கவிதைகள்
பூ(பதிக்கு)வுக்கு ஒரு பூ(புகழ்) மாலை!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
பூக்களை நாடி வண்டுகள் பல வருவதுண்டு
பூபதிக்கும் விருதுகள் வந்து குவிவதுண்டு நறுமலரை வண்டு நாடுவதும் வாடிக்கையே அறுதியிட்டு கூறுவதிங்கு மிகையிலையே காலை எழுந்தவுடன் படிப்பென்றான் பாரதி காலை எழுந்தவுடன் படைப்பென்பார் பூபதி ஆதவனே கிழக்கெழ காலம் பார்த்திருப்பான் தூதனாய் செய்தி கொடுப்பதில் முந்திடுவார் கணனி விசைப்பலகை ஓய்வை கேட்டாலும் கணநேரம் அவர் விரல்கள் அதை தந்திடாது குணமதையும் குறையெனக்கூறி நின்றிடாத மணம்வீசி தமிழ்மணம் பரப்பு தகையுடையன் ஓட்டத்தில் தமிழுக்காய் முன் ஓடிநிற்பவர்க்கு தோட்டமாம் கனடா இலக்கிய தோட்டமதும் நாட்டமுடன் நயந்தளித்த விருதைக் கேட்டு கூட்டமாய் தமிழர் கொண்டாடி மகிழ்வோமே! -சங்கர சுப்பிரமணியன்.