பலதும் பத்தும்

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு AI மூலம் புதிய சிகிச்சை.!

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நம்பிக்கை தரும் புதிய AI தொழில்நுட்பத்தை கொலம்பியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

விந்து செல்களே இல்லை என்று கருதப்பட்ட ஆணுக்கு AI தொழில்நுட்பம் மூலம் குழந்தை பிறக்க வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் மலட்டுத்தன்மை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘Sperm Track and Recovery’ என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பு விண்வெளியில் நட்சத்திரங்களை தேடும் AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதிவேக கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன், கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு மறைந்திருக்கும் செல்களையும் இது கண்டுபிடிக்கிறது.

பின்னர் ரோபோடிக் அமைப்பின் மூலம் அவை பாதுகாப்பாகப் பிரித்தெடுக்கப்படுகின்றன.

இந்த முறையை பயன்படுத்தி ‘கிளைன்பெல்டர் சிண்ட்ரோம்’ பாதிக்கப்பட்ட ஒருவரின் மாதிரியில் இருந்து 8 விந்து செல்கள் கண்டறியப்பட்டன.

அவற்றில் ஒன்றை பயன்படுத்தி அவரது மனைவி தற்போது கருவுற்றுள்ளார்.

இந்த குழந்தை, இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பிறக்கும் உலகின் முதல் குழந்தையாக இருக்கும்.

உலகளவில் பல ஆண்களை பாதிக்கும் ‘அஸோஸ்பெர்மியா’ பிரச்சனைக்கு இது ஒரு முக்கிய தீர்வாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி கட்டத்தில் இருப்பதால், முழுமையாக பயன்பாட்டுக்கு வர மேலும் பரிசோதனைகள் தேவைப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button