என் தம்பி ஒரு மாவீரன்!…. பொன் குலேந்திரன் – கனடா.
ஈழத்து மாவீரர்கள் மறக்க முடியாத
ஈடில்லா தமிழ் இனத்தின் தியாகிகள்.
சிங்கள இராணுவத்தினரை போல்
சம்பளத்தை எதிர் பார்த்து போர் புரியாதவர்கள் .
என் தம்பி படிப்பில் சூரன் .
எல்லா பாடங்களிலும் ஏ பெறக் கூடியவன்
வைத்தியரராக வேண்டும் என்று,
விடாமல் சிரமப் பட்டு படித்தவன் .
அவன் எழுதிய பரீட்சையின் முடிவில்,
அவனுக்கு கிடைத்து சிறந்த சித்திகள் .
எதிர்பார்த்து நின்றான் வைத்திய கல்லூரிக்குள் புக.
ஏமாந்து போனான் என் தம்பி தரப்படுத்தலினால்.
எப்படி வரும் அவனுக்கு நாட்டுப் பற்று?
ஏமாற்றும் சிங்கள அரசு இருக்கும் போது
இருப்பதோ அவனுக்கு ஒரு அக்கா .
இல்லற வாழ்க்கைக்கு தம்பியை நம்பினவள்.
தம்பி நீ யோசிக்காதே எண்டை ராசா
தெண்டித்துப் பார் அடுத்த வருஷம்.
எத்தனை முறை பரீட் சை எழுதினாலும்
எனக்கு கிடைக்காது மருத்துவக் கல்லூரி அக்கா.
அப்ப என்ன உன் முடிவு தம்பி.
அதையும் எனக்கு நீ கொஞ்சம் சொல்லு
தீர்மானித்து விட்டேன் என் அக்கா
தமிழன் உரிமைக்கு நான் போராட..
போரா. பேனாவா ? என்று சிந்தித்தேன்.
பதில் கிடைத்தது தமிழன் உரிமைக்கு போராடு என்று
பயிற்சி பெற்றான் என் தம்பி கெரில்லா போரில்
பல இராணுவத்தினரை சுட்டுக் கொன்றான்.
தவளைப் பாச்சலில் பங்கு கொண்டான் என் தம்பி
தயங்காமல் நின்று தாவி போரடினான்.
எதிரிகள் பலரை கொன்ற பின்.
என் த,ம்பி மாவீரனாய் சாய்ந்தான் ஈழ மண்ணில் .
மாவீரர் நினைவேந்தலில் அவன் பெயரும் உண்டு..
மங்காது சுடர் விட்டு எரிகிறது தீப ஒளி