கவிதைகள்
எப்போது எழத்தாளன்?… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
நான் எழுதினேன்
நான் தினமும் எழுதினேன் நல்ல கருத்துக்களை எழுதினேன் நல்லதா கெட்டதா என்பதை நாநிலத்தார் இங்கு அறிவரே நான் எழுதினேன் நயமானவற்றறையே எழுதினேன் நலமாகவே எழுதினேன் அதிலும் நல்லதாவே எழுதினேன் நிற்பதும் நிலைப்பதும் அதன்வழி நான் எழுதினேன் நான்கு வரிகளே எழுதினேன் நான்கு வரிகளும் நல்லதனாதால் நான்குபேர் தூக்கிவிட்டனர் நல்லதென தொடர்ந்து எழுதினேன் நான் எழுதினேன் நான்குபேர் தூக்கிவிட்டனர் தூக்கிவிட்ட அந்நால்வரும் தூக்கிலிடவில்லை என்பதால் துவண்டிடாது தொடர்ந்து எழுதினேன் நான் எழுதினேன் நான்குபேர் தூக்கிவிட்டதால் நாளும் பொழுதும் எழுதினேன் நாடறியாது போனாலும் நாற்பதுபேர் வாசித்தனரே நான் எழுதினேன் நாற்பதுபேர் வாசித்ததை விடாமலே நாற்பதுபேர் வாசித்ததை நானூறுபேரிடம் பரப்ப்பினர் நாநூறுபேரென மகிழ்ந்தே எழுதினேன் நான் எழுதினேன் நானூறுபேர் எழுத்தை பரப்பவே நாலயிரம் பேரிடம் சென்றடைந்தது நாலாயிரம் திவ்யபி்பந்தமா எழுதினேன் நாற்பதாயிரம் பேரிடம் சென்றடைந்தது நான் எழுதினேன் நாற்பதாயிரம் கண்ட நான் நான்கு லட்சம்பேர் அடைய விரும்பினேன் நான்கு லட்சம்பேரை பெறுவேனோ நல்லதல்ல புகழ் போதையென விடுவேனோ நான் எழுதினேன் நான்கு லட்சம் வந்தபின் நானும் வீணாய் இருப்பேனா நான்கு கோடிபேரையும் எட்டுவேன் அப்போது சொல்வர் எழுத்தாளன் என்று! -சங்கர சுப்பிரமணியன்.