இலக்கியச்சோலை

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் 102 வது பிறந்தநாள்!

1920 நவம்பர் 17 பிறந்த, தமிழ் சினிமாவின் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் 102 வது பிறந்த தினம் இன்று. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் அவர்களின் சாயலின்றி முன்னணி இடத்தைப் பிடித்தவர் ஜெமினி கணேசன்.

எம்ஜிஆர், சிவாஜி இருவரும் அரசியலில் ஈடுபட்டவர்கள். ஜெமினி கணேசன் அந்தப் பக்கமே கடைசிவரை செல்லவில்லை. எம்ஜிஆர் ஆக்ஷன் ஹீரோவாகவும், சிவாஜி உணர்ச்சிகர நடிகராகவும் விளங்கிய போது இரண்டுக்கும் நடுவில் காதல், குடும்பம் என தனி ட்ராக்கில் பயணித்து காதல் மன்னன் என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டார் ஜெமினி கணேசன். அதேபோல் முன்னவர்கள் இருவரும் நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர்கள். ஜெமினி கணேசன் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர்.

ஜெமினி கணேசன் அறிமுகமானது 1941 வெளியான மிஸ் மாலினி படத்தில். 1953 இல் வெளியான தாய் உள்ளம் படத்தில் வில்லனாக தோன்றினார். 1954 இல் வெளியான மனம் போல மாங்கல்யம் படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் உதிரி கதாபாத்திரங்களில் நடித்த போது கணேஷ், கணேசன் என்று அவரது பெயர் டைட்டில் கார்டில் இடம்பெற்றது. பல படங்களுக்குப் பிறகுதான் ஜெமினி கணேசன் என போட ஆரம்பித்தார்கள்.

ஜெமினி கணேசனின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் அது மிஸ்ஸியம்மா. இதுவொரு ரொமான்டிக் காமெடி திரைப்படம். எல்.வி.பிரசாத் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நாகிரெட்டியும், சக்கரபாணியும் தயாரித்தனர். ரபிந்திரநாத் மொய்த்ரா எழுதிய மன்மொயி கேர்ஸ் ஸ்கூல் என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது.

மிஸ்ஸியம்மா தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரானது. தெலுங்கில் என்.டி.ராமராவ், சாவித்ரி, அக்னியேனி நாகேஸ்வரராவ், ஜமுனா நடித்தனர். தமிழில் நாயகிகளை மாற்றவில்லை. என்டி.ஆருக்கு பதில் ஜெமினி கணேசன் நடித்தார். ஜமீன்தார் ரங்காராவ் நடத்தி வரும் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். கணவன், மனைவியாக இருப்பவர்களுக்கு வேலை கொடுக்கலாம் என தீர்மானிப்பார் ரங்காராவ். இந்த நிபந்தனை காரணமாக, வேலையில்லாத இந்து ஜெமினி கணேசனும், கிறிஸ்தவரான சாவித்ரியும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி வேலையில் சேர்வார்கள்.

ரங்காராவின் மகள் சின்ன வயதில் தொலைந்து போயிருப்பாள். அவள் நினைவாக, அவளது பெயரில்தான் அந்தப் பள்ளியை நடத்தி வருவார். இந்நிலையில் ஜெமினி, சாவித்ரியின் குட்டு அம்பலப்படும். அதேநேரம்,

காமெடியும், காதலும் கலந்த இந்தப் படம் வெற்றி பெற, இதனை மிஸ் மேரி என்ற பெயரில் இந்தியில் எடுத்தனர். ஜெமினி கணேசனே அதிலும் நடித்தார். சாவித்ரிக்குப் பதில் மீனா குமாரி நடித்தார். ஜமுனா இந்தியிலும் அதே வேடத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இந்தியிலும் படம் வெற்றி பெற்றது. 1959 இல் வெளிவந்த கல்யாணப் பரிசு ட்ரெண்ட் செட்டர் திரைப்படமாக அமைந்து ஜெமினி கணேசனை முன்னணி நடிகராக்கியது.தொலைந்து போன மகள்தான் சாவித்ரி என்பதும் தெரியவரும். இறுதியில் ரங்காராவ் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, உண்மையிலேயே கணவன், மனைவியாக்குவார்.

ஜெமினி கணேசன் காதல் மன்னன் பட்டத்துக்கேற்ப நான்கு திருமணங்கள் செய்தார். முதல் மனைவி அலமேலு, இவருக்குப் பிறந்தவர்கள் நான்கு பேர். இரண்டாவது மனைவி புஷ்பவல்லி. இவர் ஜெமினி கணேசனின் முதல் படம் மிஸ் மாலினியில் நடித்தவர். இவருக்குப் பிறந்தவர்கள் இரண்டு பேர். அதில் ஒருவர்தான் இந்தி நடிகை ரேகா.

1952 இல் சாவித்ரியை மணந்தார். அவருக்கு பிறந்தவர்கள் இரண்டு பேர். 1997 இல் தனது 77 வது வயதில் ஜுலியானா ஆன்ட்ரூ என்பவரை நான்காவதாக திருமணம் செய்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை.

எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளுக்கு மத்தியில் அவர்களின் சாயலில்லாத தனித்த ஆளுமையாக ஒருவர் வெளிப்படுவது அரிதான சம்பவம். அதனை ஜெமினி செய்து காட்டினார். அவரது சாப்ட் இமேஜுக்கு பாடகர்கள் ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோரது பங்களிப்பும் துணிபுரிந்தது.

மூத்த நடிகர்களான சிவாஜி, நாகேஷ், காகா ராதாகிருஷ்ணன் போன்றோரை அவர்களின் வயதான காலத்தில் வித்தியாசமான வேடங்கள் தந்து, இளையதலைமுறைக்கு கடத்தியதில் கமலின் பங்கு முக்கியமானது. ஜெமினி கணேசனையும் அவ்வை சண்முகியில் நடிக்க வைத்து, இளைய தலைமுறைக்கு அவரது நடிப்பை அறிமுகப்படுத்தினார் கமல். ஜெமினி அதில் அனாயாசமாக நடித்து, தானொரு சிறந்த நடிகன் என்பதை மெய்ப்பித்திருப்பார்.

ஜெமினி கணேசன் நடித்த பழைய திரைப்படங்கள் பலவற்றையும் சற்றே மாற்றி இப்போது எடுத்தால் பெரிய வெற்றியை பார்க்கலாம்.

எம்மை தம் வசீகர நடிப்பால் கவர்ந்த ஜெமினி கணேசன் 22 மார்ச் 2005ல் தன் 85வது வயதில் காலமானார்.

முற்றும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.