கவிதைகள்
என்றும் வாழ வாழ்த்தி நிற்பேன்!… சங்கர சுப்பிரமணியன்.
ஐந்ததும் ஆறும் கூட்டி வந்த ஆண்டில்
எந்தையும் தாயும் பேசிய பழகு தமிழில்
தந்தாய் எல்லாம் படித்திட நம் மொழியில்
வந்தாய் அக்கினிக்குஞ்சே இணையமதில்
உற்று இவ்வுலகை ஒருநொடி நோக்கின்
தொற்றால் தலைகீழானது உலக சழற்சி
அற்றொன்றும் போகாது போனதுன் ஓட்டம்
முற்றாக முன்னேறி தடம்பதித்து சென்றாய்
எந்த சுழற்சிக்கும் ஒரு விசை வேண்டும்
அந்த விசைதான் இங்கு அன்பர் பாஸ்கர்
வந்த தடை எதுவானாலும் உடைத்திட்டார்
அந்ந நிகழ்வே அக்கினிக்குஞ்சின் ஓட்டம்
ஒன்றாய் இருப்பதை நூறாய் மாற்றிவிடும்
உன்னத வித்தையை பாஸ்கர் எங்கு கற்றார்
பன்னாட்டு செய்தி தொட்டிங்கு பற்பலவும்
முன்னின்று முனைப்பொடு வர வழிசெய்தார்
பதினோறாமாண்டில் தடம் பதித்ததுபோல்
பதித்திட இன்னும் பற்பல ஆண்டுகளுண்டு
இதுபோதும் என்றநிலை வாராதென்றாகிட
அதபோல் என்றும் வாழ வாழ்த்தி நிற்பேன்!
-சங்கர சுப்பிரமணியன்.