இலக்கியச்சோலை

அவுஸ்திரேலியவில் ரோய் இரத்னவேலின் PRISONER # 1056 நூல் வெளியீடு!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஸ்ரீலங்காவின் கொடிய சிறையில் அரசியல் கைதியாக வதைபட்டுஇன்று கனடாவில் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக உயர்வு பெற்ற ஒரு ஈழத் தமிழ் அகதியின் உணர்வுக்கதையே PRISONER #1056 எனும் நூலாகும்)
ரோய் இரத்னவேல் 1987 இல் ஒரு தமிழ் இளைஞனாக இலங்கையில் அரசியல் கைதியாக கொடூரமான அடக்குமுறை சிறையில் பல மாதங்கள் கழித்தார். அவரது விடுதலைக்குப் பிறகு, அவர் தனது 18 வயதில் தனியாக கனடா வந்தார்.
இலங்கையின் கொடிய சிறைச்சாலையில் அரசியல் கைதியாக இருந்து, இன்று கனடாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக உயர்ந்து நிற்கும் ஈழத் தமிழ் அகதியின் உணர்வுமிக்க படைப்பே PRISONER #1056 எனும் நூலாகும்.
ரோய் இப்போது கனடாவின் மிகப்பெரிய தனியார் சொத்து மேலாண்மை நிறுவனத்தில் மிகவும் வெற்றிகரமான நிர்வாகியாக உள்ளார். அவர் பிறப்பால் ஈழத் தமிழர் ஆவார்.
எழுத்தாளர் ரோய் இரட்னவேல் ( Roy Ratnavel) எழுதிய அவரது வாழ்க்கை அனுபவ நூலான  Prisoner # 1056 (கைதி # 1056) என்னும் நூலை ஏப்ரில் 18, 2023 அன்று கனடாவில் முதலாவதாக வெளியிட்டது. உலகப் புகழ்பெற்ற பதிப்பகங்களில் ஒன்றான பென்குயின் பதிப்பகத்தின் கனடாப் பிரிவான பென்குயின் ராண்டம் ஹவுஸ் (Penguin Random House Company) பதிப்பகம்.
ஒப்பரேஷன் லிபரேஷன்’ கைதி:நாம் வாழ்ந்த காலத்தில் நடந்த என்றும் எங்கள் மனங்களில் மாறாத றணமாக இருக்கும் அந்த கொடூரமான ‘ஒப்பரேஷன் லிபரேஷனானது அந்தப் பகுதிகளில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவலத்துடன் கூடிய பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது உண்மையேஅந்த வகையில் இந்தக் கதையானது ஒப்பரேஷன் லிபரேஷன் காலத்து அவரது அனுபவப் பதிவாக உள்ளது.
இலங்கையில் போர்ச்சூழல் நிலவிய காலத்தில் நூற்றுக்கணக்கில் வடபகுதி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுப் பூசா முகாமில் அடைக்கப்பட்டார்கள்.  நூலாசிரியர் மாமா பூசாவில் அடைக்கப்பட்டு, பின்னர் பூசாவிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கனடா வந்தவர். ரோய் இரட்னவேலும் அவ்விதம் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுக் கனடாவுக்குத் தனது பதினேழாவது வயதில் வந்தவர்.  சிறையில் கைதியாக இவர் அடைக்கப்பட்டபோது சித்திரவதை செய்யப்பட்டுத் துன்பத்தினை அனுபவித்திருக்கின்றார். அப்போது கைதியாக அவருக்குக் கொடுக்கப்பட்ட கைதி இலக்கம் தான் 1056.
ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவநடவடிக்கையின் மூலம்  தமிழர் நிலத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1987ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் பருத்தித்துறைக்கு வந்து 14 முதல் 40 வயதுடையை அனைத்து ஆண்களையும் சுற்றிவளைத்ததில் நான் கைதுசெய்யப்பட்டேன்.
கொடிய சிறையில் அரசியல் கைதியாக :
அவர்கள் எங்களிற்கு கைவிலங்கிட்டு சில கிலோமீற்றர்கள் நடக்கச்செய்து சரக்கு கப்பலொன்றில் ஏற்றினார்கள்.
இலங்கையின் தென்பகுதியில் உள்ள மிகமோசமான வதைமுகாமான பூசாவிற்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டோம். என்னை போல் சுமார் 2700 பேருடன் அங்கு தடுத்துவைத்திருந்தனர்.
அந்த முகாமில் நான் பலவகையான சித்திரவதைகளை எதிர்கொண்டேன். இரும்புவயர்களால் என்னை தாக்கிபைப்களால் அடித்தார்கள்  இராணுவ விசாரணையாளர்கள்.
பிளாஸ்டிக் பைப்களில் மண்ணை நிரப்பி தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ள எங்களின் கால்பாதங்களின் மீது அடிப்பார்கள்.
அதுமிகவும் வேதனையானதாக காணப்படும். மின்சார சித்திரவதைகளையும் எதிர்கொண்டோம்.
சிலரின் காதுகளில் இருந்து இரத்தம் வந்தது கண்கள் வீங்கியிருந்தன, பார்க்க முடியாத நிலையில் அவர்கள் காணப்பட்டனர். என்னை கைதுசெய்து இரண்டுமாதமாகியும் நான் எங்கிருக்கின்றேன் என்பது எனது குடும்பத்தவர்களிற்கு  தெரியாத நிலை காணப்பட்டது. சிங்கள அதிகாரியாக காணப்பட்டாலும் எனது அப்பாவின் நெருங்கிய நண்பராக காணப்பட்ட ஒருவரின் மூலம் எனது குடும்பத்திற்கு தகவலை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில நாட்களின் பின்னர் என்னை சிறைச்சாலையின்  வாயிலிற்கு அழைத்தனர் நான் எனக்கு மரணம்தான் என நினைத்தேன். ஆனால் அங்கு எனது தந்தையின் நண்பர் இராணுவசீருடையில் நிற்பதை பார்த்தேன்.
அவர் என்னை சிறையிலிருந்து விடுவித்து எனது குடும்பத்தினருடன் சேர்த்தார்.
எனது பாதுகாப்பிற்காக நான் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் என எனது தந்தை தீர்மானித்தார். எனது அம்மாவின் சகோதரர் கனடாவில் வசித்தார். எனது தந்தை இலங்கையில்உள்ள கனடா தூதரகத்திற்கு மன்றாட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார். அவர்கள் என்னை நேர்முகத்திற்காக அழைத்தனர்.நான் நேர்முகதேர்வின் போது சேர்ட்டை அகற்றி காயங்களை காண்பித்தேன்.
18 வயதில் நான் 1988ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி கனடாவின் ரொரன்டோவில் காலடிவைத்தேன்.
அவ்வேளை இலங்கையில் இந்திய படையினர் அமைதிகாக்கும் படையினர் என்ற அடிப்படையில் காலடி எடுத்து வைத்திருந்தனர். அவர்களிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையில் மற்றுமொரு யுத்தம் மூண்டிருந்தது.
தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார்:
நான் கனடாவிற்கு வந்து இரண்டு நாட்களின் பின்னர் எனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார். எனது ஒருபகுதி அவருடன் இறந்தது.
ஆனால் அவர் பெருமைப்படக்கூடிய பாரம்பரியத்தை உருவாக்கி வாழவேண்டும் என்பது குறித்து நான் உறுதியாகயிருந்தேன் என ரோய்  இரட்னவேல் தெரிவித்துள்ளார்.
கனடா வந்த ரோய்  இரட்னவேல் எல்லாக் குடிவரவாளர்களையும் போல் பல்வேறு வேலைகளையும் செய்து, மேலதிகக் கல்வி கற்று தற்போது சுயாதீனமாக இயங்கும், சொத்துக்களைப் பராமரிக்கும் பிரபல நிதி நிறுவனமான CI Global Asset Management நிறுவனத்தில் உயர் பதவியிலிருக்கின்றார்.கைதி இலக்கம் 1056 எனும் இந்நூல் இவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்.  மேலும் இந்தநூலானது பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்டதோடு மொத்தம் இருநூற்று அறுபது பக்கங்களைக் கொண்டது. மிகக் கனமான சொற்களைக் கொண்ட இந்த ஆங்கில நூலின் முதல் அத்தியாயத்தைப் படிக்கும் போதே அன்றைய அந்த கொடூரமான அனற்காத்தும் , புழுதியும், தூசும் , இரத்தமும், குண்டுகளின் சத்தமும் கத்தல்களும் கதறல்களும், சங்கிலிப் பிணைப்பும், அதில் பிணைக்கப்பட்டடோரின் மரண பயத்தை வெளிப்படுத்தும் பார்வையும் மீண்டும் கண்முன் வந்து போயின என இந்நூலைப் பற்றிய விவரணக் குறிப்பை கனடா வாசகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வெளியீடு:
அவுஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் மெல்பேர்னில் இந்நூல் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது. கனேடிய நாட்டில் அதி கூடிய விற்பனையான PRISONER #1056 நூல் இங்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது புத்தக பிரியர்களுக்கு உற்சாகமான செய்தியாகும்.
அவுஸ்திரேலியாவில் அவருடைய கதைக்குள் தன்னை அடையாளப்படுத்தவும், உற்சாகமூட்டும் விவாதங்கள் மற்றும் புத்தக கையொப்பம் ஆகியவற்றில் ஈடுபடுவதற்காக சிட்னி மற்றும் மெல்பேர்னில் இந்நூல் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது.
சிட்னி நிகழ்வு:
ஜூலை 15 சனிக்கிழமை 3 மணிக்கு
ஹோல்ராய்ட் மையம், 11-17 மில்லர் தெரு, மேரிலான்ட் (Holroyd Centre, 11-17 Miller Street, Merrylands)
மெல்பேர்ன் நிகழ்வு:
ஞாயிறு, ஜூலை 16 @ மதியம் 2 மணிக்கு விக்டோரியன் தமிழ் சமூக மையம், 44 லான்ஸ்டேல் தெரு, டான்டெனோங் (Victorian Tamil Community Hall, 44 Lonsdale Street Dandenong)
சிட்னி மற்றும் மெல்போர்ன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள கீழே உள்ள இலவச இணைப்புகளில் பதிவு செய்யவும். ஏனெனில் குறைந்த இடங்களே உள்ளன.
https://www.eventbrite.com/e/melbourne-book-launch-the-prisoner-1056-tickets-650383002067

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.