இலக்கியச்சோலை
” சீசர் (Cesar)” விருது வழங்கும் அகாடமியின் அறிவிப்பு!
எவ்வளவு திறமை புகழ் அனுபவம் கொண்டவர்களாக உலக திரைப்பட துறையில் இருந்தாலும், அவர்களின் நடத்தை மீது குற்றச்சாட்டு இருப்பின் அவர்களுக்கு விருது வழங்க போவதில்லை.
ஆஸ்கார் விருதுக்கு மேலான விருதாக
பிரான்சின் திரைப்பட தேசிய விருது என
மதிக்கப்படும் ” சீசர் (Cesar)” விருது வழங்கும் அகாடமி மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 25 ம் திகதி பாரிஸ் மாநகரில் விருது வழங்கும் திருவிழா இடம்பெறவுள்ள சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமக்குள்ள பெயரையும் புகழையும் பயன்படுத்தி தமது நடத்தையை பிழையாக்கி கொண்டவர்கள் இவ் வருடம் நடக்க இருக்கும் விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எவ்வளவு சாதனையை, நடிப்பிலும் சரி, இயக்குனர் எனும் பதவியிலும் சரி நிலைநாட்டி இருந்தாலும் அவர்களை தெரிவு செய்வது மட்டுமல்ல அவர்களை அழைக்கவும் போவதில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் பிரான்ஸ் உட்பட பல மேற்குலக திரைப்பட டைரக்டர், நடிகர் மீது பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டு
உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகரீக உச்சத்தில் உலகம் சுழன்றாடும் இன்றைய கால கட்டத்தில், மேற்குலகம் இவ்வாறான வரம்பு மீறும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாட்டை விதித்திருக்க புறப்பட்டுள்ளமை , பல செய்திகளை பல தரப்பினருக்கு கூறும் ஒன்றாக பார்க்கலாம்.