கவிதைகள்
வங்கியும் நானும்!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
ஒரே ஒரு ஊரிரே ஒரே ஒரு வங்கி
ஒரே ஒரு ஊரிரே ஒரே ஒரு வங்கி
ஒரே ஒரு வங்கிக்குத்தான் ஒன்பது கிளைகள்
அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படியில்லை
உருப்படியில்லை
வங்கியில் பணம்போட நானும் போனேன்
அதை வாங்க அங்கு ஒரு நாதியும் இல்லை
பணத்தை வாங்க அங்கே காசாளருமில்லை
பக்கத்திலே இருந்த இரு கணக்கருமில்லை
கணக்கருமில்லை
எப்போதும் செயல்படுத்தும் மேலாளரில்லை
என்னுடன் வந்திருந்த தம்பியும் சரியில்லை
மொத்தத்தில் சொன்னால் வங்கி சரியில்லை
எத்தனைபேர் வந்தாலும் திருத்தவுமில்லை
ஒருவர் என்னைப்பார்த்து சொன்னார் அங்கே
நீதான் சரியில்லை உன்பணமும் சரியில்லை
என்ன சரியில்லை என்று நானும் கேட்டேன்
பணமெல்லாம் அழுக்கென பதில் சொன்னார்
எவரிடத்தும் பணம் எதுவும் அழுக்கில்லயா
என்ற நியாயமான ஒரே ஒரு கேள்விகேட்க
ஏதும் அறியேனடி ஞானப்பெண்ணே என்று
அன்றுசொன்ன சித்தர்போல அவருமானார்!
-சங்கர சுப்பிரமணியன்.