கவிதைகள்
சங்கமும் சந்தையும்!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
சங்கமென ஒன்றைச் செய்தார்
சகலரும் ஒன்றாய்க் கூடிநிற்க மொழிச்சங்கம் கண்டவருமிங்கு சாதிச்சங்கம் சேர்த்து கண்டார் மொழிச்சங்கத்தால் சேர்ந்தவரோ சாதிச் சங்கத்தாலே பிளவுபட்டார் ஒரு சங்கத்தால் இங்கு சேர்ந்தவரே மற்றொன்றாலே தனித்தே நின்றார் சந்தை என்று ஒன்றும் கண்டார் அங்கும் மக்கள் ஒன்று சேர்ந்தார் ஆடு மாடு பொருட்கள் யாவுமங்கே விற்று வாங்க நல்வழிகள் கண்டார் சங்கமதைக் கண்டவனும் மாந்தன் சந்தையைக் கண்டவனும் மாந்தன் நீதியை எடுத்துரைத்தவனும் மாந்தன் நீதியை தடம்மாறச் செய்தவனுமவன் சந்தயிலே சங்கம் கண்டுவிட்டான் சங்கமதை சந்தையாக்கி விட்டான் ஒன்றாயிருந்து மொழிவளர்த்தல் விட்டு தனித்தனியாய் சந்தை செய்துவிட்டான் எருது நான்கும் ஒன்றாயிருந்த வேளை சிங்கம் எதுவுமே செய்வதறியாது நிற்க எருதுகள் பிளவுபட்டு நின்றது கண்டே ஏற்றமொடு வேட்டையாடி வென்றதுவாம் இந்நீதி படித்த மண்ணில் வாழ்ந்தவரே மாண்பை மற்றவர்க்கு சொன்னவராம் மரபு மாறித் தனித்தனியே நிற்கலாமா சங்கம் வேறு சந்தை வேறு அறிகிலரோ! -சங்கர சுப்பிரமணியன்.