என்னைக் கவர்ந்த பள்ளி ஆசிரியர்கள்!… ஏலையா க.முருகதாசன்.
„நான் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவன்.எனக்குப் படிப்பித்த ஆசிரியர்களின் தனித்தன்மைகள் பற்றி எழுத வேண்டுமென்ற விருப்பத்தின் காரணமாக ,தொடரவிருக்கும் கட்டுரைகளின் முதல் கட்டுரையாக எமது கல்லூரியன் உடற்பயிற்சி ஆசிரியர் திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்களிலிருந்து ஆரம்பிக்கிறேன்.“
ஏலையா க.முருகதாசன்
மகாஜனாக் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்கள்
எமது கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்த திரு.ஏகாம்பரம் மாஸ்ரரை மகாஜனக் கல்லூரி வட்டாரத்திலும்,இலங்கையடங்கிய உதைபந்தாட்ட வட்டாரத்திலும் தெரியாதவர்களே இருக்க முடியாது.
திரு.ஏகாம்பரம் மாஸ்ரர்,எமது கல்லூரியான மகாஜனக் கல்லூரியின் உடற் பயிற்சி ஆசிரியராகவும்,எமது கல்லூரியின் உதைபந்தாட்ட வீரருக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எமது கல்லூரியின் சிற்பி எனப் பெருமையடன் போற்றிக் கொண்டாடி வரும்,அதிபர் திரு.தெ.து.ஜெயரத்தினம் அவர்கள்,திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்களின் திறமைகளை நன்கறிந்து அவரைத் தேடிப் பிடித்து எமது கல்லூரிக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
திறமையான ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருவதில் மகாஜனாவின் சிற்பி அவர்கள் மிகவும் வல்லவராக இருந்தவர்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவுஜீவித்தனமான நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் எவ்வாறு முக்கியமோ அதே போன்று ஆற்றல்மிகு மாணவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு மிகச் சிறந்த ஆசிரியர்கள் தேவை.
கிரேக்கத்தின் தத்துவஞானியான சாக்கிரட்டீஸ் மொழிந்த „உனை நீ அறி’ என்ற தன்னை உணர்தல் என்ற ஞானச் சொல்லின் அறிவொளி மாணவர்களை ஆக்கிரமித்து நின்றமைக்கு மகாஜனாவின் சிற்பி அவர்களின் கிரேக்க தத்துவஞானியான சாக்கிரட்டீஸின் சிந்தனையோயொட்டிய செயலாக்கமும் காரணமாக அமைந்தது.
ஒரு கல்லூரியை நாடாளுமன்றத்திற்கு ஒப்பானது என்று சொல்வதும் சரியானதாகும்.
திரு:ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்களின் நடை உடை பாவனையே வசீகரமானது,அலாதியானது.அவரை,அவரின் காலத்தில், மகாஜனாவில் கல்வி கற்ற மாணவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம். அவர் மைதானத்தில் நிமிர்ந்த பார்வையுடன் கம்பீரமாக நடந்து வருகையில் சிவாஜியுடன் ஒப்பிட்டுச் சொல்லி மகிழ்ந்ததைநானே என் காதுபட
கேட்டிருக்கிறேன்;.மேவி இழுத்து நெளி நெளியாக வாரிவிடப்பட்ட தலைமயிர் மின்னிக் கொண்டேயிருக்கும்.போ கட்டிய கவர்ச்சிகரமான அவரின் புகைப்படங்கள் கல்லூரியின் மகசீனில் வெளிவருகையில் அப்புகைப்படங்கள் தனித்துவமானவையாக இருக்கும்.;.ஒரு உடல் பயிற்சி ஆசிரியருக்குரிய அத்தனை மிடுக்கும் அவரிடம் .உதைபந்தாட்ட வீரர்களுக்கு அவர் பயிற்சி எடுக்கும் போது அவணர் ஒரு பயிற்சிக்கூடடமாகவே இருந்தார்.
மாணவர்களுக்கு அவர் உடற்பயிற்சி அளிக்கும் போது,இயல்பாக நகைச்சுiவை ததும்ப பேசியவாறு அவர் நடந்து கொள்ளும் போது அவர் ஓரு ஆசிரியர் என்பதைத் தாண்டி அருகானவர் என்ற உணர்வைக் கொடுத்து வந்ததை நாம் உணர்ந்திருக்கிறோம்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் அதுவும் ஒரு மருந்தென்பதையும் அது உடலை மட்டுமல்ல மனதையும் பேணும் என்பதை அனைவரும் அறிவார்கள்;,அதிலும் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் இன்னும் அதிகமாய் அறிவார்கள்.
அன்று திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் சொல்லிக் கொடுத்த சில உடற்பயிற்சிகளை நான் இன்றும் செய்து வருகிறேன்.இது மிகையல்ல,உண்மை.
திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்கள்,உதைபந்தாட்ட போட்டிகளுக்கான குறிப்பிடத் தக்க நடுவராவார்.
அவர் நடுவராக பணியாற்றும் போட்டிகளில் நடுநிலைமை சிறப்பாகப் பேணப்படும் என்பதை உதைபந்தாட்டப் பிரியர்கள் நன்கறிவர்.
அவர் உதைபந்தாட்ட போட்டிகளின் போது மைதானத்தில் நடந்து வருவதையே எல்லாரும் இரசித்துப் பார்ப்பார்கள்.
விசில் சமிக்ஞையே வித்தியாசம் வித்தியாசமாக இருக்கும். போட்டி தொடக்கம்,பவுல்,பனால்டி,இடைவேளை, கோலடிக்கையில்,உதைபந்தாட்டத்தை முடிக்கையில் என ஒவ்வொன்றக்கும் ஒவ்வொரு விதமாக விசில் சத்தத்தைக் கொடுக்கக்கூடியவர்.
உதைபந்தாட்டத்தை நிறைவு செய்யும் நேரத்தில் அதுவும் சில விநாடிப் பொழுதுகளே இருக்கும் போது கோல் அடிக்கையில் கோல் அடித்ததற்கும் நிறைவு செய்வதற்குமாக ஒரு விசில் அடிப்பார், அது ஒரு தனித்துவமானது.
எமது கல்லூரியின் உதைபந்தாட்ட வரலாற்றை என்றோ ஒரு நாள் யாராவது எழுதும் பணியைச் செய்கையில் திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்கள் மகாஜனாவுக்காக ஆற்றிய சேவை அங்கே அழுத்தமாக பதியப்படும்.
அவர் காலமான செய்தியை நான் எனது மனைவியுடன் சிலாபத்தில் அக்கா வீட்டில் நின்ற போதுதான் அறிந்தேன்.நான் நினைக்கிறேன் 1975,76 களில்,(சரியான ஆண்டினைத் தெரிந்தவர்கள் கருத்துப் பதிவில் பதிவிடுமாறு வேண்டுகிறேன்)சிலாபம் கொழும்பு வீதியில் பிரதான தபால் அலுவலகத்தின்
எதிர்பக்கத்திலதான்; எனது அக்காவின் வீடு இருந்தது.நான் மாலை நேரம் அங்குள்ள கடையொன்றில் ஏதோ வாங்குவதற்காக வந்து நிற்கையில், வானொலியில் மரண அறிவித்தல் சொல்லும் நேரத்தில் „மகாஜனக் கல்லூரியின் முன்னால் ஆசிரியர் திரு.ஏகாம்பரம் அவர்கள் பங்கொக்கில் காலமானார் என்று சொல்லப்பட, நான் வேகமாகச் சென்று மனைவியிடமும் அக்காவிடமும் ஏகாம்பரம் மாஸ்ரர் இறந்திட்டார் என்று சொன்னேன்.அக்காவும் மகாஜனாவில்தான் படித்தவர்.
மகாஜனாவின் உதைபந்தாட்ட வீரர்களுடன் புன்முறுவலுடன் அன்பு பாராட்டி உதைபந்தாட்ட வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்த திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் என்றும் எம் நினைவில் நிற்பார்.
திரு.ஏகாம்பரம் மாஸ்ரர்
எமது கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்த திரு.ஏகாம்பரம் மாஸ்ரரை மகாஜனக் கல்லூரி வட்டாரத்திலும்,இலங்கையடங்கிய உதைபந்தாட்ட வட்டாரத்திலும் தெரியாதவர்களே இருக்க முடியாது.
திரு.ஏகாம்பரம் மாஸ்ரர்,எமது கல்லூரியான மகாஜனக் கல்லூரியின் உடற் பயிற்சி ஆசிரியராகவும்,எமது கல்லூரியின் உதைபந்தாட்ட வீரருக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எமது கல்லூரியின் சிற்பி எனப் பெருமையடன் போற்றிக் கொண்டாடி வரும்,அதிபர் திரு.தெ.து.ஜெயரத்தினம் அவர்கள்,திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்களின் திறமைகளை நன்கறிந்து அவரைத் தேடிப் பிடித்து எமது கல்லூரிக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
திறமையான ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருவதில் மகாஜனாவின் சிற்பி அவர்கள் மிகவும் வல்லவராக இருந்தவர்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவுஜீவித்தனமான நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் எவ்வாறு முக்கியமோ அதே போன்று ஆற்றல்மிகு மாணவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு மிகச் சிறந்த ஆசிரியர்கள் தேவை.
கிரேக்கத்தின் தத்துவஞானியான சாக்கிரட்டீஸ் மொழிந்த „உனை நீ அறி’ என்ற தன்னை உணர்தல் என்ற ஞானச் சொல்லின் அறிவொளி மாணவர்களை ஆக்கிரமித்து நின்றமைக்கு மகாஜனாவின் சிற்பி அவர்களின் கிரேக்க தத்துவஞானியான சாக்கிரட்டீஸின் சிந்தனையோயொட்டிய செயலாக்கமும் காரணமாக அமைந்தது.
ஒரு கல்லூரியை நாடாளுமன்றத்திற்கு ஒப்பானது என்று சொல்வதும் சரியானதாகும்.
திரு:ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்களின் நடை உடை பாவனையே வசீகரமானது,அலாதியானது.அவரை,அவரின் காலத்தில், மகாஜனாவில் கல்வி கற்ற
மாணவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம். அவர் மைதானத்தில் நிமிர்ந்த பார்வையுடன் கம்பீரமாக நடந்து வருகையில் சிவாஜியுடன் ஒப்பிட்டுச் சொல்லி மகிழ்ந்ததைநானே என் காதுபட கேட்டிருக்கிறேன்;.மேவி இழுத்து நெளி நெளியாக வாரிவிடப்பட்ட தலைமயிர் மின்னிக் கொண்டேயிருக்கும்.போ கட்டிய கவர்ச்சிகரமான அவரின் புகைப்படங்கள் கல்லூரியின் மகசீனில் வெளிவருகையில் அப்புகைப்படங்கள் தனித்துவமானவையாக இருக்கும்.ஒரு உடல் பயிற்சி ஆசிரியருக்குரிய அத்தனை மிடுக்கும் அவரிடம் .உதைபந்தாட்ட வீரர்களுக்கு அவர் பயிற்சி எடுக்கும் போது அவணர் ஒரு பயிற்சிக்கூடடமாகவே இருந்தார்.
மாணவர்களுக்கு அவர் உடற்பயிற்சி அளிக்கும் போது,இயல்பாக நகைச்சுiவை ததும்ப பேசியவாறு அவர் நடந்து கொள்ளும் போது அவர் ஓரு ஆசிரியர் என்பதைத் தாண்டி அருகானவர் என்ற உணர்வைக் கொடுத்து வந்ததை நாம் உணர்ந்திருக்கிறோம்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் அதுவும் ஒரு மருந்தென்பதையும் அது உடலை மட்டுமல்ல மனதையும் பேணும் என்பதை அனைவரும் அறிவார்கள்;,அதிலும் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் இன்னும் அதிகமாய் அறிவார்கள்.
அன்று திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் சொல்லிக் கொடுத்த சில உடற்பயிற்சிகளை நான் இன்றும் செய்து வருகிறேன்.இது மிகையல்ல,உண்மை.
திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்கள்,உதைபந்தாட்ட போட்டிகளுக்கான குறிப்பிடத் தக்க நடுவராவார்.
அவர் நடுவராக பணியாற்றும் போட்டிகளில் நடுநிலைமை சிறப்பாகப் பேணப்படும் என்பதை உதைபந்தாட்டப் பிரியர்கள் நன்கறிவர்.
அவர் உதைபந்தாட்ட போட்டிகளின் போது மைதானத்தில் நடந்து வருவதையே எல்லாரும் இரசித்துப் பார்ப்பார்கள்.
விசில் சமிக்ஞையே வித்தியாசம் வித்தியாசமாக இருக்கும். போட்டி தொடக்கம்,பவுல்,பனால்டி,இடைவேளை, கோலடிக்கையில்,உதைபந்தாட்டத்தை முடிக்கையில் என ஒவ்வொன்றக்கும் ஒவ்வொரு விதமாக விசில் சத்தத்தைக் கொடுக்கக்கூடியவர்.
உதைபந்தாட்டத்தை நிறைவு செய்யும் நேரத்தில் அதுவும் சில விநாடிப் பொழுதுகளே இருக்கும் போது கோல் அடிக்கையில் கோல் அடித்ததற்கும் நிறைவு செய்வதற்குமாக ஒரு விசில் அடிப்பார், அது ஒரு தனித்துவமானது.
எமது கல்லூரியின் உதைபந்தாட்ட வரலாற்றை என்றோ ஒரு நாள் யாராவது எழுதும் பணியைச் செய்கையில் திரு.ஏகாம்பரம் மாஸ்ரர் அவர்கள் மகாஜனாவுக்காக ஆற்றிய சேவை அங்கே அழுத்தமாக பதியப்படும்.
அவர் காலமான செய்தியை நான் எனது மனைவியுடன் சிலாபத்தில் அக்கா வீட்டில் நின்ற போதுதான் அறிந்தேன்.நான் நினைக்கிறேன் 1975,76 களில்,(சரியான ஆண்டினைத் தெரிந்தவர்கள் கருத்துப் பதிவில் பதிவிடுமாறு வேண்டுகிறேன்)சிலாபம் கொழும்பு வீதியில் பிரதான தபால் அலுவலகத்தின் எதிர்பக்கத்திலதான்; எனது அக்காவின் வீடு இருந்தது.நான் மாலை நேரம் அங்குள்ள கடையொன்றில் ஏதோ வாங்குவதற்காக வந்து நிற்கையில், வானொலியில் மரண அறிவித்தல் சொல்லும் நேரத்தில் „மகாஜனக் கல்லூரியின் முன்னால் ஆசிரியர் திரு.ஏகாம்பரம் அவர்கள் பங்கொக்கில் காலமானார் என்று சொல்லப்பட, நான் வேகமாகச் சென்று மனைவியிடமும் அக்காவிடமும் ஏகாம்பரம் மாஸ்ரர் இறந்திட்டார் என்று சொன்னேன்.அக்காவும் மகாஜனாவில்தான் படித்தவர்.