வாயுபகவானே காத்திடுமையா!… ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
பறக்குது பார் பறக்குது பார்
பறக்குது பார் இங்கே
நாடுவிட்டு நாடு நலமுடனே போக
பறக்குது பார் பறக்குது பார்
பறக்குது பார் இங்கே
பறக்கும்போது வாயுபகவான் தடைவராமலே
வானமதில் நல்லமுறையில் பறந்து போகவே
விமான ஓட்டிகளின் உடல்நலமாய் இருக்கவே
பயணிகள் யாவரும் பத்திரமாய் கீழே
இறங்கவே
நடந்ததுவே நல்ல முறையில் பூஜை யாவுமே
இனிமேலும் இதுபோன்ற பழக்கம் தொடரட்டும்
ஆலயத்தை விமானநிலையம் எங்கும் கட்டுவோம்
பறக்கும்முன் விமானங்கள் அங்கு செல்லட்டும்
பூஜைகள் முடிந்த பின்னே வானில் பறக்கட்டும்
நல்ல காலம் நமக்கு இப்போது பிறந்துவிட்டது
நம் விமானங்கள் வானிலே நன்றாய் பறக்க
போகுது
பகுத்தறிவை மூட்டையாக்கி பாடை கட்டுங்கள்
பஞ்சாமிர்தத்தையும் விமானத்தில் சேர்த்து வழங்குங்கள்
இடுப்பில் பட்டையை மாட்டுமுன்னரே
இறைவனை துதிக்க ஒரு பாட்டு போடுங்கள்
விமானம் மேல்நோக்கி ஏறிடும் போது
எல்லா பயணிகளும் இறைவன் புகழ்பாட
சட்டமேற்றுங்கள்!
-சங்கர சுப்பிரமணியன்.