கவிதைகள்
வேடிக்கை விளங்கவில்லை!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
இறக்கைகள் இருக்கும் பறவைகள் யாவும் பறப்பதில்லை
முட்டையிடுவது எல்லாம் குஞ்சு பொரிப்பது இல்லை ஓடுபவரெல்லாம் ஓட்டப்பந்தயமதில் கலந்து ஒடுவதில்லை கோவிலுக்குப் போவோரெலாம் வீடுபெறும் உறுதியுமில்லை நட்டெதெலாம் பயிராகும் என்ற எண்ணம் பலிப்பதுமில்லை குட்டக் குட்ட குனிந்திருப்பான் என்பெதும் எப்போதுமில்லை சுட்டுக் கொல்பவன் எல்லாம் வேடனாயும் இருப்பதில்லை தட்டிக் கொடுப்பவன் எல்லாம் தலைநிமிர உதவுவதில்லை படைப்புயாவும் படைப்புக்களாய் போற்றப் படுவதில்லை உடைப்புக்கள் நிறைந்த கண்மாயில் நீர்சேர வழியில்லை கொடையாளி என்பவனும் கொலையாளி ஆனால் நலனில்லை மடைதிறந்து நீர்பாய்ந்தும் பயிர் அழிந்தால் பலனில்லை தாய்மொழியில் பற்றில்லா தன்மையுள்ளோர் மக்களில்லை வாய்ச்சொல் வீரராய் வாழ்ந்து மடிவதிலும் பொருளில்லை தூய்மையில் நாட்டமில்லாதோர் துப்புறவை ஏற்பதில்லை வாய்மை வழிநின்று செல்பவர் வழிதவறிச் செல்வதில்லை இந்நீநி எல்லார்க்கும் எப்போதும் தெரியாது போனதில்லை அந்நாள்முதல் இந்நாள்வரை சான்றோரவர் புகழ்வதில்லை சந்தியில் நின்று கொண்டு சதிராடுபவரைப் புரியவில்லை விந்தையாம் அவர்செய்யும் வேடிக்கையும் விளங்கவில்லை -சங்கர சுப்பிரமணியன்.