கவிதைகள்
தன்னை நம்பியவர்!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
பார்போற்றும் வண்ணம் ஏவுகணை ஏவினார்
சீர்மிக்க விஞ்ஞானியாய் சிறந்தும் நின்றார் யாரென்று எண்ணி இவ்வுலகு வியக்கையில் கூர்மதியுடன் குவலயத்தில் உயர்ந்திட்டார் ஐயா அப்துல் கலாமும் நம்பிக்கை வைத்தார் பொய்யாக போகவில்லை புகழ் அடைந்தார் மெய்யாக வெற்றி கண்டார் விண்வெளியில் தொய்வின்றி முயற்சியிலும் பலனடைந்தார். ஏவுகணைநாயகனாய் சாதனைகள் படைக்க தீவுபோல் மணமுடிக்காது தனித்துநின்றார் மேவுபுகழ் பத்மவிருதாம் மூன்றை வென்றார் சாவுவந்து கொண்டு செல்ல விட்டகன்றார் துன்பம் வந்தால் கண்களை மூடாதே என்றார் நன்மையின்றி நம்மையது கொல்லுமென்றார் இன்பமொடு நம்பிக்கை வைத்து நின்றாலே வென்றிடுவாய் கண்திறந்ததை நீ பாரென்றார் கனவுகண்டிட நம்பிக்கையோடு சொன்னார் நனவாகும் நாடும் வல்லரசாய் வளருமென்றார் இனமதிலே பற்றுகொண்ட நற்றமிழர் அவர் தினமிது அவர் பிறந்ததினம் போற்றுவோமே! -சங்கர சுப்பிரமணியன்.