கவிதைகள்
தொல்லையின்றி துலங்கும் நாள்…?…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
சில்லென்று ஓடிவருகிற பூங்காற்றும்
சேற்றில் மிதந்தாடும் செந்தாமரையும்
முத்தழகாய் முறுவலிக்கும் புன்சிரிப்பும்
எத்தனை நாள் உணர்ந்தாலும் இன்பம்
கல்லினுள் மறைந்திருக்கும் சிற்பமும்
சொல்லிடைஒழிந்திருக்கும் தமிழழகும்
வில்லினலே பூட்டிநின்ற கூரான அம்பும்
எல்லைகாண வேண்டின் தானாய் வருமா
கைகளிலே குலங்கியாடுகின்ற வளையும்
கால்களில் முத்தமிட்டு செல்லும் கொலுசும்
கண்களிலே துள்ளி ஓடுகின்ற கயல்விழியும்
மண்ணிலே வாழும்வரை மனதிலும் பதியும்
காடுவெட்டி கழனிதிருத்தி காலம் போச்சு
வீடுவிட்டு வாழ்வுக்கு வெகுதூரம் வந்தாச்சு
நாடு நடப்பு நற்செய்தி யாவும் என்ன ஆச்சு
தேடுகின்ற நம் உறவு யாவும் கானல் நீராச்சு
பனை மரத்தில் கள்ளிறக்கி குடித்த நாளும்
பாவடை தாவணி பவணிவந்த தெருவழகும்
பல்லக்கிலே பகவதி வலம்வந்த பொழுதும்
தொல்லையின்றி துலங்கும் நாள் வருமோ?
-சங்கர சுப்பிரமணியன்.