கவிதைகள்
எய்தது நண்பரென்றால் என்செய்வேன்?…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
எதிரி யாரும் என்மேல் அம்பு எய்யவில்லை
எவர்க்கும் அம்பெய்யும் அத்துணிவில்லை எறிந்ததுவோ எந்தன் ஆருயிர் நண்பன் எண்ணிப் பார்க்கையிலே பெரும் துன்பம் கூரான வந்த அம்பு குறிபார்த்து வந்ததுவே நேராக வந்த அம்பு நெஞ்சையும் தாக்கியதே ஆனாலும் அம்பு நெஞ்சை துளைக்கவில்லை அது முனைமழுங்கி என் முன் விழுந்ததுவே விழுந்த அம்மை நானடெத்துப் பார்த்தேன் அடையாளம் சொன்னது நண்பன் அம்பென்று நண்பனினின் அம்புக்கு என்மேல் அன்போ அவருக்கு வம்பானது எவர் செய்த வம்போ என்னைக் காத்ததுவும் அவரின் பேரன்பு உண்மை என்று நான் சொன்னால் நம்பு என்றோ அவர் எனக்களித்த இரும்பு கவசம் அந்த கவசத்தினால் நிற்கவில்லை சுவாசம் என்னை அழிக்க நினைத்து எய்தார் அம்பு தானாடாது போனாலும் தசையாடுமென்பார் அவர் என்னை அழிக்க நினைத்தபோதும் அன்பு கவசமாய் நின்று காத்த கதைகூறும் -சங்கர சுப்பிரமணியன். a