இலக்கியச்சோலை

வடமராட்சி ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’: துயர் படிந்த மண்ணின் வரலாற்றை பதியும் வரிகள்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(வடமராட்சி! சோகங்களின் அதி உச்சங்களை சுமந்த மண்! வீரத்தின் வித்துக்களையும் பிரசவித்த மண்)1987 மே மாதம் 26 ஆம் நாளில் யாழ் குடாநாட்டில் “ஒப்பரேஷன் லிபரேஷன்” நடவடிக்கை இடம் பெற்றது. வடமராட்சியில் ஆரம்பமாகியஇந் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் 1987 ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில், அச்சமயம் போராளிகளன் கட்டுப்பாட்டிலிருந்து யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள வடமராட்சியைக் கைப்பற்றும்நோக்கில் வலிந்த தாக்குதலாகும். வடமராட்சி பிரதேசத்தில் 1987 ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில்  நடைபெற்ற லிபரேசன் ஒப்பரேசன் வன்செயல் நடவடிக்கையின் போது பல நூறு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இலங்கை இராணுவம் மேற்கொண்ட முதல் மரபுப் போர் இதுவாகும்.இந்நடவடிக்கைக்கு பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ,கேர்னல் விஜய விமலரத்ன இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியிருந்தனர்.1987 மே 27 இல் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கை எனப்பொருள்படும் ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்டது.5 நாட்கள் நீடித்த இராணுவத்தரப்பில் இந்த நடவடிக்கை கொப்பேகடுவ வழிகாட்டலில் இந்த அப்பாவித் தமிழர்களை வீடுகளில் இருந்து விரட்டி அடிக்கும் இனவாத நடவடிக்கையாக அமைந்தது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பலாலியில் இருந்து வெளிவந்த இராணுவத்தினர் வசாவிளான், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடித்தழிக்கப்பட்டது.மேலும் பல அப்பாவித் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களைப் பலாத்காரமாகப் பறிமுதல் செய்து பலாலி விமானநிலையமும் விஸ்தரிக்கப்பட்டது. இன்றும் இப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புவதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.இந்த இராணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் தலையீடு வேண்டும் எனக் கோரக் காரணம் ஆயிற்று. இந்த இராணுவ நடவடிக்கை அடுத்தே 1987 இல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வந்தது. 1987 இற்கு முற்பட்டகாலப்பகுகியில் சிறிலங்கா இராணுவம் அவர்களின் முகாம்களுக்குள்ளேயே தமிழர் இயக்கங்களினால் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். தொண்டமானாறு, வல்வெட்டித்துறை இராணுவ முகாம்களினூடாக முன்னேறிய ஸ்ரீலங்கா இராணுவத்தினர், வடராட்சிப் பிரதேசத்தையே ஆக்கிரமித்தனர்.இந்த இராணுவ நடவடிக்கை வடமராட்சியுடன் இடைநிறுத்தப்பட்ட போதும் இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் முழு யாழ்ப்பணத்திற்கும் ஆனதாகக் கருதப்படுகின்றது.நாளைய சந்ததி இவ்வரலாறுகளை மறக்காமல் இருக்கவும், வரலாற்றின்  துயர் படிந்த நாட்களை மீள நினைவு கொள்வதும் தமிழ் மக்களின் கடமையாகும். வடமராட்சியில் நடந்தேறிய ‘ஒப்பரேசன் லிபரேசன்’ துயர் படிந்த நாட்களை வரலாற்றுத் தடங்களில் பதித்ததில் “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பு ஒரு சான்றாகும்.காற்றுக் கூட அனலாக வீசிக்கொண்டிருந்த 1987 காலகட்டம். அவ்வேளையிலும் விடியலை நோக்கிய எழுச்சியில் சண்டமாருதமாய் எழுந்து நின்ற இளங் கவிஞர்களின் படைப்பே “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாகும். ஐந்து நாட்கள் நீடித்த இராணுவத் தரப்பில் இந்த நடவடிக்கை கொப்பேகடுவ வழிகாட்டலில் இந்த அப்பாவித்்தமிழர்களை வீடுகளில் இருந்து விரட்டி அடித்த நடவடிக்கையாக்அமைந்தது.  இந்த  நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்தனர். இருண்டு போன வடமராட்சி மண்ணின் வாழ்மியத்துக்கு ஒளியை ஊட்டுவதற்கு எழுதகோலை உயர்த்திப் பிடித்த கவிஞர்களின் உள்ளக்குமுறலாய் “கல்லறை மேலான காற்று” சாட்சியம் பெறுகிறது.• ஞானசேகர்• குருபரன்• அகிலன் திரு• நாடி• இரா. ஜனகன்• சடாவதணன்• கா.யோ. கிரிதரன்• தலவாக்கொல்லை சௌந்தரராஜன்ஆகிய எட்டு வளருங்கவிஞர்களின், நம் மண்ணின் கொடூரமான நிகழ்வுகளை நினைவு கூறும் கவிதைத் தொகுப்பாக மிளிர்ந்தமை இன்னோர் சிறப்பாகும்.ஈரோசின் மாணவ அமைப்பான”மாணவர் இளைஞர் பொது மன்றத்தால்”  (GUYS) 1988 இல் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் அடங்கிய அனைத்தும் எரிதழல் கவிதைகள். படிப்பவர் நெஞ்சில் உணர்ச்சிப் புயலை எழுப்புகின்றன. இவற்றை எழுதியவர்கள் இளம் வளருங்கவிஞர்கள். அவர்கள் ஈழத்தமிழரின் மானுட வாழ்வை தனித்து நின்று பார்க்காமல், போராடும் மக்கள் மத்தியில் நின்று, அவர்களின் துயர துக்கங்களில் பங்கேற்று, மண்ணின் வாசனையைகவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் காணக் கூடியதாக உள்ளது. தமிழர்களை பீரங்கிகளுக்கு இரையாக்கி, ஈழ தேசத்தை பிணக்கோலமாக்கி, குண்டுமாரி பொழிந்து கொலைக்கூத்து நடந்தேறிய காலகட்டமது. இனப் பகைமையில் மனித உயிர் மலினமாகிப் போனது. இனவெறியின் வேட்டைக் களமாய் வடமராச்சி மாறிவிட்ட கழிவிரக்க நிலையில், ஒரு கவிஞனின் தீனக்குரல் எழுகிறது.இனிய வடமராட்சிமீன்கள் துள்ளும்கடலலை ஓரம்பேய்கள் குவியும்பிணங்களை உருட்டும்தேடுதல் வேட் டையின் பேரில்தேவைகளை தீர்த்துக்கொள்ளும்..சோதனை என்னும் பெயரில்பெண்களை சுவைத்துப் பார்க்கும்என மனம் கசியும் கண்ணீர்த்துளிகளே இவ்வரிகள்.மேலும் பல அப்பாவித் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களைப் பலாத்காரமாகப் பறித்து இராணுவ ஆதிக்கம் விஸ்தரிக்கப்பட்டது.  இன்றும் பறிமுதல் செய்த இப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளத்்திரும்புவதற்கானஉரிமைகள் மறுக்கப்படுகின்றன.இந்த நடவடிக்கையில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.  இந்த இராணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு அதீதமான அநீதிகளே இழைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஈழ மக்கள் வாழ்வின் அவலத்தைச் சொல்லிதாயே.. அம்மா…முடியாது வரலாறு…முள்வேலிக்கப்பால்உன் வரலாறு…நீயே தொடர்ந்து கொள்!..என ஈழ மக்கள் வாழ்வின் அவலத்தைச் சொல்லி, போரின் கோர முகங்களை உலகிற்கு பறை சான்றுகிறான் இன்னோர் கவிஞன். கல்லறை மேலான காற்று, எக்காலமும் நினைவுகள் அழியாத அனல் வீசும் கவிதைக் கணைகளாகவும்,மானுட நேசம் மிகுந்து வரும் தென்றலாகவும் தவழ்கிறது. சண்டமாருதமாகவும் சீறுகிறது.கல்லறைக்குள் புதைந்தவர்கள்ஊமைகளல்லவிடிவு காணசாவை துச்சமென்றுகருதி போராடிய போராளிகள்என முழங்குகிறது. தமிழ் மண்ணில் நிகழ்ந்த இவ் வரலாற்றுப் படுகொலை நிகழ்வை சரித்திரமாக வரைந்த கவிதைகளாகவும் நாம் உணரலாம் .விமானம்,தரைவழி, மற்றும் கடல்வழித் தாக்குதல்கள் என மும்முனைகளிலும்படையினர் முன்னேறிச் சென்ற வழிகளில் பலநூற்றுக்கும் மேலும் தமிழ் இளைஞர்களையும் கைது செய்துகப்பலில் ஏற்றி புதிதாக திறக்கப்பட்ட “பூசா”தடுப்பு முகாமுக்கு ஏற்றிச் சென்றனர்.அங்கே கொண்டு செல்லப்பட்ட நூற்றுக் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்கள் இதுவரையில் திரும்பவேயில்லை.அதேவேளை போகும் வழியெங்கும் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடுகள் இன்றி சுட்டும் எரித்தும் படுகொலைகள் செய்யப்பட்டனர். இவ்வாறு ஈழத்தமிழர் சாவின் பிடியில் தத்தளித்த நிலையினைஆண்டவனும் தோற்றான்அரசபயங்கரவாதத்திற்குமண்ணில் ஒவ்வொருதுகளும்அந்நியர் கால்களில்நசுங்கிப் போனதும்எங்கள் கால்களை இழந்துஎங்கள் முகங்களை இழந்துஎங்கள் பரம்பரையை இழந்துஆத்மாவை மாத்திரம்நகத்தின் இடுக்கில் ஒளித்துஇன்று வரையிருப்பதைஎப்படி மறப்போம்?என்கிறான் இன்னோரு கவிஞன். “கல்லறை மேலான காற்று” அள்ளி எரியும் நெருப்புப் துகள்களின் மீதான வருடல்களின் நெருடலாக உணர்ச்சியூட்டுகின்றது. சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் மரணத்தின் உலைக்களமாய் ஈழம் உருமாறிய கோரச்சூழலை, ஈழத்தமிழரின் புராதன பெருமை வாய்ந்த கலாச்சார சின்னங்களை அழித் தொழிக்கப்பட்ட குரூரத்தை இன்னொரு கவிதை இப்படி சித்தரிக்கிறது.கோயில்களையும் தூளாக்கியகொடுமை…கொடுமைபயந்தோடி பதுங்கு குழியில்பயங்கரவாதிகளாக்கப்பட்டமழலைகளை மறக்கமனம் மறுக்கிறது.,மாண்டாண் வெளிகளில்மண்ணே வெடிமருந்தாகமணக்கிறது…,முலைப்பாலை குடிப்பதற்குள்மூச்சை நிறுத்தியமுப்படைத் தாக்குதல்…தாயை.. தகப்பனை…தமயனை..,,வீட்டு நாயைக்கூடஇழந்தோம்.என உள்ளம் பொங்க குமுறுகிறான். இந்நூலின் முன்னுரையில் அல்வாய் கலாமணி மேலம் குறிப்பிடுகையில், வடமராட்சியில் நட்ந்தேறிய ஒப்பரேஷன் லிபரேஷன் கொடுமைகளின் கோரங்களையும் சிதைவுகளையும் நினைவு கூர்வாகக் கொண்டு வெளியாகும் இக்கவிதைகளஎழுதியவர்கள் இளங்கவிஞர்கள் என்பதும் இத்தனை அழிப்புகளுக்கு மத்தியிலும் அதன்வேகத்துக்கு ஈடுகொடுத்துக் கொண்டு புதியவர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமாகும். இக்கவிதைகள் யாவுமே, இராணுவக்கொடுமைகள் எம்மிடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை வெளிக் காட்டி, வடமராட்சியில் நிகழ்ந்த கொடுமைகளைக் கூறும் வகையிலும் வரலாற்று ஆவணமாகவும் இதற்கு ஓர் இடமுண்டு என முன்னுரையில் அல்வாய் கலாமணி குறிப்பிட்டுள்ளார்.            • ஐங்கரன்  விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.