ஈழத்து இசையமைப்பாளர் கண்ணன் மாஸ்டர் (கண்ணன் இசைக்குழு) கா. யோ. கிரிதரன்
கண்ணன் இசைக்குழு இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஓர்இசைக்குழுவாகும். “கண்ணன் கோஷ்டி” என்று இது மக்களால் அழைக்கப்பட்டது.
கர்நாடக இசை, பொப் இசை, மெல்லிசை, பக்தி இசை, திரையிசை, நாடக இசை எனபல்திறமை கொண்ட ;இசைவாணர் கண்ணன் என்பவரால் இக்குழு வழிநடத்தப்பட்டது.
இவ்வாறு சினிமாப பாடல்கள், மெல்லிசை, திரையிசை, நாடக மேடைப் பாடல்கள்,மண்ணின் பாடல்கள் என்று இசையே வாழ்வாகவும், வாழ்வே இசையாகவும் வாழ்ந்துவரும் ஒரு மாபெரும் இசைக் கலைஞன் கண்ணன் .
இவரது இசைக்குழுவில் தோல் வாத்திய கலைஞர்களாக அப்பி, பபி என்றஇரட்டையர்களும், ராதாகிருஷ்ணன் (வயலின்) , சிவபாதம் (மிருதங்கம்), கலாமணி(புல்லாங்குழல்), சந்தானம் (தபேலா), சனூன் (எக்கோடியன்) மற்றும் காந்தன், சகாதேவன்போன்ற இசைக்கலைஞர்களுடன் கிருஷ்ணமூர்த்தி, ஈழத்து சௌந்தரராஜன் என்றுஅழைக்கப்பட்ட பொன்னம்பலம், ஈழத்து சுந்தராம்பாள் என்று அழைக்கப்பட்டகனகாம்பாள் சதாசிவம், நாகர்கோவில் விஜயரட்னம், அமுதன் அண்ணாமலை, ஸ்ரனிசிவானந்தன் போன்றவர்களும் இணைந்து தமது பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
கண்ணன் இசைக்குழுவை நடத்திவந்த திரு.கண்ணன் அவர்கள் மேடை நாடகங்களுக்குஇசையமைக்கும் வாய்ப்பை பெற்று நாச்சிமார் கோவிலை சேர்ந்த “வண்ணக்கலைவாணர்”நாடகக்குழுவிற்கும், அதன் பின்னர் புகழ்பெற்ற நாடக இயக்குனர் நட்சத்திரவாசிபாலேந்திராவின் யுகதர்மம், முகம் இல்லாத மனிதர்கள், துக்ளக் போன்ற நாடகங்களிற்கும்இசையமைத்துள்ளார்.
இதன்பின்னர் இசையமைப்பாளர் றொக்சாமியுடன் இணைந்து இலங்கை வானொலியில்பணியாற்றினார்.
திரு. கண்ணன் ( இயற்பெயர் கோபால கிருஷ்ணன் ) அவர்கள் ஈழத்தில் யாழ்ப்பாணம்நாச்சிமார் கோவில் என்னும் இடத்தில் 1943. 04. 29 ல் பிறந்தவர்.இவர் ஆரம்பக் கல்வியை மெதடிஸ்த மிஷன் பெரியபுலம் பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ் இந்தக் கல்லூரியிலும் கற்றவர்.
இவரது தந்தை சக்கரபாணி என்ற முத்துக்குமார் அவர்கள் நாடகங்களுக்குத் தபேலாவாசிக்கும் கலைஞனாக விளங்கியவர். அந்த நாட்களில் இந்தியாவில் இருந்து வரும்நாதஸ்வரக் கலைஞர்கள், நாடக கலைஞர்கள் இவரது வீட்டில் தங்குவது வழக்கமாகஇருந்தது. இக் கலைஞர்களின் தொடர்பும், செவி வழிப் பயிற்சியும் கண்ணன் அவர்களைத்தானும் ஒரு இசைக்கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தின.
இவர் தனது ஆரம்ப இசைப்பயிற்சியைப் புலவர் உடுவில் சண்முகலிங்கம் அவர்களிடமும்நாதஸ்வர வித்துவான் கோவிந்தபிள்ளை அவர்களிடமும் பெற்றார்.பின்னர் சிதம்பரம் வீணை கிருஸ்ணமூர்த்தி அவர்களிடமும் வேலணை சங்கீதபூஷணம்இராஜலிங்கம் அவர்களிடமும் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டினை முறையாகக் கற்றுத்தேர்ந்தார்.
கார்மோனியம், எக்கோடியன், சித்தார், ஓகன், மற்றும் சாகிய் பாஜா என்ற மைசூர்வாத்தியம் போன்ற இசைக்க கருவிகளை வாசிக்கும் விற்பனராகி அவர் ஒரு இசைப்பித்தன் ஆனார். மேலும் இவர் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, வாட்டர் இசை,மேலைத்தேய இசை, ஆகியவற்றில் வல்லவராகத் திகழ்ந்தார்.
தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு முழு நேரமும் தன்னை இசையில்ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். இசைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றஎண்ணம் அவர் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அவருடைய எண்ணத்திற்கமையச் சூழலும்உருவாகியது.
அறுபதுகளிற் தென்னிந்தியக் கலைஞர்களின் வருகை அரசாங்கத்தால்மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தென்னிந்தியக் கலைஞர்கள் குழுவாகச் சென்றுஇலங்கையில் முகாமிட்டு நிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியது.இச்சூழல் கண்ணன் அவர்களுக்கு மிகச் சாதகமாக அமையவே அவரும் இசைக்குழுவைஉருவாக்கத் தீவிரமாக முயற்சி செய்தார்.
மாணிக்கத் தேரினிலே மயில் வந்தது.. என்ற ஈழத்து இரத்தினம் இயக்கிய அமுதன்அண்ணாமலை பாடும் பாடலுடன் ஆரம்பமாகும் கண்ணனின் இசை நிகழ்ச்சிகள் என்றும்இனிமையானவை.
இந்நாளைப்போல் இலத்திரனியல் தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டத்தில்ரெக்கோட்டுகளை மட்டும் திரும்ப திரும்பப் போட்டுக் கேட்டு சினிமாப் பாடல்களைபாடிய காலம் அது.
இவ்வாறு கண்ணன் கோஷ்டி என்ற இசைக் குழுவை நடத்திய அதே காலகட்டத்தில்மேடை நாடகங்களுக்கும் பின்னணி இசை வழங்கினார். இவற்றில் கலையரசுசொர்ணலிங்கம் அவர்களின் நாடகங்கள், நாடகக் கலைஞர்கள் எஸ் .டீ. அரசையா,லோகநாதன், ஆகியோர் நடத்திய வண்ணைக் கலைவாணர் நாடக மன்ற நாடகங்கள்,கலைஞர் சு.ஜெகசோதியின் அச்சுவேலி சிவசக்தி கலையரங்கத்தின் கண்டிராசா,எரிமலை, சிவகங்கை, போன்ற சரித்திர நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை,
ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த கண்ணன் இசைக்க குழு 1965 இல் யாழ்.தினகரன் விழா மூலம் மிகவும் பிரபல்யமானது. தினகரன் விழாவில் நடைபெற்ற புகழ்பூத்த வர்த்தக பவனியில் கலந்துகொண்ட கண்ணன் இசைக் குழு அதில் முதல் பரிசைப்பெற்றுக்கொண்டது. இதன் காரணமாக யாழ். முற்றவெளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளின் இறுதி நாளன்று இசை நிகழ்ச்சி நடத்த இவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிஇவர்களது இசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையானது.
இதன் பயனாக கண்ணனின் இசை நிகழ்ச்சிகள் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கின்மூலை முடுக்கெங்கும் மட்டுமல்லாது கொழும்பு, மாத்தளை, பதுளை, நுவரெலியா போன்றசிங்கள மக்களும் வாழும் பகுதிகள் எல்லாம் நடந்தேறின. சிங்கள பாடகர்களையும்அவ்வப்போது இவர்கள் இணைத்துக் கொண்டனர்.
தான் எவ்வாறு இசைக்குழுவை ஆரம்பித்தார் என்பதைக் ஊடக நிறுவனத்திற்கு அவர்அளித்த செவ்வியிற் பின்வருமாறு கூறுகின்றார்.
அந்தக்காலத்தில் ‘தினகரன்’ இசைப் பத்திரிகையினால் தினகரன் விழா ஒன்றுயாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. இது பத்து நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும்யாழ்ப்பாணம் எங்கும் விழாக்கோலம் பூண்டு காணப்படும் இந்த விழாவில் வர்த்தகவிளம்பர பவனியும் இடம்பெறும் சிறந்த விளம்பரப்பவனிக்குப் பரிசில்களும்வழங்கப்பட்டன. அந்த வர்த்தக விளம்பர பவனியில் நானும் கலந்து கொண்டேன். ஒருவாகனத்தில் வீடு போன்றதோர் அமைப்பினை உருவாக்கி இசைக்குழுவிற்காக ஒன்றுசேர்ந்த கலைஞர்களும் நானும் அந்த வாகனவீட்டிற் பவனிவந்த படியே எமது முதலாவதுஇசை நிகழ்ச்சியினை நடாத்தினோம். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்றதோடு முதற்பரிசினையும் எமக்குப் பெற்றுத்தந்தது. எமது இசைக்குழுவிற்குஉறுதியானதொரு ஆரம்பமாகவும் இந்நிகழ்வு அமைந்து விட்டது.
மேலும் இந்நிகழ்வின்போது அறவிப்பாளராகவும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்த திரு நடராஜா என்பவர் ஒருமெல்லிசை நிகழ்ச்சியைத் தயாரித்துத் தரும்படி வேண்டினார்.
அமுதும் தேனும் எங்கள் விருந்து. – உங்கள் அனைவர்க்கும் அள்ளி அள்ளித் தரும்விருந்து….என்ற மேற்கத்தேய இசைக் கோர்வையுடன் ( Western Fusion ) திரை விலகியபோது மைதானம் நிரம்பி மக்கள் வீதிகளில் நின்றவாறு கண்ணனின் அந்த அமுதும்தேனும் ; என்ற இசை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டனர். இது 1977 இல் அரியாலைகாசிப்பிள்ளை அரங்கில் நிகழ்ந்தது.
யாழ்ப்பாணக் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்டு கர்நாடக சங்கீதபாணியில்இலகு சங்கீதமாக இசை அமைத்துப் பத்துப் பாடல்களை அந்த நிகழ்வில்வழங்கியிருந்தோம்.
இந்நிகழ்வு யாழ்ப்பாண மக்களிடையே மட்டுமல்லாது தென்இலங்கை மக்களிடையேயும்மிகுந்த வரவேற்பைப் பெற்றது. . அத்தகைய பெருமைக்கு உரியவர் கண்ணன்.இதனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஈழத்து மெல்லிசைஅமைப்பாளராகக் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.
1975 இல் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் ஒரு இசைஅமைப்பாளராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து இசை பற்றிய தேடல், ஆற்றல் எல்லாம்வேறு பரிமாணத்தில் அமைந்தது, அத்துடன் பல கலைஞர்களின் தொடர்புகளும்ஏற்பட்டன.ஆகவே கொழும்பில் இருந்தபடியே இசைக்குழுவையும் நடாத்திவந்தேன்என்னுடன் “நேசதுரை தியாகராஜா” என்பவரும் இணைந்து கொண்டதால் எமதுஇசைக்குழு “கண்ணன் நேசம்” இசைக்குழு என்ற பெயரைப் பெற்றது.ஈழத்து மெல்லிசைப்பாடல்கள், பொப்இசை, றொக்இசை, ஆங்கில இசை, தென்னிந்தியத்திரைஇசை, பக்திப்பாடல்கள் போன்றவை எமது இசைக்குழுவால் இசைக்கப்பட்டன.
இதுவரை காலமும் பழைய பாடல்களையே திரும்ப திரும்ப இசைத்துவந்த கண்ணன்அவர்கள் புதிய புதிய மெட்டுகளில் பல மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துஒளிபரப்பினார்.
இவற்றில் மா.சத்தியமூர்த்தி பாடிய கவிஞர் நீலவாணனின்ஓ.. வண்டிக்காரா.. மற்றும்நிலவொன்று… போன்ற பல பாடல்களும் அடங்கும்.
ஊடக நிறுவனத்திற்கு அவர் அளித்த செவ்வியிற் பின்வருமாறு கூறுகின்றார். இக்காலகட்டத்தில் நாடகக்குழுக்களோடும் எனக்கு அறிமுகம் கிட்டியது நாச்சிமார் கோவிலைச்சேர்ந்த “வண்ணக்கலைவாணர்” நாடகக்குழுவில் (இதை இயக்கிவர் ஈழத்தின் பழையநடிகரும் ஒப்பனையாளருமாகிய திரு அரசையா அவர்கள்) இசை அமைப்பாளராகஇருந்துள்ளேன். கொழும்பில் ஜெகசோதியின் “சிவசக்தி” கலை அரங்கிலும்இசையமைப்பாளராக இருந்து எரிமலை, கண்டி விக்ரமராஜசிங்கன் ஆகியநாடகங்களுக்கும் இசை அமைத்துள்ளேன்.
1978ம் ஆண்டு நவீன நாடக இயக்குனர் நட்சத்திரவாசி பாலேந்திரா அவர்களின்அறிமுகம் எனக்குக் கிட்டியது. பாலேந்திரா அவர்களால் 1979ம் ஆண்டுமேடையேற்றப்பட்ட யுகதர்மம் நாடகம் காலதாரணி நிகழ்வு, 1980ம் ஆண்டுமேடையேற்றப்பட்ட “முகம் இல்லாத மனிதர்கள்” நாடகம் 1981ல் மேடையேற்றப்பட்ட“ஒரு பால வீடு” நாடகம் 1982ல் மேடையேற்றப்பட்ட துக்ளக் ஆகியவற்றுக்கும் இசைஅமைத்தேன்.
இவை அனைத்தும் எனக்கு நல்லதோர் அனுபவமாக எமது இசைக்குழுவின்முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் அமைந்தன. எங்கள் இசைக்குழுவும் மக்கள்மத்தியில் பிரபல்யம் அடைந்துவிட்டது.
ஈழத்து மெல்லிசைப்பாடல்கள், பொப்இசை, றொக்இசை, ஆங்கில இசை, தென்னிந்தியத்திரைஇசை, பக்திப்பாடல்கள் போன்றவை எமது இசைக்குழுவால் இசைக்கப்பட்டன.இக்கால கட்டத்தில் பிரபல சிங்களத் திரைப்பட இசை அமைப்பாளர் திரு றொக்சாமிஅவர்களின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. அவர், கீபோட், வயலின் செக்ஸபோன் ஆகியகருவிகளை இசைப்பதில் வல்லவர் சிறந்த இசையமைப்பாளர் அவரோடு இணைந்துஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதும், “தெய்வம் தந்த வீடு” என்றஈழத்துத் தமிழ்த்திரைப்படத்திற்கு இசை அமைத்ததும் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒர் அனுபவம். இவ் அனுபவம் இசைத்துறையில் ஆழமான ஈடுபாட்டையும்உற்சாகத்தினையும் எனக்கு ஏற்படுத்தியது. தொடர்ந்து கோமாளிகள் ஏமாளிகள்திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்பையும் தந்தது. முதன்முதல்சிங்களத்திரைப்படத்திற்கு இசை அமைத்த திரு முத்துஸ்வாமி ஐயர் அவர்களது அறிமுகம்இவ்வேளையில் எனக்குக் கிடைத்தது என்கின்றார்.
“மேலும் ஈழக்கவிஞரான தீபச் செல்வனின் கவிதை வரிகளைப் “பூப்பூத்த நகரில் யார்வந்து புகுந்தார்” என்னும் பாடலாகவும் மாற்றியிருக்கின்றார் திரு கண்ணன் அவர்கள்.ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதுரோஜா மலரே என்னும்பாடலுக்கு இசை அமைத்தவர்கள் “கண்ணன் நேசம்” இசைக்குழு ஆகும். அருவிவெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட ‘குளிரும் நிலவு’ இசைத்தட்டில் உள்ள ‘பாலைவெளி’ என்ற என் சண்முகலிங்கம் எழுதிய பாடலையும் “கண்ணன் நேசம்”இசைக்குழுவினர் இசையமைத்துள்ளனர். 1980ல் கண்ணன் அவர்களின் இசையில்‘கானசாகரம்’ என்ற நிகழ்ச்சி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது”கர்நாடக இசை, பொப் இசை, மெல்லிசை பக்தி இசை, திரைஇசை, நாடக இசை, என்றுபல பரிமாணங்களிலும் கண்ணனின் இசை ஆளுமை விரிவடைவதை நாம் இங்குகவனிக்க முடிகின்றது.
பாடல்களுக்கு இசை அமைப்பது என்பது இலகுவான காரியம்அல்ல. நல்ல இசை அறிவு வேண்டும் வாத்தியங்களைக் கையாளத் தெரியவேண்டும் திரைஇசை, நாடகஇசை என்று எந்தத் தளத்தில் நிற்கின்றோமோ அந்தத்தளத்தில் நின்றுஅவற்றை உள்வாங்கி அந்தக்கதையம்சங்களுக்கு ஏற்ப சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டுபாடல்களின் பொருளை அறிந்து இசை அமைத்தல் வேண்டும். அது மக்களிடம் செல்லும்போது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பிரக்ஞையும் இசையமைப்பாளருக்குஇருக்கவேண்டும்.
தமிழ் நாட்டில் வாழ்ந்த எம். எம். தண்டபாணி தேசிகர் பாரதிதாஸனின் பாடலான ‘துன்பம்நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” என்ற பாடலுக்கு மெட்டுப்போடஇரண்டு வருடங்கள் சிந்தனை செய்தாராம் ‘தேஷ்’ இராகத்தில் அமைந்த மனதைக்கொள்ளை கொள்ளும் பாடல் அது.
திரு கண்ணன் அவர்கள் 1983ம் ஆண்டு வரை இசைக்குழு, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், நாடகக்குழு என்று அவர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டுஅவற்றை எல்லாம் துறந்துவிட்டு 1983ல் யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் கோவிலில்அமைந்துள்ள தனது இல்லத்திற்கு தனது குடும்பத்தாருடன் ஒய்வெடுக்க எண்ணி வந்தார்.ஒரு வருடம் ஒய்வாக இருந்திருப்பார் மீண்டும் கலை உலகம் அவரை விடவில்லை.காரணம் ஈழத்தில் இருந்த தரமான இசையமைப்பாளர் கண்ணன் ஒருவரே.
யாழ்ப்பாணத்தில் சி.மௌனகுருவின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட ‘புதியதொருவீடு’ ‘சம்காரம்’ ஆகிய நாடகங்களுக்கு இசையமைக்கும் பணியேற்று மீண்டும் நாடகஉலகினுட் பிரவேசிக்கின்றார். 1985ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாசாரக்குழுவினால் தயாரிக்கப்பட்ட “மண் சுமந்த மேனியர்” என்ற நாடகத்திற்கும் “எங்கள்மண்ணும் இந்த நாட்களும்” என்ற கவிதா நிகழ்விற்கும் கண்ணனே இசை அமைத்தார்.இவ்விரு நிகழ்வுகளும் யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய சாதனையைப் புரிந்தவை. இதற்குக்கண்ணனுடைய இசையும் மிகமுக்கிய காரணம் என்று விவரிக்காத விமர்சகர்கள் இல்லை.
கோயில் என்ற கோயிலெல்லாம் கும்பிட்ட நாங்கள் ..; பூமியை நம்பிப் புத்திரரைத்தேடி வந்தோம்… அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி… எத்தனை நாட்கள்இப்படிப் போயின நீங்கள் எழுந்திடுவீர்… போன்ற மண்ணின் உணர்வுகளைத்தட்டியெழுப்பும் பாடல்களுடன் பட்டி தொட்டிகள் எல்லாம் மேடையேறிய மண் சுமந்தமேனியர் நாடகப் பாடல்களை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. இந்தப்பாடல்களுக்கு இசையமைத்தவர் கண்ணன் அவர்கள்.
‘மண் சுமந்த மேனியர்’ குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்டுசிதம்பரநாதன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டது. எங்கள் மண்ணும் இந்தநாட்களும் சுவிதா நிகழ்வில் இடம் பெற்ற கவிதைகள் பாடல்கள் அனைத்தும் உ.சேரன்அவர்களுடையது.
இந்த இரு நிகழ்வுகளும் யாழ்ப்பாண மக்களின் வாழ்நிலைப் போராட்டங்களையும் (அகம்,புறம்) அவற்றின் வலிகளையும் 1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் அழிவுகள்,இழப்புகள், துயரங்கள் ஆகியவற்றையும் சித்தரிப்பனவாக அமைந்து இருந்தன.இந்நிகழ்வுகளுக்கு இசை அமைப்பதற்குக் கண்ணன் அவர்கள் உபயோகப்படுத்தியஇசைக்கருவிகள் ஒரு ஹார்மோனியம், ஒரு வயலின், ஒரு தபேலா ஆகியவை மட்டுமே.
1985 ற்கு முன்னர் அமைத்த இசைகளை விட இவை சற்று வித்தியாசமாகவே அமைந்துஇருந்தன. தமிழிசையை அடிப்படையாகக் கொண்டு நாட்டாரியற் கூறுகளையும்அவற்றுடன் இணைத்து அவசியம் ஏற்படின் மேலைத் தேசஇசை உத்திகளையும்கையாண்டு யாழ்ப்பாணக் கலாசாரப் பின்னணியையும் இணைத்துத் தனதுகற்பனைகளைப் புகுத்தி மண்வாசனையுடன் அவரது தனித்துவமான ஆளுமையில்பாடல்கள் உயிர்பெற்று எழுந்தன.
அவற்றைப் பாடும் போது பாடகர்களும், நடிகர்களும்வெளிப்படுத்திய உணர்வலைகள் யாழ்ப்பாணத்தை அதிரச் செய்தன. யாழ்ப்பாணத்தின்மூலை முடுக்குகளில் எல்லாம் இவ்விரு நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. “கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பது போல இக்காலத்தில் யாழ்ப்பாணத்துப் புல்லும்விடுதலைக்கவி பாடியது. மண் சுமந்த மேனியர் நாடகத்தில் இருந்து கண்ணனின்இசையில் உருவானதோர் யாழ்ப்பாணத்து நாட்டார் பாடல் இது.
தெந்தினத் தின்னா தினத்தினத் தின்னாதினத்தினத் தன்னா தினளானாதிக்கிட திரிகிட கணபதி சரணம்சீரிய யானைக் கன்றே சரணம்தெந்தி—–
வாரண மதமுள்ள கணபதி சரணம்அன்புடை அமரர்கள் நாதா சரணம்தெந்தி—
இந்த நாடகம் நிறைவடைந்து நடிகர்கள் மேடையை விட்டு இறங்கி மக்களோடு கலக்கும்போது மக்களின் விண்ணைப்பிளந்த கோஷங்களிடையே கவிஞர் சேரனிடம் இருந்துமுகிழ்த்தது. ஒரு பாடல் இதற்கும் கண்ணன் அந்தக் கணமே இசையமைத்தார்.எத்தனை காலங்கள் இப்படிப் போயின
நீங்கள் எழுந்திருங்கள்எங்கள் நிலத்தினில் எங்கள் பலத்தினில்தங்கி நிற்போம் நாங்கள்பொங்கி வரும் நதி வெள்ளமெனப்புயல்வேகமுடன் எழுகசிந்திய செங்குருதித் துளியோடு நீர்போரிடவே வருக போரிடவே வருக
என்ற பாடல்தான் அது. மக்களனைவரும் இப்பாடலை உயிர்த்துடிப் போடு முழங்கினர்படைபடையாகத் திரண்டனர் இந்நிகழ்விற்கு விடுதலை முழக்கம் விண்ணைத் தொட்டன.எங்கும் விடுதலை எதிலும் விடுதலை என மக்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.தெருக்கூத்து, வீதி நாடகம், வில்லுப்பாட்டு, கதாப்பிரசங்கம், நாடகம்நாட்டியம் ஓவியக்கண்காட்சி, புத்தகக்கண்காட்சி இலக்கிய விமர்சனம் என்றுயாழ்ப்பாணம் அமளிப் பட்டது. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், நாட்டியம், ஓவியம்என்று எல்லாப் படைப்புகளும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலையும் சமூகப்போராட்டங்களையும் மையப்படுத்தியே எழுந்தன.
நவீன நாடகத்துறையில் ஒரு புதிய எழுச்சி. புதுக்கவிதையில் ஒரு புதிய பரிமாணம்விடுதலைப் பாடல்களில் உயிர்த்துடிப்பு எல்லாவற்றிலும் ஒரு யதார்த்தப் பார்வை என்றுஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன. இக் காலத்தில் தோன்றியஈழத்துப் படைப்புகளுக்கு நிகராக சிறப்பாகப் புதுக்கவிதையின் வளர்ச்சியோடு ஒப்பிடசமகாலத்தில் இந்தியப் படைப்புகள் எதுவும் இல்லை என்று இந்திய விமர்சகர்களாலேயேவிதந்துரைக்கப்பட்ட காலம் இது. அந்த நாள் இனி வருமா? அப்படி ஒரு
யாழ்ப்பாணத்தைப்பார்க்க இனி எந்தனை தவம் செய்ய வேண்டுமோ?காலனது காலடிகள்காற்றதிரப் பதிவதற்காகாலமகள் நீரெடுத்துக்கோலமிட்டாள் மணற்பரப்பில்நெற்கதிரே! நீள்விசும்பேநெஞ் சிரங்காச் சூரியனேபுல்லின் இதழ் நுனியிற்பூத்திருக்கும் பனித்துளியேநீங்கள் அறிவீர்களா?எம் நெஞ்சுறையும் சோகத்தை”– கவிதை சேரன்
எங்கள் மண்ணும் இந்த நாட்களும் என்ற கவிதா நிகழ்வில் கண்ணன் இசையமைத்தஈழத்துக் கவிஞர் சேரனின் பாடல் ஒன்று.மூன்று நூற்றாண்டுகள் சென்றனஆயினும் அம்மா அம்மாஉன்னுடைய மென்கழுற்றில்இன்னும் விலங்கு இன்னும் விலங்கு— மூன்று
நேற்றொரு காலம் உனது புதல்வரின்விழிகளைப் பிடுங்கியே வீசினர்இன்னொரு நேரம் உனது வீட்டின் மேல்நெருப்பே எரியும் தினமும்.— மூன்று
அந்நியன் கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும்பாடுவோம் உயர்த்திய குரல்களில்இன்னும் எம்குருதி இந்த மண்நனைத்த போதிலும்நடக்கலாம் நீண்டதோர் பயணமே—– மூன்று
1986 ஆம் ஆண்டு தமிழ் ஈழ மாணவர் சார்பாகக் குருபரனால் வெளியிடப்பட்டவிடுதலைக் குரல்கள் என்ற ஒலிப்பேழைக்கான பாடல்களை ஈழத்துக் கவிஞர்களான
வ.ஜ.சஜெயபாலன், உ.சேரன் ஆகிய இருவரும் எழுதியிருந்தனர். இவற்றிற்கானஇசையை இசைவாணர் கண்ணன் அவர்கள் அமைத்திருந்தார். அதில் இருந்துவ.ஜ.ச.ஜெயபாலனின் ஒரு பாடல்.
என் மனத் துன்பம் தாயின் பாடலில்கண் வளராயோ செல்வாதந்தையர்கள் தமிழ் ஈழமண் மீட்டிடபோர்க்களம் சென்றனர் செல்வா——- என்மனத்
நீயும் உன் நாட்களில் விலங்குகளின்றிநடந்திட வேண்டும் என் செல்வாசாவின் ஓலமும் இளிமையும் வீழ்ந்திடதந்தையர் எழுந்தனர் செல்வா——– என்மன
விடுதலைப் போரினால் ஆயுதம் ஏந்திதுயர்க்கொடி தாங்கி வாழ்ந்தோம்கண்ணே உன் காலம் விடிக விடிகவெனவிழிப்போடு கண் உறங்காய் செல்வா——- என் மனஇதே ஆண்டில் (1986 இல்) சி மௌனகுருவின் “சக்தி பிறக்குது” என்ற நாடகத்திற்குஇசையமைத்து இருந்தார்.
இந்த நாடகம் பெண்களின் பிரச்சினையை மையமாகக்கொண்டு எழுதப்பட்டது பரதமும் நாட்டுக்கூத்தும் இணைந்ததொரு நாட்டிய நாடகம் இது.இதற்கான நெறியாள்கையும் நாட்டுக்கூத்து அமைப்பும் சி.மௌனகுருவினுடையது நடனஅமைப்பு செல்வி சாந்தா பொன்னுத்துரை அவர்களுடையது.
1987 இல் மீண்டும் சிதம்பரநாதனின் நெறியாள்கையில் கண்ணனின் இசை அமைப்பில்ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் புதியதொரு வீடு மேடையேறியது. இதுயாழ்ப்பாணத்து மீனவ மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்தரிக்கின்றது.கண்ணனின் இசையமைப்பில் இன் நாடகத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று.சிறு நண்டு கடல் மீது படம் ஒன்று கீறும்சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும்—— சிறு
கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்——— சிறு
வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்வெறி கொண்ட புயல் வந்து கரகங்கள் ஆடும்—– சிறு
இருளோடு வெளியேறி வலை வீசினாலும்இயலாது தரவென்று கடல் கூறலாடும்——– சிறு
இதைத் தொடர்ந்து குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய “உயிர்த்தெழுந்தமனிதர் கூத்து” பொய்க்கால் போன்ற நாடகங்களுக்கும் கண்ணன் அவர்கள் இசைஅமைத்து இருந்தார்.
1990 இல் இந்த இசை போர்க்கால இசையாக மாற்றம் பெறுகின்றது. கொழும்பு,யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இசைப் பனி புரிந்த கண்ணன் அவர்கள்இக்காலத்தில் தனது இருப்பிடத்தை வன்னிப்பகுதிக்கு மாற்றிக் கொண்டார். காலமாற்றங்களினால் அள்ளுண்டு அழிந்து போகாமல் அவற்றை அனுசரித்து மக்களின்தேவைகளை போராளிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை எல்லாம்உள்வாங்கி நல்லதோர் இசை அமைப்பாளராக மேலெழுகின்றார். கண்ணன்அவர்களுடைய ஆளுமையின் இன்னுமொரு பரிமாணம் இது.
90களில் விடுதலைப்புலிகள் எழுச்சியடைகிற போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப்பாடல்களாக அல்லது போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமிக்கின்றன. இந்தப்பரிமாணத்திலும் கண்ணனின் பங்களிப்பு கனதியானதாகும்.
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்… என்ற பாடலை அறியாதவர் இருக்கமுடியாது.கண்ணன் ‘1996’ என்கிற வெளிவராத குறும்படத்திற்கான பின்னணி இசையையும்அமைத்திருந்ததை இங்கு நினைவு கூரலாம் .
செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன், தேரடியில் காலையிலே நானழுதவேளையிலே.பன்னிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லையே என்ற வர்ணராமேஸ்வரன் பாடிய நல்லை முருகன் பாடல்கள் இசைத்தட்டில் உள்ள நெஞ்சைஉருக்கும் பதினோரு பாடல்களின் மெட்டுக்களுக்குச் சொந்தக்காரர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மாவீரர் தினத்தில் துயிலும் இல்லப் பாடலாக ஒலிக்கும்தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே! என்ற பாடலைக் கேட்டுக் கண் களங்காதவர்களே இல்லைஎனும் அளவுக்கு நெஞசைப் பிழி ந்துவிடும் அந்த சோக கீதத்துக்கு இசையமைத்தவரும்கண்ணன் அவர்களே.
மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளைமுடிசூடும் தமிழ் மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கைவீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம், தமிழீழப் போரில்இனிமேலும் ஓயோம் உறுதி.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடியதோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளைஇங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியேமறுபடி உறங்குங்கள்.
நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியேநாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொருசத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்தாகங்கள் தீராது.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளைஇங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியேமறுபடி உறங்குங்கள்.
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயதுஉரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்நிச்சயம் எடுத்தாள்வோம்தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்நினைவுடன் வென்றிடுவோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளைஇங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியேமறுபடி உறங்குங்கள்.
1990 ஆம் ஆண்டின் பின் போராட்டக் களத்திலும் போராளிகளே கவிஞராக இருந்தும்பாடிய ஏராளமான பாடல்களுக்குக் கண்ணன் இசையமைத்துள்ளார். அவருடைய இருபிள்ளைகளாகிய சத்தியனும் சாயிதர்சனும் தந்தையாருடன் வன்னியில் இருந்து இப் பணிசிறக்க உதவியுள்ளனர். அவர்கள் தனியாகவும் பல பாடல்களுக்கு இசையமைத்துஉள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இக் காலத்தில் கண்ணனின் இசையமைப்பில் வெளிவந்த புதுவை இரத்தினதுரை எழுதியகீழ்க் கண்ட பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்தள்ளிவலை ஏற்றிவள்ளம் போகும் மீன்அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்.
எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாதுஎங்கிருந்து பாடுகின்ற எங்கள் குரல் கேட்காதுதள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் மீன்அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்.
எந்த வித தொழில் நட்ப வசதியும் இன்றி மிகக்குறைந்த வாத்தியங்களையும் மிகக்குறைந்த கலைஞர்களையும் வைத்துக்கொண்டு மண்ணின் மணம் கமழ மக்கள் மனதைப்பிசைந்து பிசைந்து உணர்வையும், புத்தியையும் உயிர்ப்பிக்கும் இசையைக் கண்ணன்அவர்கள் போர்க்கால இசையாக எமக்குத் தந்துள்ளார். போராட்டச் சூழலிற் குண்டுகள்பொழிய மானிடம் மரணிக்க மக்களின் கூக்குரல்களுக்கு மத்தியில் குருதிதோய்ந்தமண்ணில் இந்த அற்புதமான பாடல்கள் உருவாகியுள்ளன.
1996 என்ற வெளிவராத குறும் படத்திற்கான இசையமைப்பும் கண்ணனுடையதேஅண்மையில் முள்ளி வாய்க்கால் பேரழிவினை நினைவு கூறும் முகமாகக் குளோபல் தமிழ்ஊடக நிறுவனம் தயாரிக்க சோமிதரன் தொகுத்த காலத்துயர் என்ற விவரணப் படத்தில்ஈழத்துக் கவிஞரான ‘தேவ அபிரா’ எழுதிய ‘மூன்கிலாறே’ என்ற அறிமுகப் பாடலுக்கும்கண்ணன் அவர்கள் இசையமைத்துள்ளார்.
இதோ அப்பாடல்
மூங்கில் ஆறே முது நாள் நதியேமூச்சின்றிக் கிடந்தாயோ
காற்றில் ஆயிரம் கனல்கள் பறந்தனசேற்றில் ஆயிரம் பிணங்கள் நெரிந்தன
காட்டின் ஒருபிடி கருகிச் சரிந்ததுகண்ணீர் மல்கி நாம் கரைந்துறைந்தோமே.
ஆடிய கால்கள் அடங்கிப் போயின
மோதிய விழிகள் மோட்சம் அடைந்தனஆடாக் கடலில் அந்நியன் படுத்தான்
கூடாக் கனவொடு குறுகிப் போனோமே
1993ம் ஆண்டு, யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவர்கள் வழங்கிய புகழேந்திப்புலவரின் நளன் தமயந்தி கதையைத் தழுவி ஆங்கில மொழியில் வழங்கப்பட்ட இயல்,இசை, நடனம் என முப்பரிணாமங்களும் கொண்ட அரியதொரு மேடையாற்றுகைக்குமேற்கத்தேய, கீழைத்தேச மற்றும் ஹிந்துஸ்தானி கலவையாக ஒரு தனித்துவமானஇசையை அமைத்துத் தந்தவர் கண்ணன்.
இந்த மேடையாற்றுகையை நெறிப்படுத்தியவர்கள் மறைந்த கல்லூரி ஆசிரியை திருமதிநவரட்ணம் மற்றும் குழந்தை ம சண்முகலிங்கம் அவர்கள்இவ்வாறு ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த கண்ணன் ஈழ மண்ணினின்இசையமைபாளராகத் தடம் பதித்து ஈழத்து மெல்லிசை, போபிசை, றொக்கிசை, ஆங்கிலஇசை, கர்நாடக இசை, ஈழத்துத் தமிழ்ச் சினிமாவின் இசை நாடக இசை, பக்தி இசை,போர்க்கால இசை என்று பல பரிமாணங்களிலும் அவரது புலமை விரிந்து ஆளுமை மிக்கஅற்புத மனிதராக வாழ்கின்றார். தன்னுடைய புத்திரர்களான சத்தியனையும், சாயிதர்சனையும் இத்துறையிலேயே ஈடுபடுத்தியுள்ளார்.
இவ்வளவு ஈழத்துப் பாடல்கள் இருக்க (இது மட்டுமல்ல இன்னும் நிறைய உண்டு)தென்னிந்தியத் திரைப்படப் பாடல்களை மேடையில் முழங்கி விட்டு நாம் ஈழத்துப் பாடகர்நாம் ஈழத்துக் கலைஞர், நாம் ஈழத்தமிழர் என்று பறை சாற்றுவதில் என்ன பெருமைஇருக்க முடியும்?
ஈழத்தில் புகழ்பெற்றிருந்த இசைக்குழுக்கள்
*கண்ணன் இசைக்குழு
*இரட்டையர் இசைக்குழு
*கலாலயா இசைக்குழு
*அருணா இசைக்குழு
*மண்டலேஸ்வரன் இசைக்குழு
* றெக்ஸ் இசைக்குழு
* ரங்கன் இசைக்குழு
* நவகீதா இசைக்குழு
* சுண்டுக்குழி ராஜன் இசைக்குழு
* பீற் நிக்ஸ் இசைக்குழு
* சுந்தரையர் இசைக்குழு
* கோப்பாய் தியாகராஜா (தனிமனிதராக இசைக்கச்சேரி நடத்தியவர்)
இவற்றுடன் நித்தி கனகரட்னம், A.R. மனோகரன், M.P.பரமேஸ், அரியாலைராமச்சந்திரன், சண்.சத்தியமூர்த்தி, அமுதன், அண்ணாமலை ஸ்ரனி சிவானந்தன், அன்ரன்டேவிட், எம்.எஸ்.பெர்னாண்டோ, ரொனி காஸன், முல்லை சகோதரிகள் த்றீ சிஸ்ற்ரோஸ்போன்ற தனி மனிதர்களும் புகழ்பெற்றிருந்தார்கள் !இசைவாணர் கண்ணன். இவ்வாறு மூன்று தசாப்தங்களாக தொடர்கிறது கண்ணன்அவர்களின் இசைப்பயணம.
இசைவாணர் கண்ணனின் புதல்வரான சாயிதர்சன் தந்தையின் முதுமரபை உள்வாங்கி,நவீன தொழில்நுட்ப கணணி உலகுக்குள் நுளைந்து ஈழத்து மெல்லிசையை புதியஉலகிற்குள் கொண்டு வருகிறார்.
இசைவாணர் கண்ணன் சத்திய சாய்பாபா பக்தர் அதனால்தான் மகனுக்கு சாய் தர்சன்என்று பேர் வைத்துள்ளார்…
இவரை பார்க விரும்பினால் சாய் பாபாவது விசேட நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் யாழ்பல்கலைக்கழக முன் உள்ள இராமநாதன் வீதியில் அமைந்துள்ள யாழ் சாய்பாபாநிலையத்தில் காணலாம் மிகவும் எளிமையானவர் எல்லோரிடமும் சாதாரணமாகபேசுவார்
தென்னிந்திய தமிழ் தொலைக் காட்சியான ஸீ தமிழ் ( Zee Tamil ) ச ரி க ம ப இசைநிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபற்றும் மகள் வழிப் பேத்தி பவதாயினியுடன் ( SingerBavathayini Nagarajan ) கடந்த வாரம் கண்ணன் மாஸ்டர் கலந்துகொண்டு ஆசிகள்வழங்கினார்.