இலக்கியச்சோலை

கிழக்கு கலைஞர்கள் உருவாக்கிய சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்படம் சாய்ந்தமருதில் வெளியீடு!

சமூகத்தின் பிரச்சினைகளையும், கூடாத பழக்கங்களையும் மக்களுக்கு எடுத்துரைத்து சமூக மாற்றத்தை நோக்கி கிழக்கு மாகாண அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் கலைஞர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த “சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்படம்” கடந்த வெள்ளிக்கிழமை (25) மாலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மண்டபத்தில் திரையிடப்பட்டது.இளம் இயக்குனர் எல்.எம். சாஜித் இயக்கத்தில் டொப் குயின் அட்வர்டைசிங் நிறுவன தயாரிப்பில் பிரபல கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் பிரதான நடிப்பில் வெளிவந்த இந்த நாடகங்கள் முதல் தொழுகை, பணத்திமிரு, பெண்தேவதை, குடிபோதை, வட்டியின் வினை போன்ற சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு திரையிடப்பட்டது.மருதம் கலைக்கூடல் மன்றம் மற்றும் தெரு பசங்க தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் இணைத்தயாரிப்பில் வெளிவந்த இந்த சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்பட வெளியீட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ.எம். ரின்ஸான், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், அமானா நற்பணிமன்ற தலைவர் ஏ.எல்.ஏ. பரீட் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ.எச்.சபிக்கா, எஸ். சுரேஷ்குமார், சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அன்வர் சதாத், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுஹைல் அஸீஸ், மருதம் கலைக்கூடல் மன்ற சிரேஷ்ட நிர்வாகிகள் உட்பட கலைஞர்கள், பிரதேச முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நூருல் ஹுதா உமர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.