கவிதைகள்
தமிழா நீ வாழ்க!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
செவியில் இனிமையாக விழும் ஒலி
அதுவன்றோ குயில் எழுப்பும் இசை இயற்கையிலன் இலவசம் அவ்விசை கண்களுக்கு விருந்தளிக்கும் ஆடல் மயில் தோகை விரித்தாடும் ஆடல் பணம் கேட்காது தனதாடலுக்கு மயில் உயிர்வாழ மூச்சுவிடக் காற்று உதவம் இயற்கை நாம்வாழ அளித்த நற்கொடை அதுவும் விலையான மருத்துவமனை தாகம்தீர்க்க தடையின்றி கிடைத்த நீர் தருவதோ மழையால் இயற்கைத் தாய் அதையும் விலங்கிட்டு அடைத்த மனிதர் மழழை தொடங்கி மாயும் வரை தமிழ் மந்திரம்போல் என்னை மயக்கிய தமிழ் அதுவும் பலதோற்றமதில் விலையானது தமிழுக்கு நிகரான ஒன்றென்றாலது தாய் அந்தத் தாயையும் காலம் வாடகைக்குதர தமிழ்த் தொண்டும் விற்பனையானதும் ஏன் படைப்பையெலாம் பணமாக்கும் மனிதா நாம் உயிரென நினைத்திடும் தமிழையும் பணமாக்கும் வித்தைகண்ட தமிழா வாழ்க! -சங்கர சுப்பிரமணியன்.