ராஜாவின் குள (ல)த்து தாமரை மொட்டுகள்!… ( கவிதை ) …. பொன் குலேந்திரன்… கனடா.
ஒரு ராஜாவின் தோட்டத்தில்,
ஒரு தாமரைக் குளம்.
அந்த குளத்தில் ஐந்து தாமரை மொட்டுகள்.
சிவப்பு நிற உரத்தில் வளர்ந்தன மொட்டுகள்
அதோடு சேர்ந்தன சில மொட்டுகள் உரம் தேடி
ராஜாவின் குளத்தில் புத்தரை வணங்கும்ஒரு மொட்டு
புத்த தர்மத்தை அறியாது பழி வாங்கும் அந்த மொட்டு
மற்றொரு மொட்டோ இரு குளங்களில் பூக்கும் மொட்டு
மொட்களில் பெரிய மொட்டு எவரையும் கவராத மொட்டு
குளத்திள் உள்ள சின்ன மொட்டு தீராத விளையட்டு பிள்ளை
செண்டில் உள்ள சில மொட்டுகள் ஓன்று சேர்ந்தன.
கிடைத்த உரம் தமக்கு பற்றாது என்று வீரம் பேசியது ஒரு மொட்டு
நீலத் தாமரை மொட்டு தன் மேல் வீண் பழி என்றது
உரத்தை பகிரு என்றது சில மொட்டுகள்
தோன்றின குளத்தில் பெரும் எதிர்ப்பு அலைகள்
குருவினர் கொதித்து எழும்பினர்
எமாற்றிய மொட்தகள் ஓன்று சேர்ந்தன
மக்கள் எதிர்க்க முன் செநண்டில் இருந்து பிரிந்தன,
கஜானாவில் உரம் குறையத் தொடங்கிற்று
உரத்துதுக்கு கடன் பல வாங்கினார் ராஜா
அதில் ஒரு பங்கு ராஜா குடும்பத்துக்கு
ராஜா மஹா ராஜ ஆவதை எதிர்த்தனர் மக்கள்
கொதிந்து எழுந்தன் எல்லா இன மொட்டுகளும்
தோன்றியது செண்டுக்குள் பிரிவு
சிக்கி தவிககிறது தேசம்
சொர்க்க பூமி சோக பூமி ஆகிறது
மொட்டுகள் வாடத் தொடங்கின
அன்னப் பட்சிக்கு ஆனந்தம் ஆனந்தம்
வீட்டில் வசிப்பவர்களுக்கு சந்தோசம்
சிறு மொட்டுகளுக்கு ஒரே மகிழ்ச்சி
லங்கா தேவியோ கண்ணீர் விடுகிறாள்
அரசியல் மொட்டுகளின் நடத்தையைப் பார்த்து
என்று மாறும் தாமரைக் குளத்து மொட்டுகள்
எத்தனை காலம் தான்
மக்களை ஏமாற்ற முடியும்
ஆரம்பத்துக்கு ஒரு முடிவு உண்டு
****
(இது பொன்னின் ஒரு அரசியல் கவிதை )