சங்கமம்
கோலி சிறப்பாக செயல்படாத நிலையில் அவருக்காக இளம் வீரர்களை வெளியே வைத்துக்கொண்டு இருக்க முடியாது – கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ‘ஒரு அணியில் களம் இறங்கும் வீரர்கள் யார் என்பதை அவர்களின் தற்போதைய பார்மை வைத்து முடிவு செய்ய வேண்டும். அதனை விடுத்து புகழ் பெற்ற வீரர் என்ற அடிப்படையில் வாய்ப்பு அளிக்கக்கூடாது. அணியில் நீங்கள் முன்னணி வீரராக இருக்கலாம், அதற்காக தொடர்ந்து 5 போட்டியில் மோசமாக ஆடினால் வாய்ப்பு அளித்து கொண்டு இருக்க முடியாது.
விராட்கோலியின் ஆட்டம் பழைய மாதிரியில்லை. விராட்கோலி தொடர்ந்து ரன் எடுக்காமல் சொதப்பும் நிலையில் அவருக்காக இளம் வீரர்களை வெளியே வைத்து கொண்டு இருக்க முடியாது. விராட்கோலியும் தான் ஒரு முன்னணி வீரர் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியமாகும்’ என்று கூறினார்.