கவிதைகள்
மாமனிதன்!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
சமூகச் சீர்திருத்தம் என்பான்
சாதிக்கொரு சங்கம் வைப்பான் இறைவன் ஒருவன் என்பான் ஆளுக்கொரு இறைவன் செய்வான்அன்பாய் இருக்க அறிவுறுத்துவான் அவனே அன்பெனில் என்ன என்பான் யாரையும் மறந்தும் புகழ்ந்திட மாட்டான் யாவரும் தன்னை புகழ எதிர்பார்ப்பான்
எவரும் தன்னைப் புகழா நிலைகண்டு தன்னைப் புகழ்ந்து தற்பெருமை கொள்வான் விருந்தோம்பல் பற்றி விளக்கிடுவான் விருந்து புறத்திருக்க உண்டு மகிழ்வான்
ஆண்டவன் உண்டியலில் கொட்டுவான் அண்டியவரிடம் நன்றாய் சுரண்டுவன் பெண்ணுரிமை பற்றி பீற்றித்திரிவான் பெண்ணடிமை செய்வதில் திளைப்பான்
ஆறடி நிலமே நமக்கு சொந்தமென்பன் அடுத்தவர் நிலமெல்லம் ஆக்கிரமிப்பான் பொன் பொருள் நிலையற்றதென்பான் பொன்னையும் பொருளையும் சேர்ப்பான்
எதுவும் நிலயற்றதென தத்துவம் சொல்வான் எல்லாமும் தனக்கென பேராசை கொள்வான் இத்தனையையும் நமக்கு சொல்பவன் எதையும் பின்பற்றாத அவனே மாமனிதன்! -சங்கர சுப்பிரமணியன்.