கிளிநொச்சி வைத்தியசாலையை உடன் மத்திய அரசிடம் வழங்கவும்; அதற்கு முழுமையான ஒத்துழைப்பு -அர்ச்சுனா

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை உடனடியாக மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்குவேன் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கரைவலை மீனவர்கள் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.அடுத்த கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.அவ்வாறு எடுக்கப்படுப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் வழங்குவேன்.
கிளிநொச்சி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.என்னிடம் சில்லறை அரசியல் இல்லை.நாமல் மற்றும் ரோஹித்த ஆகியோருடன் ஒன்றிணைந்து மேடையேறிய போது இதனை கதைத்தேன்.இனியும் கதைப்பேன்.மக்கள் வாழ்ந்தால் போதும் என்றார்.
![]()