இலக்கியச்சோலை
எஸ்.பொ அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள்!
உன் “தீ”யில் எரிந்து சாம்பலாய்ப்போன
மேட்டுக்குடிக்கு..
நீ “சடங்கு” செய்தவன்தான்
நீ, உன் ‘நனைவிடை தோய்ந்து”
நின் “வரலாற்றில் வாழ்ந்து
அந்த வையகம் சென்றவன்தான்.
அன்று முற்போக்கு இயக்கத்தை எதிர்த்து
நின்று நற்போக்கு இயக்கத்தை தொடுத்து
அம்புகள் எய்தவன்தான்
அன்று உன்னை இழித்தும்,பழித்தும்
விஷமம் செய்தோரை நீ
கணக்கில் எடுக்காதவன்தான்
“இளம்பிறை”கொண்டு
உன் இதயத்தை திறந்து
நல் இலக்கியம் செய்தவன்தான்.
அன்று “அரசு வெளியீடு” நிறுவனம் தொடங்கி
கிழக்கை முன்னிலை செய்தவன்தான்
ஈழத்து எழுத்தாளர்களை இணைத்து
அறுபத்திமூன்றில் “தமிழ் விழா” எடுத்தவன்தான்.
நீ ஓர்மம் மிக்க ஒருவனாய் நின்று
நற்பணி செய்தவன்தான்
எதற்கும் அஞ்சாநெஞ்சனாய் எழுதித்தள்ளி
வணங்காமுடியானவன்தான்…
அகவை எண்பத்திரெண்டில்
மூப்பையும் பிணியையும் சாக்காட்டையும்
முறையாக கண்டவன்தான்
எஸ்பொ என்று உலகம் அறிந்த
எங்களின் பொக்கிசம்தான்
ஈழத்து இலக்கிய உலகிலே
நீ என்றுமே சகாப்தம்தான்.
இன்று உனது எட்டாம் ஆண்டு நினைவுநாள்.
போற்றும், தமிழ் உலகம் உன்னை.
காற்றும்,கடலும் உள்ளவரை.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் .