இலக்கியச்சோலை
சிட்னியில் தமிழும் சைவமும் வளர்த்த “வானொலி மாமா” நா. மகேசன்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(சிட்னியில் தமிழும் சைவமும் வளர்த்த “வானொலி மாமா” புகழ் நா. மகேசன் நேற்று ஜூன் 22ம் திகதி சிட்னியில் காலமானார்)
குழந்தைகள் சுவையுடன் படிப்பதற்கு கதைப்பாடல்களே வெகுவாகத் துணைபுரியும். திரு. மகேசன் இத்தகைய குழந்தை இலக்கியங்களை ஆக்கி எங்கள் நாட்டுக்குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்துள்ளார் என யாழ் பல்கலைக் கழக பேராசிரியர் அ.சண்முகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு கதைப்பாட்டிலும், ஆசிரியர் மகேசன் கதை கூற எடுத்துக்கொண்ட பொருள் ரசனையுடன் கையாளப்பட்டு, அதன் மூலமாக கூறவந்த போதனை தெளிவுடன் புலப்படுத்தப்பட்டுள்ளது. பாடற் சந்தம் பொருளுக்கும், சந்தர்ப்பத்துக்கு மேற்றவகையில் அமைகின்றது. இவை யாவற்றுக்கும் மேலாக குழந்தை பாடல் ஆசிரியர் மகேசன் கையாளும் நாடகப் பண்பு இக்கதைப் பாட்டுகளில், குழந்தைகள் சுவையுடன் படிப்பதற்கு வெகுவாகத் துணைபுரியும். திரு. மகேசனுன் இத்தகைய குழந்தை இலக்கியங்கள்
எங்கள் நாட்டுக்குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்துள்ளன. அதற்குரிய தகைமைகள் யாவும் அவரின் “பாட்டும் கதையும்” நூல் அதற்கு நல்லதோர் ஆதாரம் என பேராசிரியர் அ. சண்முகதாஸ் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
“வானொலி மாமா” புகழ் நா. மகேசன்:
இலங்கை வானொலியில் ‘சிறுவர் மலர்’ என்ற 45-நிமிட நேர நிகழ்ச்சி மூலம் 1965 முதல் தனது கலைப்பணியை ஆரம்பித்து, 1981 வரை விடாது நடத்தி வந்தார். இதனால் இவர் ‘வானொலி மாமா’ என சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். சிறுவர் மலர் நிகழ்ச்சியில், சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதியும், நெறிப்படுத்தியும் வந்த “வானொலி மாமா” புகழ் நா. மகேசன் ஜூன் 22ம் திகதி சிட்னியில் காலமானார்.
சிறுவயதில் நாம் வானொலியின் ஊடாக கேட்டு இரசித்த குரல், ஆற்றலும் அறிவும் கொண்ட அரிய ஆசானாக விளங்கியவர். சிறுவயதிலேயே இலங்கை வானொலியில் அவரால் தொகுத்து வழங்கப்படும் “சிறுவர் நிகழ்ச்சி ” எமமால் ரசித்து அனுபவித்த நிகழ்வு இன்னமும் பலருக்கு நினைவிருக்கும்.
இலங்கையின் சிறுவர் இலக்கிய வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் கூட இவரை நன்கு அறிந்திருப்பார்கள்
இவரது இயற் பெயர் நாகலிங்கம் மகேசன். அக்கால பள்ளி மாணவர்கள் இவரை வானெலி மாமா என்றே அழைத்தனர். சிறந்த முறையில் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்தி வந்தவர்.
பிள்ளைக் கவியரசு அழ. வள்ளியப்பா போன்ற அறிஞர் பெருமக்களால் பாராட்டப்பட்ட இவர் சிட்னியில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தவர்.
சிட்னி தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அளப்பரிய பணி:
தமிழும் சைவமும் கண்ணென வாழ்ந்த வானொலி மாமா யாழ் மண் பெற்ற சிறந்த கல்விமான். சிட்னி சைவமன்றக் காவலர், கலைஞர், பழந்தமிழ் இலக்கிய விற்பன்னரும் கூட. அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த பல ஆண்டுகள் அரிய நிகழ்சிகளை நடாத்திய அறிஞர் நா.மகேசன் அவர்களாவார்.
வானொலி மாமா தமிழுக்கும், சிட்னி தமிழ் சமுகத்திற்கும் ஆற்றிய அளப்பரிய பணிக்கு எமது சமுகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.அவர் ஆற்றிய உயரிய சேவைகளால் , எம்மவர் மனங்களில் என்றும் வாழ்வார்.அத்துடன் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து ஆகிய நாடுகளிலில் தமிழ் மாணவர்களுக்காக இவர் ஆற்றிய பணி அளப்பரியது.
சிட்னி முருகன் கோயில், சைவப் பாடசாலைகள், தமிழ்க் கல்வி நிலையங்கள், அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் மூலம் பல சமூகப்பணியாற்றினார். சிட்னி சைவர்களுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
பல வருடங்களாக சைவர்களின் இறுதிக்கிரியைகளை திருமுறைகள் பாராயணம் செய்து இதற்காக புத்தகம் தயாரித்து வெளியிட்டார். இது உலகளாவிய ரீதியில் பாவிக்கப்படுகின்றது.
சிட்னியில் தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி நியூ சவுத் வேல்ஸ் அரசு 2006 இல் அவருக்கு “THE ACHIEVER” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் இலக்கியம் படைத்த நா. மகேசன்
சிறுவர்களுக்கான நூல்கள் எழுத வேண்டுமென்று கனவு கூடக் கண்டவனல்ல எனக் கூறும் நா. மகேசன், ஆனல் இன்று தெய்வாதீனமாக அப்படியான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவணுக இருக்கிறேன் என தனது “பாட்டும் கதையும்” நூலின் என்னுரையில் எழுதியுள்ளார்.
“வானொலி மாமா” நா. மகேசன் மேலும் கூறுகையில், நமது நாட்டில் சிறுவர்களுக்கான நூல்கள் வெளிவருவது மிகக் குறைவு. புத்தகவெளியீட்டுத் தாபனங்களும் சிறுவர் இலக்கியங்களில் அதிகம் அக்கறை எடுப்பதும் இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை. இந்நிலையில் தனிப்பட்டவர்களின் முயற்சிகள் விருத்தியடைவதில்லை. நூல்களைச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிடுவது தனிப்பட்டவர்களுக்கு இயலாத கருமம். இருந்தாலும் இயன்ற மட்டில் சிறுவர் நூல்களைப் பயனுள்ளனவாகவும் சிறப்புடையனவாகவும் அமைக்க வேண்டும் என்பதே எனது ஆவல்.
முடிவான ஒரு கதையை இப் பாடல்கள் கூருவிட்டாலும் அவற்றின் சொல் நயமும் பொருள் நயமும் சிறுவர்களுக்குப் பயன் தருமென்பது என் நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார்.
கலைப்பணியில் நா. மகேசன்:
சிறுவர் நாடக விற்பன்னரான மகேசன் ஈழத்தில் 1933 இல் பிறந்த இடம், யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு ஆகும். மேடை நாடக விற்பன்னரும் பல பயனுள்ள நூல்களைப் படைத்தவர். வானொலி மாமா அவர்கள் நாகலிங்கம் – சின்னம்மா தம்பதிகளுக்கு ஐந்தாவது மகவாகப் பிறந்தவர்.
“வானொலி மாமா” நா. மகேசன் இளவாலை சென் ஹென்றிஷ் கல்லூரியில் கல்வி பயின்றார். இலங்கை அரசாங்க கணக்காளர் சேவையில் கணக்காளராகப் பணிபுரிந்த அவர் தன் கைப்பட எழுதிய கவிதை ஒன்றில் பின்வருமாறு எழுதி உள்ளார்.
நாட்டில் வழங்கி வரும்
நல்ல பல கதைகளையே
பாட்டும் கதையுமென்றிப்
பனுவல் தனிற்சேர்த்து
வீட்டின் சிறுவரெல்லாம்
விரும்பிக் கற்றின்புறவே
நாட்ட மிகவும் கொண்டு
நவின்றேன் பா நயமறியேன்.
சும்மா இருக்கும் சுகமறிய
மாட்டாமல் எம்மா தவத்தோரின்
பாமரபைக் கல்லாமல்
இம்மா நிலத்திற் கவிபுனைய
நான் வந்தேன் அம்மா
பிழைபொறுப்பீர்
அறிவுடைய பெரியோரே.
ஓசை நயமொன்றே உறுதுணை
ஆகுமென்றென் ஆசை
மிகுதியினுல் ஆக்கினேன்
இப்பாக்கள் காசைக்
கொடுத்திந்நூல் கருனையொடு
பெற்றவர்கள் பூசைக்கு
மலர்கொடுத்த
புண்ணியம்தாம் பெறுவாரே.
‘பாட்டும் கதையும்’ சிறுவர் நூல்:
திரு. நா. மகேசன் எழுதி வெளியிட்ட ‘பாட்டும் கதையும்’ என்னும் இப்புத்தகம் சிறுவர் இலக்கியத் துறையில் நிலவும் தேவையினை ஒரளவு நிறைவேற்ற முற்படுகிறது. இதில் உள்ள பாட்டுகள் சிறுவர்களுக்கு மிகவும் ஏற்றவை. ஏனெனறால், இவை மிகவும் இலகுவான சொற்களால் ஆனவை; எளிமையான ஒசை அமைப்புக் கொண்டவை. அத்துடன் சுவையான கதைகளையும் சொல்வனவாய் உள்ளவை.
முதலில் உள்ள “எல்லாம் தெரிந்த எமநாதர்” ஒரு முசுப்பாத்தியான கதை. ‘ஆணு அறிந்த அந்தோனியார் கதை, சிங்கள மக்களிடையே வழங்கும் “மகதன முத்தா கதை என்பனவற்றை எமநாதரின் கதை நினைப்பூட்டுகிறது.
‘இராசா வீட்டு முற்றமதில் நனைந்த சீனி காய்ந்ததுவே.” என்ற பழம்பாட்டிற் சொல்லப்பட்டு வந்த வேடிக்கைக் கதையொன்றினையே ஒரு புதிய பாட்டாக ‘எங்கள் வாயில் மண்ணடர்” என்ற தலைப்பிலே பாடியுள்ளார் அன்பர் மகேசன், “சும்மா தின்றன் பழம்” என்ற பாட்டில், புத்திசாதுரியமுள்ள கெட்டிக்காரச் சிறுவனெருவனை நாம் சந்திக்கிறோம். “ஆபத்தில் நண்பன்’, ‘நல்லோர்க்கு அழகு’, ‘புள்ளிமானின் சுள்ளிக் கால் கள் முதலிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நீதிபோதனை செய்கின்றது. இந்த நீதிகளெல்லாம் கதை வாயிலாகப் பாட்டுருவிலே புகட்டப்படுவது, இதனைப் படிக் கும் சிறுவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
‘பாட்டும் கதையும்’ என்னும் இச் சிறுவர் நூல், ஒரு பிரதானமான தேசிய பண்பாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யமுற்படுகிறது. ஆகையால் இது மனமுவந்து வரவேற்கத்தக்கது என
இ. முருகையன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
திரு. நா. மகேசன் எழுதி வெளியிட்ட நூல்கள்:
குறளும் கதையும் (சிறுகதைகள், 1973),பாட்டும் கதையும் (கதைப்பாடல்கள், 1974),முனியன் முரளிகானன் (குறுநாவல், 1977),ஆத்திசூடி அறநெறிக் கதைகள் (1978),உடைந்த உள்ளம் (நாவல் – 2 பாகங்கள், 1979),அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி (சிறுவர் கதைத்தொகுதி, 1991),திருமுறையும் திருக்கதையும் (தேவார விளக்கக் கதைகள், 1994),பாலர் நாடகங்கள் பத்து (1995),நாடகக் கவியரங்கு நாலு (சிறுவர் கவியரங்குத் தொகுதி, 1995),ஆறுமுகமான பொருள் (திருப்புகழ் விளக்கம், 1995),திருவிழா (சிறுவர் சைவ சமய நாவல், 1996),A Glimpse of Saiva Religion (சைவ சமய விளக்கம், 1996),சிறுவர் பாடல்கள் (அவுஸ்திரேலியப் பின்னணியில் சிறுவர் பாடல்கள், 1997),சைவசமய குரவர் போற்றி மாலை (போற்றித் துதி, 1998),சைவசமய இறுதிச் சடங்கு – நடைமுறையும் விளக்கமும் (1998),சிட்னி முருகன் பிள்ளைத் தமிழ் (பிரபந்த நூல், 1999),ஔவை வந்தால்.. (மாணவர் மேடை நாடகங்கள், 2001) ஆகியன திரு. நா. மகேசன் எழுதி வெளியிட்ட நூல்களாகும்.
கவிஞர் இ. முருகையனின் முன்னுரை:
ஈழத்தில் எழுத்தறிவு மிக்கவர்களின் விகிதாசாரம் உயர்ந்தது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆசிய நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது, ஈழத்தவர்களின் எழுத்தறிவையிட்டு நாம் பெருமைப் படலாம்.
எனினும், எம்மவர்கள் இந்த எழுத்தறிவினைத் தக்க அளவுக்குப் பிரயோகிக்கிருர்களா? எம்மவரின் வாசிப்புப் பழக்கம் எவ்வாறுள்ளது? இவ்வாறன கேள்விகளை எழுப்பு வோமானல், அவற்றுக்குக் கிடைக்கும் விடைகள் திருப்திகர மானவையாக இல்லை.
எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் அத்திறமையினை வீண் போகாமற் பயன்படுத்த வேண்டும் , எழுத்தறிவைத் தகுந்த வாறு பயன்படுத்துவதற்கு, வாசிக்கத் தகுந்த நூல்களும், பிர சுரங்களும் பெருந்தொகையில் அவசியமாகும். இதனை மகத் தானதொரு தேசிய பண்பாட்டுத் தேவை என நாம் விபரிக்கலாம்.
இத் தேசிய பண்பாட்டுத் தேவை, எங்கள் நாட்டிலே வளர்ந்தோர் இலக்கியம், சிறுவர் இலக்கியம் ஆகிய இரண்டு துறைகளில் உண்டு. ஆயினும், சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இது மிகப் பெருந்தேவையாக உள்ளது. என்பது பலரும் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும்.
சிறுவர்களுக்கெனப் பள்ளிப்பாட நூல்கள் வெளிவருகின்றன. வாசிப்பு, எழுத்து, கருணிதம் முதலான பாடங்களைப் புகட்டுவதற்கு இவை உதவும். ஆனல், இவை போதுமா? இல்லை. இல்லவே இல்லை.
பாடநூல்களைத் தவிர்ந்த சிறுச்சிறு நூல்கள் சிறுவர்சளு க்கு வேண்டும். அவர்கள் வாசித்துப் பழகுவதற்கு மட்டுமன்றி, பாடி மகிழ்வதற்கும் பார்த்துக் களிப்பதற்கும் புத்தகங்கள் வேண்டும். வாசிப்பதற்கு இலகுவான, பெரிய, தெளிவான எழுத்தில் அவை அச்சிடப்படல் வேண்டும். நெஞ்சை அள்ளும், சித்திரங்கள் நிறைந்தவையாக அவை இருத்தல் வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விழுமிய கருத்துக் களையும் விரும்பத்தக்க சொல்லாட்சியையும் உடையவை யாக அவை அமைதல் வேண்டும். இப் பண்புகளெல்லாம் வந்து பொருந்துமானல், பொன்னுற் செய்த மலர் நறுமணம் பரப் புவதுபோல் ஆகும். “பொன் மலர் நாற்றம் உடைத்து” என்று குமரகுருபரர் கூறிஞரே- அதுபோல் ஆகும். அத்த கைய பண்பு வாய்ந்த புத்தகத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் மனமுவந்து வரவேற்கும் என இ. முருகையன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைக் கவியரசு அழ. வள்ளியப்பாவின் அணிந்துரை:
கதைப் பாடல்களுக்கே ஒரு தனி மகிமை உண்டு. தமிழிலே குழந்தைகளுக்கான பாடல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நன்கு பெருகி வந்த போதிலும், கதைப்
பாடல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆங்கிலத்தில் உள்ளவை போல,தமிழ் மொழியிலும் கதைப் பாடல்கள் (Story Poems) பெருமளவில் வெளிவர வேண்டுமென்று குழந்தைகள் விரும்புகின்றனர். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்து வைக்கும் நற்பணியில் பங்கேற்க முன் வந்துள்ளார் கவிஞர் நா. மகேசன் அவர்கள்.
கதைப் பாடல்கள் எழுதுவது கடினம். அதிலும், நகைச் சுவைப் பாடல்கள் எழுதுவது மிகவும் கடினம். ‘எல்லாம் தெரிந்த எமநாதர்”, “எங்கள் வாயில் மனனடா? இரண்டும் நகைச்சுவை ததும்பும் நல்ல பாடல்கள்.
பசித்தோர்க்கு உதவுவதே, ஆண்டவனுக்குச் செய்யும் அரிய தொண்டு என்பதை உணர்த்தும் வகையில், “அற்ருர் பசியை அகற்றுக’ என்னும் பாடலில்;’பசித்தோன் உண்ட பழங்கள்தான் பழனி ஆண்டார்க்கு எட்டிற்று”என்று கவிஞர் அழகாகக் குறிப்பிடுகிருர், இப்பாடலும் “குட்டிச்சிவலிங்கன்’ என்னும் பாடலும் உள்ளத்தைத் தொடுவன.
பாட்டியின் முன்னுல் ஒரு போட்டி நடக்கிறது. அப் போட்டியில் ரவியும், மலரும் பன மரத்தைப் பற்றிப் போட்டி போட்டுக்கொண்டு பாடுவது, பன நுங்கு போலச் சுவையாக உள்ளது.
அடேயப்பா பனமரத்தின் உபயோ கத்தை எப்படி எப்படியெல்லாம் எடுத்துக் கூறுகிறர்கள். எங்கள் பாட்டி, கற்பக தருவென்றுனையழைப்பாள் காசினி மருந்தென்றுனைப்புகழ்வாள்’ என அவர்கள் கடைசியில் சேர்ந்து பாடுகிறார்கள்.
அவர்களைப் போலவே, இப்பாடலைப் படிக்கும் மற்றக் குழந்தை களும் மகிழ்ச்சியுடன் பாடத் தொடங்குவர் என்பதில் ஐயமில்லை.
இப்படிப் பயனுள்ள கதைப் பாடல்களைப் பாலர் உலகுக்கு அளித்துள்ள கவிஞர் மகேசனப் பாராட்டு வது தமிழறிந்தோர் கடமையாகும்.
மேன் மேலும் பலகதைப் பாடல்களை அவர் இயற்றி, குழந்தை இலக்கியம் செழிக்கச் செய்வாராக என
அழ. வள்ளியப்பா வாழ்த்தி உள்ளார்.
பேராசிரியர் அ. சண்முகதாஸின் அணிந்துரை:
குழந்தைகளைப் பாடிய பாடல்கள் தமிழிலே பெருவாரியாக உண்டு. பாண்டியன் அறிவுடை நம்பி தொடக்கம் இன்றுவரை தமிழ்ப்புலவர்கள் குழந்தைகளைப் பற்றிப் பாடி வந்திருக்கின்றனர். குழந்தைகளைப் பற்றிய பல இலக்கியங்கள் கமிழ் மொழியிலே இருப்பினும், குழந்தைகளுக்கெனப் பாடப் பட்ட இலக்கியங்கள் மிக அருகியே காணப்படுகின்றன.
குழந்தைகளுக்கு இலக்கியம் படைப்பதற்கு விசேட திறமை வேண்டும். பாரதியார் படைக்கும் கண்ணன் தன் தாய் கதை சொல் லுவதைக் கூறும்போது,
‘இன்பமெனச் சில கதைகள் எனக் கேற்ற மென்றும் வெற்றியென்றும் சில கதைகள் துன்பமெனச் சில கதைகள். கெட்ட தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள் என்பருவம் என்றன் விருப்பம்- எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்போடவள் சொல்லி வருவாள்.” என்கிருர்.
குழந்தைகளின் பருவத்தினையும் அவர்கள் விருப்பத்தினையும் அறிந்து இலக்கியம் படைப்பதில்தான் தனித்திறமை தங்கி யுள்ளது. திரு. நா. மகேசன் குழந்தைப் பருவமறிந்து, அவரின் விருப்பமுணர்ந்து, அவற்றினுக்கிணங்க அக்குழந்தையின் உளமறிந்து, அன்போடு பாட்டுகளும் கதைகளும் படைக்கும் வல்லமை உடையவராயுள்ளார்.
இலங்கை வானெலியிலே பல வருடங்களாகச் சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தயாரித்து வானெலி மாமாவாக குழந்தைகள் உலகிலே ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட திரு. மகேசன் குறளும் கதையும் என் தனும் நூலைச் சென்ற ஆண்டு அக்குழந்தை உலகுக்கு அளித்தார். அவர் பாட்டும் கதையும் என்னும் இந்நூலை அளிக்கின்றார். குழந்தைகள் கற்பன சக்தி மிகுதியாக உடையவர்கள். அவர்களுடைய கற்பணு சக்திக்கு விருந்தளிப்பது போல இவ ருடைய கதைப்பாடல்கள் அமைகின்றன.’வத்தகைப் பழம்’ என்னும் கதைப் பாட்டு பிள்ளைகளின் மனத்தைக் கவர்ந் ததை நான் நேரடியாக என் அனுபவத்திலே கண்டு கொண்டேன்.
இந்நூல் கிடைத்தவுடன் படித்த நான், அடுத்த நாள் குழந்தைகளுக்கு ஒரு சிறிய சொற்பொழிவு ஆற்றும் பொழுது இக்கதைப் பாட்டினை வேண்டுமென்றே அவர்களிடம் கூறினேன். என்னுடைய நண்பர்கள் சிலரின் குழந்தைகள் அக்கூட்டத்திலே இருந்தனர். கூட்டம் முடிந்து சில மணித் தியாலங்களின்பின் அந்நண்பர்கள் வீட்டுக்குச் சென்று, கூட் டத்தினைப் பற்றி அவர்கள் குழந்தைகள் என்ன கூறினர்கள் என்று நான் கேட்பதற்கு முன்னரே ‘வத்தகைப் பழக்கதை’ யைக் குழந்தைகள் மூலமாக அறிந்த தந்தைமார் எனக்கு ஒப்புவிக்க முனைந்தனர்.
குழந்தைகளை இக்கதை கவர்ந்துவிட் டது என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கின்றது? திரு. மகேசனின் ஏனைய கதைப்பாட்டுகளும் இவ்வாறே குழந்தைகளைக் கவரக் கூடியன என்று துணிந்து கூறலாம்.
குழந்தைகளுக்கேற்ற வகையில் எளிய தமிழ்ச் சொற் களில் இனிமையான சந்தத்தில் கவிதைகளை அமைத்த போதும் பண்டைய இலக்கியச் சுவைக்கும் பாமர இலக்கியப் பண்புக்கும் அவற்றிலே குறைவில்லை.
‘‘அட்டைக் கடியும்
அதிக வழிநடையும்
கட்டை இடறலும்
காணலாம் கண்டியிலே’
என்னும் மலையகக் கிராமியப் பாடலமைப்பு திரு. மகேசனின் “குட்டிச் சிவலிங்கன் ” என்னும் கதைப்பாட்டில்,
‘கட்டைகால இடறுகின்ற
கண்டிபோன்ற ஊரிலும்
அட்டைக்கடி அதிகமான
அப்புத்தளை மேவியும்’
என்று அமைந்துவிடுகின்றது.
எங்கள் நாட்டின் பொதுச் சொத்துக்களை எங்களுடைய பொருள் போல உபயோகிக்கும் மனப்பாங்கு பலரிடம் காணப்படாமல் உள்ளது. இத்தகைய மனப்பாங்கு குழந்தைப் பருவத்திலிருந்தே வளரவேண்டும். அதற்கேற்ற வகையில் ஆசிரியர் ‘பள்ளிக்கூட பஸ்வண்டி’ என்ற கதைப்பாட்டினை அமைத்துள்ளார்.
உள்நாட்டில் எமக்கு நல்ல பலன்தரக் கூடியது பனை. அப்பனைமரத்தின் பல்வேறு பயன்களையும் குழந்தைகள் விரும் பும் வசையிலே “பனையின் கதை” கூறுகின்றது என பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் வழங்கிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.