கவிதைகள்
மேதினியில் தமிழர் நிலையுணர்த்த!… (கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
மேய முடியாமல் நல்ல வேலிகட்டினாரே
மேன்மையான நம் பண்பைக் காக்கவே
மேய்ச்சல்காரன் எண்ணம் தகர்த்திடவே
மேலான இதுபோன்று படம் வந்துதவுமே
அண்ணன் அக்கா தம்பி தங்கையர்களே
பேரன்புகொண்ட பெரியோர் யாவருமே
தமிழினத்தில் பற்றுகொண்ட அனைவரும்
முறையான வழியிலே படத்தை பாருங்கள்
நம்மினம் இழிமையுறும் படம் இனியெதற்கு
ஆடையின்றி நமைக்காட்டும் அவலமாகவே
நாம் உணர்ந்தே விழித்திடவும் மாட்டோமா
நாம் இனி அத்தகு படமதை தவிர்ப்போமா
நம்மைவைத்து நம்கண்ணை குத்துவதறியா
நயவஞ்சகமறியா மூடரா நாம் சொல்வீர்
நயவஞ்சகத்தால் பாழ்படுத்தும் நரிகள் ஓட
நல்லபடங்கள் இதுபோல்வர மாறிடுவோமே
மேதகு என்றாலே நம்மில் மேன்மை கூடுமே
ஏதுமிலாது நின்ற நிலையும் இனியும்வராதே
ஆதலினால் சொல்கிறேன் அன்புறவுகளே
மேதகு படம்போல் வரவே ஈகைசெய்வீரே!
-சங்கர சுப்பிரமணியன்.