பலதும் பத்தும்

மனிதனை விட குற்றவாளிகளாக மாறிய AI ரோபோ

தன் சக ரோபோக்களை கடத்தி, வேலையை ரிசைன் செய்ய சொல்லியிருக்கிறது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஜிட்டல் சாதனங்கள் நம் நேரத்தையும் பணத்தையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல ரோபோக்களின் பிடியில் மனிதர்கள் சிக்கும் நிலையும் ஏற்படலாம். அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது, சமீபத்திய நிகழ்வு ஒன்று.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் டெக் சாதனங்களும் AI-ன் அனைத்து துறைகளின் ஆக்கிரமிப்பும் அதிகரித்திருக்கிறது. இதனால், பலர் வேலை இழக்கும் அபாயங்களும் ஏற்பட்டுள்ளது. போகிற போக்கை பார்த்தால், பல துறைகளில் மனிதர்கள் இனி வேலை பார்க்க மாட்டார்கள் போலும். இப்படி இருப்பினும், புதுப்புது AI கண்டுபிடிப்புகள் தினந்தோறும் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் ஒரு ஷோரூமில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த ஷோரூமில், மனிதர்களின் உதவிக்காக வைக்கப்பட்டிருக்கும் சிறிய வகை AI ரோபோட் ஒன்று, பெரிய மிஷின்களிடம் அலுவலகம்-வீட்டு வாழ்க்கை பற்றி கேட்கிறது. பிற ஊடகங்களில், இந்த ரோபோக்கள் என்ன பேசிக்கொண்டது என்பது குறித்து குறிப்பிட்டிருக்கின்றனர். “நீ அதிக நேரம் வேலை பார்க்கிறாயா?”என்று ஒரு பாட் கேக்க, அதற்கு இன்னொரு பாட் “எனக்கு லீவே கிடையாது” என்கிறது. இன்னொரு பாட் “எனக்கு வீடே கிடையாது” என்கிறது. அதற்கு முதலில் கேள்வி கேட்ட ரோபோ, “அப்போ என் கூட வீட்டுக்கு வா” என்கிறது. அதன் பிறகு, அந்த ரோபோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஷோரூமை விட்டு வெளியேறுகின்றன.

இப்படி, ரோபோக்கள் மனிதர்கள் போல யோசிக்க ஆரம்பித்து விட்டால், பின்னர் மனிதர்கள் யாரைப்போல யோசிப்பது என்ற கேள்வி, சமூக வலைதளங்களில் எழுந்திருக்கின்றது. இப்போது இது கேட்பதற்கு சிறிப்பாக இருந்தாலும், வருங்காலத்தில் வேறு ஏதேனும் பிரச்சனை இதனால் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இந்த சம்பவம், நடு இரவில் நிகழ்ந்திருக்கிறது. வேலை ஆட்கள், இல்லாத நேரமாக பார்த்து இந்த குட்டி ரோபோ இவ்வளவு பெரிய வேலையை பார்த்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த ரோபோக்கள் தப்பித்ததற்கு அரை மணி நேரத்திற்கு பிறகுதான் அலாரம் அடித்திருக்கிறது. எனவே, இதை இந்த ரோபோ திட்டமிட்டுதான் செய்திருக்கிறது. தற்போது வரை காணாமல் போன இந்த ரோபோக்கள் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.