கவிதைகள்
அன்பே!நீயுமா தனிமையில்!… ( கவிதை ) …. புங்கை ரூபன்.
அந்நிய தேசம் விட்டு
ஆசை ஆசையாக ஓடிவந்தேன்
அந்தி வேளைப் பொழு ததுவே
இறைவனை தரிசித்தேன்!
சிந்தை யெல்லாம் உன் நினைவே
சேராத கவலை யதே
முந்தய நினைவெல்லாம்
முகம் முகமாக வந்தடி!
அந்த முன் நின்ற ஆலமரம்
எம் காதல் முகவரியை சொன்னதடி!அதில்
எந்தன் இதயம் நந்தனம் ஆடியதே
எம் ஞாபக பரவசத்திலடி !
பந்த பாச குரல் ஒன்று.. அங்கே
பூ பூவாக சொரிந்ததடி!
எந்தன் மன தேடலிலே
கனி மொழியாகக் கேட்டதடி!
அற்ப ஆசை யொன்று
ஞான கற்பத்தில் உற்பத்தி யானதடி.
சிற்பமாக செதுக்கி விட்டேன்
சிந்தையில் நீயெடி!இல்லையில்லை
உண்மையிலே நீதானே
என்கின்ற ஆதாங்கமடி!
அந்நேரம்
அலை அலையாக வந்த குரலோசைகள்
ஆலமரத்தடியின் பின்னாலே-எந்தன்
ஆவல் தேடித் தேடி ஓடிவந்ததே -எந்தன்
நட வேகத்துக்கு முன்னாலே!
பின்னாலே போய் பார்த்தேன்.. காதல்
பழரசத்தில் மூழ்கினர் காதளர்களே!
என்னை நீ ஏமாற்றி விட்டாயே.. என்அன்பே!
நான் வெக்கி போனேன் உன்னாலே!
உன் கன்னத்தை தடவியது போல.. அந்த
ஆலமரத்தை சுற்றி சுற்றி தடவினேன்.. எம்
சின்னமாக பதித்த எம்பெயர்களோ- வண்ண
ஆலமரம் வீங்கி அழிந்தே போனதடி!
அப்போ..
கார் மேகங்கள் திரண்டு வந்தே
சாறளாக. தூறளாக அடைமழையாக
தீராத இசையோடு பொழிந்ததே!
அதே போல
ஆலமரத்தடியில் அப்போ நாம் நிற்க
ஓ..வென்று பெய்த மழைத்துளிகள்
ஆலமர இலைகளில் பட்டு
உன் முகத்தில் முத்து முத்தாக உருண்டதடி!
இந்த சிம்பொனி இயற்கை இசையினிலே
இந்த கவியே! கவிபாடு என்றேன்!
எம் இன்ப செந்தமிழ் மொழியாலே-கவி
சந்தனமிட்டு விட்டாய் நெஞ்சி னிலே!
அன்பே!உன்னை கைகொடு த் தணைத்தே
என் அன்பே!நான் சீமைக்கு செல்கின்றேன்
எனக்கு வதிவிட உரிமை கிடைத்த வுடனே
உன்னை அங்கு அழைப்பேன்! என்றேன்!
பத்து வருடங்களாக வதிவிட உரிமையை தொட்டணைக்க வில்லையடி!பின்
தொட்டணைத்தேன் தொட்டணை த்தேன்.
வதிவிட உரிமையை தொட்டணைத்தேன்!
தொட்டணைத போது நான்.. என் உயிரே
தூரமாக நீ போனாயே!மன
பெட்டியிலே பொத்தி வைத்த கனவெல்லாம்
துகள் துகளாய் போனதடி!
இப்போ
முள்ளிவாய்க்கால்
கல்லறை பூங்காவிலே.. அன்பே!உன்
கல்லறையை தேடுகின்றேன் -உன்னோடு
என் பெயர்ரையும் சேர்த்து விடவே!
கண்டறியேன் நான் கண்டறியேன். நானென் இதயக் கல்லறையில்..உன் பெயரை
சேர்த்து விட்டேன்
சேர்த்து விட்டேன்!!
புங்கை ரூபன்.