதிவில் ]