Featureஇலக்கியச்சோலை

தெரிந்தாலும் தெளிவோம். உலகத்தில் எங்கள் தாய்மொழியின் சிறப்பு!

ஆக்கம்:-
“குடில்”பத்திரிகையின் ஆசிரியர்.
திருவாளர் ஞானம் சங்கரன்,
நெதர்லாந்து.
தெரிந்தாலும் தெளிவோம்.
உலகத்தில் எங்கள் தாய்மொழியின் சிறப்பு.
உலகநாடுகள் மனித நேயத்தோடு,ஒற்றுமையாக இயங்கு நிலையில் செயல்படுவதற்காக உலக நாடுகளால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை. இதற்கு ஐநா சபை என்பது சுருக்கமான தமிழாகும்.
இந்த ஐநா சபையின் முகப்பு வாசலில்
எழுதப்பட்டுள்ள ஒரே ஒரு சொல்லியம்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்ற
தமிழ்ச் சொல்லியம்.இதை படைத்தவர்
கவிஞர் கணிகன் பூங்குன்றனார்.இதைவிட பெருமை எந்த
மொழிக்குண்டு.
மேலும் தமிழ் மொழியின் சிறப்புகள்.
ருசியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் வாசலிலும் தமிழ்
சொல்லியமான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எழுதப்பட்டுள்ளது.யப்பானில் உள்ள பல்கலைக்கழக வாசலில் சங்கத்தமிழின் பாடல் வரிகளை எழுதிவைத்துள்ளனர்.சீனாவில் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலம்
வானொலி நிகழ்வு தமிழில் நடைபெறுகின்றது.
அமெரிக்காவில் உள்ள “பிலடெல்பியா” என்ற அருங்காட்சியகத்தின் நுழைவாசலில் “கற்றது கைமண்ணளவு”
என்ற சொல்லியம் பொறிக்கப்பட்டுள்ளது.
யெருசலம் என்ற நகரிலுள்ள ஒலிவ மலையில் இயேசு கற்பித்த வழிபாட்டு கருத்துக்களை அறுபத்து எட்டு மொழிகளில் எழுதி வைத்துள்ளனர். அதில் எமது தாய்மொழியும் ஒன்றாகும்.
நயகரா நீர்வீழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்கும் வரவேற்புத் தளத்தில் எழுதப்பட்ட ஆறு மொழிகளில் தமிழும் ஒன்று.
அமெருக்கா, பயணீர்4 என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.செவ்வாயில் மனிதன் வாழ்ந்தால் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஐந்து மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.
ஆபிரிக்காவின் செனகல் நாட்டில் தாக்கர் பல்கலைக்கழகம் தமிழை
செம்மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் இரண்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. சேர்மனியிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் ஐம்பது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நூல்கள்
அங்குள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
ரசியாவில் அணுகுண்டாலும் அழிக்கப்படாமல் பாதுகாக்கும் சிறப்பு விடயங்களில் திருக்குறள் தமிழ்நூலும் ஒன்றாகும்.இவ்வாறு தாய்மொழியின் சிறப்பு தமிழர்களுக்குத் தெரியாமலேயே
மேலும் பல நாடுகளிலும் சிறப்புற்று விளங்குகின்றது.

நன்றி….

“இலக்கு”
முகநூல் பத்திரிகை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.