பலதும் பத்தும்

இலங்கையின் மிகப்பெரிய லாட்டரி பரிசு – வென்ற அதிஸ்டசாலி யார்?

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய லாட்டரி பரிசு வென்றுள்ளதாக அரசு தொலைக்காட்சியான ஐடிஎன் தெரிவித்துள்ளது.

கோகரெல்ல பகுதியைச் சேர்ந்த லாட்டரி முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலாவால் விற்கப்பட்டது

இச்சீட்டானது மெகா பவர் டிரா எண் 2210க்கான வெற்றிச் சீட்டு, ரூ. 474,599,422 பெரும் பரிசுடன் கூடியது.

மெகா பவர் லாட்டரியின் கீழ் தான் இந்த சீட்டு விழுந்துள்ளது.ஆனால்  முன்னதாக, பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச லாட்டரி வெற்றி ரூ. 230 மில்லியன் ஆகும்.

இது இப்போது ஒரு அளவுகோலை மிஞ்சியுள்ளது.

எனினும் லாட்டரியின் வெற்றியாளர் யார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button