செத்தல் மிளகாய் விற்கும் அழகி!…. ( கவிதை ) …. வள்ளிமகன்.
செத்தல் மிளகாய் விற்கும் அழகியே
உன் கண்பட்டு பின் கைபட்ட
மிளகாயும் தேனினிப்பாகியதாமே
உன்னிடம் மிளகாய் வாங்கியோர் பலர்
ஒன்றை எடுத்து வாயில் போட்டு சுவைக்க
இனிப்போ இனிப்பென்று இனிப்பது கண்டு
என்ன இது காரமிளகாய் இனிக்குதே -என
மேலெழுந்த நெற்றிச் சுருக்கம் வியப்புக்குறியாக
அவளுக்கு மிளகாய் விற்ற விவசாயி
தன்னிடம் வைத்திருந்த
இன்னொரு மூட்டையொன்றில் எடுத்தொரு
மிளகாயைக் கடிக்க ‘மகே அம்மே’ என்று
காரத்தால் கத்த சிங்ளத்தழகி கை என்ன
மந்திரக் கையோ என அவனும் வியக்க
வாங்கியே பலரும் சுவைத்தனர்
அவள் கைப்பட்ட மிளகாயின் விதை எடுத்து
நட்டவர் தோட்டங்களில் இனிப்பு மிளகாயும்
இலங்கையில் இனிப்பு மிளகாய் பயிராகியது
தேநீருக்கும் கோப்பிக்கும் கடித்துக் குடிக்கும்
சக்கரை, பனம்பனங்கட்டி,கித்தூள் பனங்கட்டி போலானது
அதுவே பின்னர் கொறி தீனியாகியது
சாப்பிடும் மிளகாய்த்தூள் காரமென்றால்
இனிப்பு மிளகாயைக் கடி என்றாகியது வாழ்வு
ஒல்லாந்தும் இஸரேலும் சீனாவும் விவசாயத்தில் சாதிக்காத
விவசாய விந்தையை தன்கைபடச் செய்து
சாதித்து காட்டினாளே
(අපේ ලස්සන තරුණ සිංහල කාන්තාව)
எமது சிங்கள இளமழகி