இலக்கியச்சோலை

சங்கமம் சங்கமம் சங்கமம்- கலைஞர்களின் சங்கமம்!… சி. மௌனகுரு.

சி. மௌனகுரு

29.12.2022 டிசம்பர் அன்று எல்பிஸ்டன் கலை அரங்கில் எனது பழைய சிங்கள கலை நண்பர்களைக் காணும் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.அவர்களின் அன்பும் அரவணைப்பும் வாத்சல்யமும் எம்மை மகிழ்வித்தன பரவசப்படுத்தின

சின்னம் சிறிய இனபேதம் எனும் உணர்வு தாண்டிக் கைகோத்த அன்பு உணர்வு அது

எல்பின்ஸ்டன் மேக் அறையில் அனைவருக்கும் ஒப்பனை செய்துவிட ஒப்பனைச்சாதங்களும் இரண்டு மூன்று ஒப்பனைகலைஞர்களும் காத்து நின்றனர்

எமக்கு என ஒரு அறை தரப்பட்டது

அது குளிரூட்டப்பட அறை

அதற்குள் எம் அனுமதி பெற்று மூவர் வந்து உடை மாற்றினர்

ஏற்கனவே பலரை நான் அறிந்திருந்தேன்

என்னையும் அவர்களில் பலர் அறிந்திருந்தார்கள்.

காலம் எல்லோரது உடலிலும் முகத்திலும் வயதிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது

எனினும் விரைவில் புரிந்துகொண்டோம்

நரிபேனா

எனும் சிங்கள நாடகம் சிங்கள நாடக உலகில் 1960 களில் கொடிகட்டிப் பறந்த நாடகம் அது தமிழிலும் சின்னையா சிவனேசனால் தமிழ் மொழி ஆக்கம் செயபப்ட்டு நரி மாப்பிளை எனும் பெயரில் நாடகமக வந்துள்ளது

அதன் எழுத்தாளரும் நெறியாளரும் தயானந்த குணவ்ர்த்தனா.

அவரது 70 ஆவது வயதில் இதேமேடையில் நாடகம் நடந்தபோது காலம் ஆனவர்

மேடையில் இறப்போர் கொடுத்து வைத்தவர்கள்’

அவர் மகன் வசந்தா தன்னை அறிமுகம்செய்தார்

நான் தயானந்தா குணவர்த்தனாவின் மகன் என்றார்

அவர் தொழில் தொழிநுட்பம் சார்ந்தது ஆனால் நாடகம் செய்கிறார்

நான் தயானந்த குண வர்த்தனாவை அறிவேன்

இன்று அவர் மகன் நாடகத்தில் நடிக்கிறார்.

தந்தையின் நாடகத்திலிருந்து ஒரு சிறுபகுதியை அவர் செய்ய விருக்கிறார்

அவரும் நானும் ஒப்பனை செய்த படியே உறவாடினோம்

சிங்கபாகு நாடகத்தில் சிங்கபாகுவாக நடித்த நிசங்க டெல்டெனியாவை நீண்ட நாட்களின் பின் கண்டேன் அவர் நடிக்க வந்திருந்தார்

அவரும் எமக்கு ஒதுக்கப்பட்ட அறையினுள் ஒப்பனை செய்ய வந்திருந்தார்

சற்று மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் இருந்தார்

அவர் இம்முறை போர்த்துகேசிய படைத் தலைவனாக நடிக்க விருந்தார்

தனக்குத் தானே உடை மாற்றிப் மேடையேற ஆயத் தமான மிக வயது சென்ற ஒருவரைக்கண்டேன் தெரிந்த முகம் போலப்பட்டது

அவர் என் செயல்பாடுகளை அவதானித்திருக்கிறார் என்னை யார் என்று கேட்டார்

நான் கூறினேன் என்னைத் தெரிந்த முக பாவம் தெரிந்த்து

அவரே சமிந்த மெதஹெதற அவருக்கு வயது 79

124 மேடை நாடகங்களும்

102 ரெலி நாடகங்களும் நடித்த அவர்

10 நூல்களின் ஆசிரியர்

அந்த தள்ளாத வயதிலும் தான் நடித்த நாடகத்தின் ஒரு சிறுபகுதியை நடிக்க வந்திருந்தார்

தான் பிறந்த ஆண்டு 1943 செப்டம்பர் என்றார்

நான் பிறந்த ஆண்டு 1943 ஜூன் என்றேன்

அப்படியானால் நான் உங்களது தம்பி எனக்கூறி

ஐயே என அழைத்தார்

நான் தம்பி எனக் கூறினேன்

இருவரும் சிரித்துகொண்டோம் கைகொடுத்துகொண்டோம்

நரிபேனா நாடகத்தில் நரிக்கு வந்தவர்

மனமே நாடகத்தின் புதிய மனமே குமாரி

ஶ்ரீ சங்க[போ நடகத்தின் பழைய நடிகர் எனப் மிகப்பழையவர்கள்

நான்தான் சீதை என்றுகூறியபடி ஒரு பெண் வந்தாள் அவ்ள் சிங்களப்பெண்

இதோ தமிழ்இராவணன் நிற்கிறான்

என நான் ஒப்ப்னை முடித்து நின்ற தினேசைக் காட்டினேன்

அவனது ஒப்பனை மிக எடுப்பகாவும் அழகாகவும் இருந்தது தினேஸ் இயல்பில் அழகான பையன் ஒப்பனை அவனை இன்னும் அழகு படுத்தி ஜொலிக்க வைத்தது

ஆஹா இராவணா

எனக்கூறி இராவ்ணன் அருகில் அவள் சென்றாள்

தமிழ் இராவணனும் சிங்களச் சீதையும் அருகருகாக நின்று படம் எடுத்துகொண்டனர்

எம்மையும் சாட்சிக்கு அழைத்துத்துக்கொண்டனர்

மேடையில் காவியத்தில் இது சாத்தியமேயில்லை

ஓடி ஓடி ரென்சனோடு திரிந்து கொண்டிருந்தார் அமைப்பாளர்

அவர் என்னிடம் வந்து

நீங்களும் குத்து விளக்கு ஏற்றுகிறீர்கள்

எனக் கூறி நிகழ்ச்சி நிரலில் இருந்த என்பெயரைக் காட்டி

6.25க்கு மண்டபத்தின் முன் வந்து விடுங்கள்

எனக்கூறிசென்றார்

ஒழுங்கமைத்த டவர்ஹோல் பணிப்பாளர் சம்கா திஸ்ஸ நாயக்காவைக் கண்டேன்

ஒரு மாதத்திற்கு முன்

ஒரு பயிற்சி நெறிக்காக நான் அங்கு சென்றபோது அவர் அறையில் நான் சென்று சந்திக்க வேண்டி வந்தது

என்னை அழைத்துச் சென்றவர் கலாநிதி ஜெயப்பிரகாச சர்மா

பணிப்பாளர் காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாதவராக அன்று இருந்தார்

இன்றோ சிறிது நொண்டி நொண்டி நடந்து வந்து எம்முடன்உரையாடிய அவரைப்பார்த்து

மிஸ்டர் திஸ்ஸநாயக்கா உங்கள் கால் சரியா?

எனக்கேட்டேன்

சரி சேர்

எனக்கூறி சிரித்து சிறிது நேரம் நின்று உரையாடி வாழ்த்திச் சென்றார்

ரவர் ஹோலில் தமிழ் நாடகப்பிரிவு சிறப்ப்பாக நடைபெறத் தனிக் கவனம் எடுப்பவர் அவர், இதேபோல அவருக்கும் தமிழ் நாடகப்பழம் கலைஞரக்ளை ஆழைத்து ஒரு பெரு நிகழ்வு செய்ய ஒரு திட்டம் உள்ளது

அங்கு வந்த வள்ளல் காசீம் உமரிடம் இத்திட்டத்தை அவர் கூறி உதவி கோரியதாக அ றிந்தேன்

அது நடக்குமானால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்

நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படும் நல்ல உள்ளங்கள்

ஒத்திகைக்கு எமக்கு மேடை தரப்பட்டது

எமது குழு ஒத்திகைகாக மேடைக்கு வந்தது

ஒளி எம்மீது பாய்ச்சப்பட்டதால் சபையில் இருந்தோரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை ஒத்திகையின் போது

Professor I am Kaluvaraaychi here

எனப் பேராசிரியர் கழு ஆராய்ச்சியின் குரல் கேட்டது

அவர் ஆற்றுகைக் கலை பல்கலைக்க்ழகத்தின் உபவேந்தராகவும் பீடாதிபதியாகவும் இருந்தவர்

அவர் பீடாதிபதியாக இருந்த போது ஒரு முறை அவர் அப்பல்கலைக்க்ழக மாணவர்களையும் விரிவுரை யாளர் களையும் அழைத்துகொன்டு சுவாமி விபுலா னந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் வந்தபோது அவர்கள் பலருக்கு நான் கூத்துப் பழக்கியுள்ளேன்

அப்படிப் பழகிய ஒரு பெண் விரிவுரையாளரும் வந்து வணங்கிப் பழைய விடயங்களை நினவூட்டினார்

அவர்கள் அன்று இராசதுரை அரங்கில் எமது கூத்து கிராமிய நடனங்களை எம்மிடம் பழகி ஆட

நமது மாணவர்களோ சிங்கள் மக்களின் நடனங்களை அவர்களிடம் பயின்று ஆடினர்

இரண்டு ஆற்றுகைகளும் அன்று ஒன்றாக அரங்கேறின

அப்போது பணிப்பாளராக இருந்தவர் கலாநிதி பிரேம்குமார் உபவேந்தராக இருந்தவர் கலாநிதி கோவிந்தராஜா

பேரசிரியர் கழு ஆராய்ச்சி எமது எல்பின்ஸ்டன ஒத்திகைக்கு அன்று மிகவும் உதவினார்

மேடையை ஒழுங்கமைக்கவும் மைக்கை மேடையில் பொருத்தி ஒலி அளவை தரத்தைப் பார்க்கவும் நேரம் எமக்குத் தேவைப்பட்டது

24 நிகழ்வுகளுக்குமான ஒத்திகை நடை பெற வேண்டும்

மேடை நிலை அவசர அவசரமாக் பார்க்க வேன்டியிருந்தது

நாம் சற்று நேரம் எடுக்க வேண்டி இருந்தது

எனினும் சலிப்படையாது எமக்கு ஆதரவு தந்து

Professor take your own time

எனக் கூறியதுடன் நான் மேடையை விட்டு மெல்ல மெல்ல படியால் இறங்கும் போது

மெல்ல மெல்ல கவனம் கவனம்

எனக்கூறி ஓடி வந்து ஒருவர் கைபிடித்துக் கவனாமகக் கீழ் இறக்கிவிட்டார்

பயப்படாதீர்கள் வயது எண்பதை அண்மினாலும் நான் தனியே இறங்குவேன்

என வீறாப்புப் பேசினேன்

ஆச்சரியதுடன் அவர் என்னைப்பார்த்தார்

சிறிது நேரம் கழிய ஒப்பனை அறைக்குள் எனைத்தேடி வந்த பேராசிரியர் கழுவாராய்ச்சி

எல்ல்லாம் சரியாக இருக்கிறதா

எனக்கேட்டு என்னுடன் நின்று படமும் எடுத்துகொண்டார்

அன்போடு அவர் என்னை அணைத்தும் கொண்டார்

ஒப்னையோடுநின்ற இன்னொருவர் ஒரு சிங்களக்கலைஞர் தன்னை அனுரதபுரத்தின் பாடசாலை ஒன்றின் நாடக அரங்கியல் ஆசிரியர் என அறிமுகம் செய்து

இலங்கைத் தமிழ் நாடகக் காரர்கள் பற்றிப் படிப் பிக்கையில் உங்களைப்பற்றியும் படிப்பிக்கிறோம் உங்களுட்ன் நின்று படம் எடுகலாமா மாணவரிட்ம் கொண்டு சென்று காட்டலாம்

எனப் பௌவியமாகக் கேட்டார்

அவரை அப்படியே அணைத்துகொண்டேன்

படம் எடுத்தோம்

எங்களோடு கடைசி வரை நின்று உதவி புரிந்து ஊக்கம் தந்து கொண்டிருந்தார் ஜெயபிரகாஸ்

அன்பும்

புரிந்துணர்வும்

பரஸ்பர நேசமும்

அச்சிறிய ஒப்பனை அறைக்குள்ளூம்

பரந்த அந்த மண்டபத்திலும் பிரவகித்து ஓடியது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது

ஆம் அது கலைகளை மனதார நேசிக்கும் ஓர் கலைஞர்கள் சங்கமம்

நாட்டு மக்களிடையேயும் இச் சங்கமம் வராதா என மனம் ஏங்கியது

—————————————————–

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.