Uncategorized

உங்கள் பிள்ளைகள் பொறுப்புள்ளவர்களாக வளரவேண்டுமா? – பெற்றோர்கள் செய்யவேண்டியவை!

இன்றைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நடத்தை, குணநலன்கள் மற்றும் செயல்பாடுகள் என அனைத்தையும் கொரோனா பொதுமுடக்கத்துக்கு முன் மற்றும் பொதுமுடக்கத்துக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். காரணம், கொரோனா பொதுமுடக்கம் குழந்தைகளில் மட்டுமல்ல; பெரியவர்களின் வாழ்க்கை முறையையுமே தலைகீழாக மாற்றிவிட்டது எனலாம். பொதுமுடக்க காலங்களில் ஆன்லைனில் வகுப்புகளை கவனித்த மாணவர்களுக்கு வேலைகளை சுலபமாக்க எப்போதும் பக்கத்தில் பெற்றோர்களின் ஆதரவும் உதவியும் கிடைத்தது. தற்போது பள்ளிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அங்கு ஆசிரியர்கள் என்ன செய்யவேண்டும் என்று வழிநடத்துவார்களே தவிர, உடனிருந்து உதவமாட்டார்கள். இது மாணவர்கள் தங்கள் உடைமைகளையும், தங்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும் என மேலும் பொறுப்புடையவர்களாக மாற்றுகிறது.

இருப்பினும் பெற்றோர்கள் உடனிருக்கும்போது பிள்ளைகள் அதேபோல் இருக்கமாட்டார்கள். அதே பள்ளியில் இருக்கும்போது சில முடிவுகளை சுயமாக அவர்களே எடுக்க நேரிடும். இது அவர்களை பின்னாளில் சுதந்திரமாக முடிவெடுக்கும் நபர்களாக உருவாக்கும். பெற்றோர்கள் சில எளிய வழிகளை பின்பற்றுவது பிள்ளைகளை மேலும் பொறுப்புள்ளவர்களாக்கும்.

1. எப்போதும் குழந்தைகளுடன் இருக்கமுடியவில்லையே என்று பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். பிள்ளைகளுடன் இருந்தால் அவர்களுடைய வேலையையும் பெற்றோர்களே செய்ய தூண்டப்படுவார்கள். இதனால் பிள்ளைகள் எப்போதும் தங்கள் பெற்றோர்களையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். அதுவே குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களுடைய வேலைகளை அவர்களாகவே செய்ய கற்றுக்கொள்வர். சில நேரங்களில் தவறுகள் நடந்தாலும் அதுவே அடுத்தமுறை அந்த தவறு செய்யாமல் உணர்த்தி, பொறுப்புள்ளவர்களாக உருவாக்கும்.

2. குழந்தைகளுக்கு புதிய விதிகளை உருவாக்குங்கள். வீட்டில் சில விதிமுறைகளை வைத்து பிள்ளைகளுக்கும் சில பொறுப்புகளை கொடுத்து, அவற்றை கையாள அனுமதிக்கும்போது அவர்கள் மேலும் சில வேலைகளை தாமாகவே கையிலெடுப்பர். வீட்டில் ஒரு பகுதியாக பொறுப்புகளை நிர்வகிப்பவராக பிள்ளைகள் உணர்வது மிகமிக அவசியமான ஒன்று.

3. குடும்ப அட்டவணையில் குழந்தைகளும் ஒரு பகுதி என்பதை புரியவையுங்கள். வீட்டு வேலைகளில் எதை யார் செய்யவேண்டும் என்று பிரிக்கும்போது இது உங்களுக்கான வேலை அதை நீங்கள்தான் இந்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதை கட்டளையாக கொடுத்துவிட வேண்டும். அதன்மூலம் வீட்டிலுள்ள வேலைகள் மற்றும் தேவைகள் என்னென்ன? அதை எப்போது எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை அவர்களால் கற்றுக்கொள்ள முடியும்.

4. ஒரு பெற்றோராக தங்கள் பிள்ளைகளுக்கான அனைத்து வேலைகளையும் தாங்களே செய்யவேண்டும் என பெற்றோர் ஆசைப்படுவது சகஜம்தான். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு அவர்களுக்கு உதவாது. ஒவ்வொரு பருவமாக குழந்தைகள் வளர வளர அவர்கள் தேவைகளும், வேலைகளும் மாறிக்கொண்டே இருக்கும். 8 வயதில் அம்மா தனக்கு சாதம் ஊட்டவேண்டும் என்று நினைத்த பிள்ளைகள், 15 வயதிலும் அதேபோல் நினைக்கமாட்டார்கள். எனவே சில வேலைகளை, செயல்களை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டால் அதில் பெற்றோர்கள் தங்கள் கைகளை வைக்கக்கூடாது. ஆரம்பத்திலேயே குறைகளை புரியும் வகையில் பாசிட்டிவாக சுட்டிக்காட்டிவிட்டு அதிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதிக்கவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.