கவிதைகள்

மாப்பாண முதலியார் யாழ்ப்பாணச் சொத்து!…. ( அஞ்சலிக் கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

குடையோடு வருவார் குனிந்தபடி நடப்பார்
குறையில்லா நல்லூரை கொண்டுமே வந்தார்
எளிமையாய் இருப்பார் இறைவனை நினைப்பார்
எல்லோர் மனதிலும் நிறைகிறார் மாப்பாணர்
அடக்கம் அவரிடம் அடைக்கலம் ஆனது
அமைதியை விரும்பி அவருமே ஏற்றார்
ஓரமாய் நிற்பார் ஒதுங்கியே நிற்பார்
யாரையும் பாரார் நல்லூரானையே பார்ப்பார்

சத்தம் போடார் சட்டம் உரைக்கார்
சகலதும் சிறப்பாய் நடந்திடும் அங்கு
நித்தியம் பூசை நிமிடம் தவறாது
பக்தியாய் யாவும் பாங்குற நிகழும்

ஆளுமை என்பது அவரிடம் நிறைந்தது
ஆணவம் என்பது அகன்றுமே நின்றது

ஆண்டவன் சன்னதி அவரிடம் ஆனது
அந்தக் கந்தனும் ஆசியை அருளினான்
 

மாப்பாண முதலியார் யாழ்ப்பாணச் சொத்து
மனமெலாம் முருகனை இருத்தியே வைத்தார் 
நிறைவுடை வாழ்வை நிறைவுறச் செய்தார் 
நிமலனும் அவரை தன்னிடம் அழைத்தான் 

Loading

One Comment

  1. இவரது பரம்பரை ஓல்லாந்தார் காலத்தில் வாழ்ந்த டொன் ஜுவன் மாப்பாண முதலியார் என்பவர் , இவரே ஒல்லாநாதரின் உதவியுடன் இப்பொது இருக்கும் இடத்தில் கோவிலை கட்டியவர் . கவிதை முருகன் சேவைக்கு இவருக்கு எழுதிது மிக அருமை 0 பொன் குலேந்திரன் , அரசடி நல்லூர் யாழ்ப்பாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.