கவிதைகள்
மரபுக்கவிதை எனும் ஒப்பனையுடை மங்கை!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
மரபுக் கவிதையாய் கவிதைசொல்ல
தரவென பெரிதாயேதும் தடயமின்றி சொந்த விதிசெய்தே நான் படைத்த விந்தைக் கவிதையிதைக் கேட்பீரே கூந்தலில் கொஞ்சம் எண்ணெய்பூசி பாந்தமுடன் அழுத்தியே தலைவாறி இறுக்கமாய் கூந்தலை பின்னலாக்கி முறுக்கி பின்னிய கூந்தல் பின்னாட தொங்கியாடும் அழகிய சடைமுடிவில் அங்கே ஆடுகின்ற குஞ்சம் மிக அழகு தலைமுடி அழகுற தனி ஆபரணங்கள் தலை வகிட்டிலும் அழகு நெற்றிச்சூடி முடிக்கு முடிவிலா அழகைச் சேர்க்க அடி நுனிவரை பின்புறம் அழகூட்டி வண்ண மலர்கள் சான்றாய் நிறைத்து பெண்ணும் மலராய் மலர்ந்திருப்பாள் மஞ்சள் பூசி குளித்த மதிவதனமதில் மிஞ்சிடும் நெற்றிக்கு அழகு சேர்க்க தண்ணிய குணமுடைய சந்தணமாம் பண்பாக திலகமும் சேர்ந்ததழகாம் திருத்திய முழுப் புருவங்கள் கீழாக வருத்தும் கண்களிலே மையும் தீட்டி கூரிய நாசியின் இருபுறமும் அங்கே சீர்மிக்க அழகாய் இரு மூக்குத்திகள் நாசியினடி மறைந்தும் அழகூட்டுகிற ஊசிமயிர்தனை மழித்து அழித்திடாது ஆசியொடு ஒரு புல்லாக்கு அழகூட்ட பூசிய வர்ணம் செவ்விதழினில் அழகு இரு செவி மடல்களிலும் மாட்டியொடு தருகின்ற அழகை கூட்ட தோடுகளாம் குண்டலங்களும் தனியொரு அழகாய் கண்டிட வியந்திடும் முகமும் அழகாம் கச்சிதமாய் அழகூட்டும் மேல் உடுப்பு மெச்சியே ஒட்டி உறவாடிட பட்டாடை பட்டாடைமேல் அழகான ஒட்டியாணம் கட்டுடல் கவர்ந்திழுக்கும் அவள் அழகு இருகைகளி்லும் எழிலூட்ட வளையல் பெருமிக்கும் விரல்மெச்ச மோதிரங்கள் மொத்தமாய் பொய்நகமும் பூச்சுடனும் சித்திரப் பாவையின் விரல் நகமுமழகு உள்ளங்கைகளை மருதாணி அழகூட்ட கள்ளமின்றி சொல்லும் கையழகென்று தெள்ளுதமிழக்கு இலக்கணம் போல் கிள்ளையவள் பேச இலக்கு செய்வாள் பாதங்களில் ஒலிக்கும் கொலுசுகளும் பேதமின்றி பறைசாற்றும் விரலணியும் பாவையாய்ப் பார்த்து வியந்து போற்ற பூவையும் வந்தாள் மரபுக் கவிதையாக மரபுக்கவிதை என்று மார்தட்டி நின்று கரவின்றி செப்புகின்ற மாந்தருக்கும் ஒன்று சொல்வேனிங்கு உறுதியொடு நன்றே உங்கள் கூற்று என்ற போதும் மரபுக்கவிதை ஒப்பனை செய்த மங்கை மரபான எதுகை மோனை கொண்டவளே சீர் தளை ஓசையென பட்டுடையணிந்து ஊர்வலம் வாராதுபோயின் மிளிர்வாளோ இயல்பு கவிதையது இயல்பான நங்கை இயல்புடன் மிளிர்வாள் ஒப்பணையின்றி புறவழகு ஒதுக்கிவிட்டு அகவழகு காட்டி அனைவரையும் ஈர்த்திழுக்கும் பேரழகி அளவிலா அலங்கார மரபுக் கவிதை அழகு எளிமையாய் இலங்கும் மங்கை தனி அழகு என்றோ ஒருநாள் மரபுக்கவிதையும் அழகு என்றும் எளிமையான மங்கையும் ஓர் அழகு மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் என்ற வலியுறு வள்ளுவன் வழியது காண்கிற்பின் கீழிருந்தும் கீழல்லார் கீழல்லர் என்றிங்கு அழிவின்றி பொருள் சொல்லின் சிறக்கும்! -சங்கர சுப்பிரமணியன்.